சாதி மறுப்புத் திருமணமாகவும், சடங்கு மறுப்புத் திருமணமாகவும் நடைபெற்ற இந்தத் திருமணத்தின் மற்றுமொரு சிறப்பு மணமக்கள் இருவருமே மூன்றாம் பாலினத்தவர்கள்.
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஃபேஸ்புக் மூலம் தொடங்கிய நட்பு காதலாக மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்யாணிபுரம் எனும் கிராமத்தில் கடந்த 1988ஆம் ஆண்டில் தனது குடும்பத்தின் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தார் பிரீத்திஷா.
"ஆணாகப் பிறந்த நான் எனக்குள் இருந்த பெண்மையை உணரத் தொடங்கியபோது எனக்கு வயது 14," என்று பிபிசி தமிழிடம் கூறினார் திருநம்பி பிரேம் குமரன் உடன் தனது மண வாழ்க்கையைத் தொடங்கியுள்ள பிரீத்திஷா.
பள்ளியில் படிக்கும்போது மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய பிரீத்திஷா தற்போது தொழில் முறையாகவே ஒரு மேடை நாடகக் கலைஞராகவும் நடிப்புப் பயிற்றுநராகவும் உள்ளார்.
0 commentaires :
Post a Comment