2/06/2018

ஆரையம்பதியில் தோல்வியை எதிர்கொள்ளும் தரப்பினரால் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி வேட்பாளர் தாக்கப்பட்டுள்ளார்

ஆரையம்பதி தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இரண்டாம் வட்டார வேட்பாளர் சிவசுந்தரம் அவர்கள் மீது நேற்றையதினம் அவரது வட்டாரத்தில் கூட்டத்தினை நிறைவு செய்து வீடு திரும்பும்போது வீதியில் இரவு 11மணியளவில் வீதியில் மறித்து தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. L’image contient peut-être : une personne ou plus et personnes assises

சிவசுந்தரம் அவர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி ஆரையம்பதியில் வெற்றி பெற்றுவிடும் என்ற பயத்தினால் மிக கோழைத்தனமான கேவலமான அரசியலை சிலர் முன்னெடுக்கின்றனர். ஆரையம்பதியில் தோல்வியை எதிர்கொள்ளும் தரப்பினரால் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி வேட்பாளர்கள்  தாக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.மூன்று வாரங்களுக்கு முன்னரும்  தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி சார்பிலான மற்றுமொரு வேட்பாளர் தாக்குதலுக்குள்ளானது தெரிந்ததே.


0 commentaires :

Post a Comment