12/30/2018

கிழக்கிலிருந்து நிவாரண உதவிகள்

வட மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபையினால் மேற்கொள்ளப்பட்டு வந்த நிவாரண சேகரிப்பு பணிகள் இன்றோடு நிறைவடைந்துள்ளன.L’image contient peut-être : plein air
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் செயற்படும் பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள். வர்த்தக சங்கத்தினர், மட்டு தமிழ் இளைஞர் அமைப்பு, கூட்டுறவு சங்கம், கண்ணங்குடா சமூக அமைப்பினர், சிறுவர் அபிவிருத்தி நிதியம், எழுகதிர் ஏழைகளின் வாழ்வின் உதயம் அமைப்பினர், வவுணதீவு அபிவிருத்தி நிறுவனம் என்பன தாம் சேகரித்த நிவாரணப் பொருட்களை இன்று அரசாங்க அதிபர் , மற்றும் மாநகர முதல்வர் ஆகியோரிடம் கையளித்தனர் .
மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பங்களிப்பாக இவை நாளை காலை முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்படவுள்ளன. 
»»  (மேலும்)

12/28/2018

முத்தலாக் தடை

முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதை தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கும் சட்ட மசோதா இன்று (வியாழக்கிழமை) இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. Résultat de recherche d'images pour "islam  divorce india"
இந்த சட்ட மசோதா தொடர்பாக நடந்த வாக்கெடுப்பில் 245 பேர் ஆதரவாக வாக்களிக்க, இதற்கு எதிராக 11 பேர் வாக்களித்தனர்.
காங்கிரஸ், அதிமுக, சமாஜ்வாடி போன்ற முக்கிய எதிர்க்கட்சிகள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. இந்த சட்ட மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்த கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
»»  (மேலும்)

12/26/2018

மெரி கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்-* தோழர் பசீர் சேகுதாவூத்

L’image contient peut-être : 1 personne, sourit
 


*****"""""""***********************
மட்டக்களப்புத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ராஜன் செல்வநாயகம் என்ற கிறிஸ்தவருடன் இணைந்து எனது கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ராஜன் இன மத சாதி பேதங்களின்றி மட்டக்களப்புக்கு சேவையாற்றிய மனிதராகும். வெறும் பதினோராயிரம் மட்டக்களப்பு தலித் மக்களின் வாக்குகளால் 1970 ஆம் ஆண்டு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட இவர் பின்னர்; அக்காலத்தில் அரசமைத்திருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து சேவையாற்றினார். இந்த கிறிஸ்தவர் மட்டக்களப்பு படுவான்கரைக்கும், மாநகருக்குமிடையில் வலையிறவுப் பாலத்தை அமைத்து மட்டக்களப்பின் பொருளாதாரத்தில் புரட்சியைச் செய்தவராகும்.
மட்டு நகர் பேரூந்து நிலையத்துக்கு அருகாமையில் இவர் அமைத்த இராஜன் அரங்கின் பெயர்ப் பலகையை "இராஜன் அ(கு)ரங்கு" என்று அன்றைய தமிழ்த் தேசிய இளைஞர்கள் மாற்றி எழுதினர். கல்லடிக் கறுப்புப் பாலத்தில் 'காம இராஜன்' என்று சுண்ணாம்பினால் எழுதி ராஜனை அவமானப்படுத்தினர்.
ராஜன் செல்வநாயகம் தனது கழுத்தில் தொங்கும் சிலுவை மேசையில் கிடந்து புரள மக்களின் கோரிக்கையைக் கேட்பார்,முடிந்தவரை மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க உதவுவார்.
1957 ஆம் ஆண்டைய வெள்ளத்தின் போது பிரதமர் SWRD பண்டாரநாயக்கா காங்கேயன் ஓடைக்கு விஜயம் செய்தார். இந்நிகழ்வை மனதில் நிலை நிறுத்தியிருந்த ராஜன் முஸ்லிம் கிராமமான காங்கேயனோடையை தனது அபிவிருத்தி இலக்கின் மையங்களில் ஒன்றாக இணைத்துக்கொண்டார்.இக்கிராமத்துக்குப் பெயர் வரக் காரணமாயமைந்த மூன்று மாரப்பாலங்களையும் கற்பாலங்களாயமைத்தார்.1928 இல் கட்டப்பட்ட காங்கேயனோடைப் பாடசாலைக்கு 44 வருடங்களின் பின்னர் 1972 இல் 100 × 20 விசாலமான இரண்டாவது கட்டிடத்தைக் கட்டினார்.
நானும் எனது தந்தையாரும் எமது உழவு இயந்திரத்தை சேர்விஸ் செய்யவும் திருத்துவதற்கும் செல்வநாயகம் சேர்விஸ் சென்ரருக்கு கொண்டு செல்கிற போது ராஜனுடன் சுவாரசியமாகப் பேசுக்கொண்டிருப்போம்.
ஏனோ தெரியவில்லை இவ்வருட கிறிஸ்மஸ் சீசனில் ராஜனின் நினைவாகவே உள்ளது.
விரைவில் வருவதாக வாக்களித்துள்ள இயேசுவின் பிறப்பைக் கொண்டாடும் அனைத்து நண்பர்களுடனும் இணைந்து நானும் ராஜனும் உலக மாந்தரை வாழ்த்துகிறோம்.
நன்றி* தோழர் பசீர் சேகுதாவூத் 
»»  (மேலும்)

