3/06/2018

சந்தி சிரிக்கும் நல்லாட்சி-நாடு முழுவதும் அவசர நிலை

இலங்கையில் சில இடங்களில் சிங்கள - முஸ்லிம் வன்செயல்கள் இடம்பெற்றதை அடுத்து நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


கண்டி மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து ஒன்றையடுத்து . இதை தொடர்ந்து வன்செயல்கள் ஆரம்பித்தன.


இலங்கையில் இரு குழுக்கள் இடையே மோதல்



7 முதல் 10 நாட்களுக்கு இந்த அவசர நிலை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
அதற்கு மேல் இந்த அவசர நிலை நீடிக்கப்பட வேண்டுமா என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்வார். ஆனால், அப்படி அது நீடிக்கப்படுவதற்கு நாடாளுமன்ற அங்கீகாரம் தேவைப்படலாம். 
பொதுவாக நிலைமை கட்டுக்கடங்காமல் போகும் போது சுமூக நிலையை உருவாக்கவே அவசரநிலையை அமல்படுத்துவது வழக்கம்.
ஆனாலும், இலங்கையில் தொடர்ந்த உள்நாட்டு போர், அதற்கு முந்தைய ஜேவிபி கலவரம் ஆகியவை காரணமாக 1978 முதல் 2009இல் போர் முடிவுக்கு வரும் வரை அவசர நிலை தொடர்ச்சியாகவே அமலில் இருந்து வந்துள்ளது.
அவசர நிலை அமலுக்கு வந்தால் ஜனாதிபதிக்கு மேலும் அதிகாரங்கள் வழங்கப்படும். கூடவே போலிஸாருக்கும் அதிகாரங்கள் அதிகரிக்கும்.
குறிப்பாக தேவைப்படும் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றியே கைது செய்து, குறிப்பிட்ட காலம் வரை அவரை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யாமல் போலிஸார் தடுத்து வைக்கமுடியும்.
தேவைப்படும் இடத்தில் துப்பாக்கி பிரயோகம் செய்யவும் போலிஸாருக்கு அதிகாரம் இருக்கும்.
பாதுகாப்பை பலப்படுத்த இராணுவத்தினரும் ஏனைய பாதுகாப்பு படையினரும் சேவையில் ஈடுபடுத்தப்படலாம்.
தேவையான இடங்களில் திடீர் சோதனைச் சாவடிகள்கூட அமைக்கப்படலாம்.

0 commentaires :

Post a Comment