2/20/2018

உண்மைக்கு புறம்பாக அறிக்கை விடுவது யோகேஸ்வரனுக்கு புதியதல்ல-நா.திரவியம்.

தமிழர்கள் ஆட்சியமைப்பதில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நளுவல் போக்கை கடைபிடிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் விடுக்கப்பட்டுள்ள ஊடாக அறிக்கையானது, உண்மையை மறைத்து மக்களை திசைதிருப்ப மேற்கொள்ளும் சதி என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின்
பிரதித் தலைவர் நா.திரவியம், (ஜெயம்) தெரிவித்துள்ளார்
.L’image contient peut-être : 2 personnes, personnes assises
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க பத்திரிக்கை வாயிலாக அறிக்கை விடுத்துவிட்டு நிஜத்தில் நளுவல் போக்கை கடைபிடிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் விடுத்துள்ள ஊடக அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளபோதே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர் நா.திரவியம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


மிழர்களின் தாயகக் கோட்பாட்டை பாதுகாக்க ஆயுதம் ஏந்தி போராடி, மண் மீட்பிற்காக பல தியாகங்களைச் செய்தவர்களில் நானும் ஒருவன். அப்படிப்பட்ட நான் எப்படி கிழக்கில் தமிழரின் மண் பறிக்கப்படுவதனை வேடிக்கை பார்க்கப் போகின்றேனா? நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகளின் பின்னர் நானாகவே தமிழரசுக் கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் உள்ளிட்டவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ் பிரதேசங்களில் தமிழ் கட்சிகள் கூட்டிணைந்து ஆட்சியமைப்போம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தேன்.

ஆட்சியமைப்பதற்கான எந்தவிதமான விட்டுக் கொடுப்புக்கும் ஆயத்தமாகவுள்ளோம் எனவும் தெரிவித்திருந்தேன்.

குறிப்பாக வாகரை, வாழைச்சேனை, ஏறாவூர்பற்று, ஆரையம்பதி, போன்ற எப்போதும் பாரிய ஆபத்தினை எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்ற எல்லைப் பிரதேசங்கள் தொடர்பாகவும், தெளிவுபடுத்திருந்தோம். அதன் பின்னர்,
கடந்த 16.02.2018ம் திகதி மாலை 6.00 மணியளவில் வாழைச்சேனைக்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் சிநேகபூர்வமாக என்னை அழைத்தார். நானும் சென்று பேசினேன். வாழைச்சேனை, வாகரை, ஏறாவூர்பற்று பிரதேசசபைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைக்க வேண்டும். தவிசாளரை எமக்கு தாருங்கள். எம்முடன் பல கட்சிகள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் ஆதரவு வழங்காவிட்டால் நாம் எப்படியோ தவிசாளர் பதவியை பெற்றுக்கொள்ள மாற்று முடிவு எடுப்போம் என்றார். நான் மிகத் தெளிவாகச் சொன்னேன், எமது கட்சி சார்பில் உத்தியோகபூர்வமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளேன். தமிழர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் மிக உறுதியாக இருக்கின்றோம். யார் தவிசாளர் எந்தக்கட்சி எத்தகைய நிலைகளை எடுத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாகப் பேசுவோம். உங்களுடனான சந்திப்பை எமது கட்சியின் தலைமை பீடத்திற்குச் சொல்கின்றேன். நீங்களும் உங்களது கட்சியின் செயலாளர்,உயர் பீடத்துடன் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உத்தியோகபூர்வ சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனக் குறிப்பிட்டேன்.
ஆனால் இன்றுவரை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளரிடம் இருந்து எந்த விதமான சமிஞ்சைகளும் கிடைக்கவில்லை. பின்னர் நான் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சியமைக்க நீங்கள் தயாரா? இல்லையா? என தெளிவாக குறிப்பிடுங்கள் எனக்கேட்டேன். பொறுங்கள் தலைமைப் பீடத்துடன் கலந்துரையாடிவிட்டுச் சொல்கின்றேன் என்றார்.


தற்கிடையில் எந்தவிதமான உண்மைத்தன்மையுமற்ற நிலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரன் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மீது சேறுபூசும் விதமாக ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்தது. அவரின் அரசியல் நிதானமற்ற செயற்பாட்டை வெளிக்காட்டுகின்றது.
இதேபோன்றே 2015இல் கிழக்கு மாகாணசபை ஆட்சி அமைப்பது தொடர்பான கலந்துரையாடலின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சி.யோகேஸ்வரனே பிள்ளையானை இணைத்து ஆட்சி அமைக்க கூடாது என்பதில் முனைப்புடன் செயற்பட்டிருந்தார். உண்மைக்கு மாறாக அறிக்கை விடுவதென்றால் அவருக்கு அது புதிய விடயமுமல்ல எனவும் நாகலிங்கம் திரவியம் குறிப்பிட்டார்.

0 commentaires :

Post a Comment