2/10/2018

பிரதமர் மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார்

வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.ஜோர்டான், பிரதமர் மோடி,Prime Minister Modi,  மோடி சுற்றுப்பயணம்,   Modi tour, பாலஸ்தீனம் ,Palestine,  பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் , Palestinian President Mahmoud Abbas,  மோடி பேச்சுவார்த்தை, Jordan, Modi talks,

ஜோர்டான், பாலஸ்தீனத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஜோர்டான் தலைநகர் அம்மான் சென்றடைந்தார். அங்கு ஜோர்டான் மன்னரை சந்தித்து பேச உள்ளார். இதனையடுத்து நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனம் செல்கிறார் மோடி.

பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாசுடன் ரம்மல்லா நகரில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள பிரதமர் மோடி, யாசர் அராபத் நினைவாக அமைக்கப்பட்ட அருங்காட்சியகத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளார். பாலஸ்தீனத்தில் இருநாடுகளுக்கு இடையே ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதியாக இருந்த போது பிரணாப் முகர்ஜி, 2015ம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதையடுத்து முதல் இந்தியப் பிரதமராக மோடி நாளை பாலஸ்தீனம் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.

0 commentaires :

Post a Comment