மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளது தொடர் சத்தியாக்கிரக போராட்டம் கடந்த வருடம் 21.02.2017 அன்று ஆரம்பிக்கப்பட்டு 155 நாட்கள் தொடர்ந்து இடம்பெற்றது.
தமது சத்தியாக்கிரகப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நாளும் வித்தியாசமான முறையில் வேலையற்றபட்டதாரிகள் தமது போராட்டங்களை நடாத்தி சமூகத்திற்கும், அரசாங்கத்திற்கும் தமது போராட்ட நியாயப்பாட்டினை வெளிப்படுத்தியிருந்தனர்.
இதன்படி, சவப்பெட்டி ஊர்வலம், பட்டச்சான்றிதல் பிரதி எரிப்பு, இரத்ததானம், கறுப்பு பட்டி, கறுப்பு உடை அணிந்த எதிர்ப்பு பேரணி, கறுப்பு கொடிகளுடன் மோட்டார் சைக்கிளில் பல்கலைக்கழக வளாகங்களுள் பேரணி, கொடும்பாவி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம், கழுத்துகளில் தூக்கு கயிறுகளை அணிந்து ஆர்ப்பாட்டம், கச்சேரி முற்றுகைப் போராட்டம், கடற்கரை ஓரங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி தமது நியாயங்களை வெளிப்படுத்தல், தமது பெற்றார், நண்பர்களுடன் வாக்கை புறக்கணிப்போம் என சத்தியப்பிரமாணம் எடுத்து போராடல் என பட்டதாரிகளது போராட்ட வடிவங்கள் பன்முக நிலைப்பட்டதாய் நிகழ்த்தப்பட்டிருந்து.
இத்தகைய போராட்டங்கள் தொடர்ந்தும் இடம் பெற்றிருந்தாலும் பட்டதாரிகளுக்கான நியமனங்கள் சார்ந்து அரசாங்கம் எந்தவித முன்னேற்றகர நகர்வுகளையும் எடுக்கவில்லை. இதன் விளைவாக தமது சத்தியாகிரக போராட்டகாலத்தில் எடுக்கப்பட்ட வாக்கு புறக்கணிப்பு தீர்மானத்தின்படி கடந்த சில நாட்களிற்கு முன்பு மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கம் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தாம் இவ் உள்ளூராட்சி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்காது "VIP" (VELAI ILLAA PADDATHARI) என வாக்குச்சீட்டில் எழுதி வாக்களிப்பை எதிர்க்கப்போவதாக தெரிவித்திருந்தனர்.
ஒட்டுமொத்த பட்டதாரிகளது இவ் தீர்மான வெளெப்படுத்தலின் பிரகாரம் கடந்த 10. 02. 2018 அன்று நடளாவிய ரீதியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பட்டதாரிகள் தமது பகிரங்க ஊடக அறிவிற்பின்படி வாக்கு புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய வாக்கு புறக்கணிப்பின்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் "VIP" என எழுதி புறக்கணிக்கப்பட்ட வாக்குகள் 1600 தொடக்கம் 1700 வரையானவை அளிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைத்துள்ளது.
0 commentaires :
Post a Comment