2/26/2018

தமிழ்மொழிமூல பட்டதாரிகளது புறக்கணிப்பை கண்டுகொள்ளாத தமிழ் முஸ்லீம் அரசியல்வாதிகள்.

கடந்த 21.01.2018 அன்று கிழக்குமாகாணத்திலுள்ள அனைத்து வெற்றிடங்களுக்குமான நிதி அனுமதியை வழங்கும்படி ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினராகிய நாங்கள் மகஜர் ஒன்றினை கையளித்திருந்தோம். இதன் பிரகாரம் ஜனாதிபதி கிழக்கிலுள்ள 2000 ஆளணி வெற்றிடங்களுக்கான நிதி அனுமதியை வழங்குவதாக மாகாண சபைக்கு கட்டளையிட்டதுடன் அது தொடர்பான கடிதத்தை எமக்கும் அனுப்பியிருந்தார்.L’image contient peut-être : 4 personnes
ஆனால் கிழக்குமாகாண ஆளுனர் எதிர்வரும் 03.03.2018 அன்று 387 பட்டதாரி ஆசிரியர்களே உள்ளீர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. இவ் 387 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களும் அநீதியான முறையிலே வழங்கப்படவுள்ளது. இவ் நியமனத்துள் கிழக்குமாகாணத்திலுள்ள பெரும்பான்மையான தமிழ்மொழிமூல பட்டதாரிகளுள் குறைந்தளவு பட்டதாரிகள் உள்வாங்கப்பட உள்ளதுடன்இ சிங்கள மொழி மூல பட்டதாரிகள் அதிகளவானவர்கள் உள்வாங்கப்பட உள்ளனர்.
எனவே பெரும்பான்மையான தமிழ் மொழி மூல பட்டதாரிகள் உள்ள கிழக்கு மாகாணத்தில் நாம் புறக்கணிக்கப்படுவதை கண்டுகொள்ளாமல் தமிழ்  முஸ்லீம் அரசியல்வாதிகள் இருப்பதன் காரணம் என்னவோ? வேலையற்ற  பட்டதாரிகள் சங்கத்தினர் கேள்வியெழுப்புகின்றனர்.

0 commentaires :

Post a Comment