“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ அதிகம் பதற்றமடையத் தொடங்கியிருக்கிறார். உள்ளூராட்சித் தேர்தல் தோல்வி பற்றிய பயம்இ அவரை ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான்இ அவர் கண்டதையெல்லாம் பேசத் தொடங்கியிருக்கிறார்.” இவ்வாறு கூறியிருப்பவர் வேறு யாருமல்லஇ மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய முதல்நிலை அரசியல் எதிரியான மஹிந்த ராஜபக்ஷதான்.
மஹிந்த ராஜபக்ஷவின் இந்தக் கணிப்பை அவ்வளவாக யாரும்இ குறைத்து மதிப்பிட முடியாது. இதில் நிறையவே உண்மைகள் உள்ளன.
தான் தலைமை தாங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குஇ உள்ளூராட்சித் தேர்தலில் ஏற்படக் கூடிய தோல்வியைத் தவிர்க்க- தடுக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உச்சக்கட்ட முயற்சிகளை இப்போது முன்னெடுத்து வருகிறார்.
அதனால் தனக்கு முன்பாக உள்ள இரண்டு பிரதான எதிரிகளான ரணிலையும்இ மஹிந்தவையும் அவர் திருடர்களாக முன்னிலைப்படுத்தவும் தவறவில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே தன்னை ஜனாதிபதியாக்கினார் என்ற நன்றியுணர்வையோஇ அவருடன் சேர்ந்தே கூட்டு அரசாங்கத்தை நடத்துகிறேன் என்ற கூச்ச உணர்வோ இல்லாமல்இ திருடர்களாக விமர்சிக்கும் அளவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீழ் இறங்கியிருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய உரைகளை எடுத்துப் பார்த்தால் குழப்பம் நிறைந்ததாக இருப்பதை அவதானிக்கலாம். முன்னுக்குப் பின் முரணாகவும்இ நடைமுறைக்குப் பொருத்தமற்றதாகவும் அவர் பலவேளைகளில் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.
0 commentaires :
Post a Comment