1/24/2018

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.

நாளை தபால் மூலம்  வாக்களிக்கவுள்ள  கல்வியாளர்களே ஒரு நிமிடம் சிந்தியுங்கள்.Résultat de recherche d'images pour "vote"


*வடக்கில் கடந்த காலங்களில் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேச சபைகள் சாதிச்சண்டைகளின் மையமாக மாறி செயற்பட முடியாமல் சீரழிந்தமை, உங்களுக்கு ஞாபகமிருக்கின்றதா,?

*பாரிய சமூக பொறுப்புகளுடன் அமைந்த வடமாகாண சபையானது  கையாலாகாத முதலமைச்சரால் ஊழல் பெருச்சாளிகள் கூடாரமாக மாறி கட்சி சண்டைகளிலும் ஊழல் விசாரணை கமிசனுகளிலும் காலத்தை கரைத்தமை எவ்வளவு கேவலமானது?

*கிழக்கு மாகாண சபையில் முஸ்லீம் காங்கிரஸுடனான தமிழரசு கட்சியின் "இன நல்லுறவு அரசியல்" இருந்த நிலைமையையும் குழப்பியடித்து  கிழக்கில் தமிழ் மக்களுக்கு ஓர வஞ்சனை செய்து கிழக்கு தமிழர்களை அரசியல் அனாதைகளாக ஆக்கியதை மறந்து விட்டீர்களா? 

* கடந்த பாராளுமன்ற தேர்தலில்  தமிழரசு கட்சிக்கு தமிழ் மக்கள் வழங்கிய பேராதரவால்  கிடைத்த பதவிகளை வைத்து  கோடி கோடியாக சம்பாதித்த சுய லாப  அரசியலைத்தவிர தமிழ் மக்களுக்கென எவ்வித உரிமைகளையும் பெற முடியாத நடைபிணங்களாக மாறி மக்களின் இறைமையை பேரினவாதிகளிடம் தாரை வார்த்தமையை மன்னித்து விட முடியுமா?

*கடந்த ஜனாதிபதி தேர்தலில் நல்லாட்சி என்னும் மாயவித்தைக்கு மக்களை பலியாக்கி தமிழ் மக்களின் வாக்குகளை  வாரி வழங்க செய்த போதும் ஒரு சாராய குதத்தை மட்டக்களப்பில் உருவாக்கிய கேவலமான சாதனையை தவிர கிழக்கிலங்கை மக்களுக்கு வேறு எதை பெற்றுத்தந்தார்கள்? என்று சிந்தியுங்கள்,

அதன் பின்னர் வாக்களியுங்கள். 








0 commentaires :

Post a Comment