நேற்று(03.02.2018) இரவு TELO கட்சியின் சார்பாக தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக பிரதேசசபை தேர்தலில் முனைக்காட்டில் களம் இறங்கியுள்ளவர் மதுபானங்களை பகிர்ந்தளித்துள்ளார்.
எந்த கட்சியாயினும் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தினையே நாம் விரும்புகிறோம். எமது இனம் அரசியல் அனாதைகளாக ஆக்கப்பட்டமை இத்தகு தூய்மையற்ற அரசியல் வாக்கு கொள்ளைகளாலேயன்றி வேறெந்த காரணமும் இருக்கமுடியாது.
எம்மினத்தை விட எமது சகோதர இனங்களில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்துடன் வலுமிக்க அரசியல் சக்திகளை தம் மத்தியில்கொண்டுள்ளமை அவர்கள் இவ்வாறான தரங்கெட்ட அரசியல் பிரச்சாரங்களை புறக்கணித்திருப்பதனாலேயாகும்.
மக்களுக்கான தனிப்பட்ட உரிமைகொண்ட வாக்குரிமையை மதுபானங்களையும், பணங்களையும் வழங்கி வாக்குகளை கொள்ளையிடுபவர்களால் எந்தவிதத்திலும் மக்களுக்கான தூய சேவையை எவ்வாறு வழங்க முடியும்?????
ஜனா ஐயா அவர்களே!!! உங்களது கட்சி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளவர் எமது விடுதலைப் போராட்டத்தினை உயிரினும் மேலாக நேசித்த பெரும் வீரர். அவர் மூலமாக இவ்வாறான மதுபான கலாச்சாரத்துடன் கூடிய தேர்தல் நகர்வுகளை எம் மக்களிடையே திணித்து ஆரோக்கியமற்ற அரசியலுக்கு வழிகோலிவிடாதீர்கள்.
எனவே, எமது தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தக்கட்சியாயினும் எம் இனத்தின் நன்மை கருதி தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை வளர்க்க முன்வாருங்கள்.
0 commentaires :
Post a Comment