12/23/2018

இந்தோனீசியாவில் எரிமலை வெடிப்பால் உண்டான சுனாமி - 168 பேர் பலி


இந்தோனீசியாவின் சுந்தா நீரிணையில் ஏற்பட்ட சுனாமியில் குறைந்தது 168 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 745 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.இந்தோனீஷியா
உள்ளூர் நேரப்படி ஞாயிறு அதிகாலை இந்தப் பேரிடர் அங்கு நிகழ்ந்துள்ளது.
ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையில் அமைந்துள்ள சுந்தா நீரிணை ஜாவா கடலையும், இந்தியப் பெருங்கடலையும் இணைக்கிறது. இந்த நீரிணையில் அமைந்துள்ள க்ரகடோவா தீவில் இருக்கும் எரிமலை வெடித்ததால், நிலத்துக்கு அடியில் உண்டான சரிவுகள் சுனாமி பேரலைகளை உண்டாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
1883ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த க்ரகடோவா எரிமலை வெடித்துச் சிதறியதுதான், நவீன வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய எரிமலைச் சீற்றமாகக் கருதப்படுகிறது.
பன்தேக்லங், தெற்கு லாம்பங் மற்றும் சேராங் பகுதிகளில் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன.
இருவரைக் காணவில்லை என்றும் பல கட்டடங்கள் சேதமாகியுள்ளன என்றும் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது.
»»  (மேலும்)

இலங்கையில் கனமழையால் உண்டான வெள்ளம் - மிதக்கும் வடக்கு மாகாணம்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரண உதவிகளை வழங்குமாறு இலங்கையின் இராணுவத்தளபதி, வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கு ஜானதிபதி மைத்திரிபால சிறிசேன அவசர உத்தரவினை விடுத்துள்ளார்.இலங்கை
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் வெள்ளம் காரணமாக 13,646 குடும்பங்களை சேர்ந்த 44,959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
2661 குடும்பங்களை சேர்ந்த 8539 பேர் வெள்ளம் காரணமாக இடம்பெயர்ந்து 52 நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் வான்பாய்வதனால் அதனை அண்டியுள்ள பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
»»  (மேலும்)

12/21/2018

எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

பிரபல எழுத்தாளரும், விமர்சகருமான பிரபஞ்சன் இன்று காலை காலமானார்.  Prabhanjan passed away, Writer prabhanjan, Vaanam vasappadum,  எழுத்தாளர் பிரபஞ்சன், சாகித்திய அகாதமி விருது, வானம் வசப்படும், பிரபஞ்சன்  காலமானார், பிரபஞ்சன் மரணம் ,எழுத்தாளர் பிரபஞ்சன் மரணம் ,
 Sahitya Akademi Award,prabhanjan Death , Death of writer prabhanjan,
பிரபஞ்சன் ஏப்ரல் 27, 1945-ல் புதுச்சேரியில் பிறந்தவர். தமிழில் சிறந்த எழுத்தாளராகவும், விமர்சகராகவும் விளங்கியவர். வானம் வசப்படும், மகாநதி, மானுடம் வெல்லும், சந்தியா, காகித மனிதர்கள், கண்ணீரால் காப்போம், பெண்மை வெல்க உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.

வானம் வசப்படும் நூலுக்காக 1995-ம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றவர். மேலும், பாரதிய பாஷா பரிஷத் விருது, கஸ்தூரி ரங்கம்மாள் விருது, இலக்கியச் சிந்தனை விருது, சி.பா.ஆதித்தனார் விருது, தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசு, தமிழக சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான பரிசு உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும்-பரிசுகளையும் பெற்றுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாகவே புற்று நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபஞ்சன் இன்று காலமானார்.



»»  (மேலும்)

12/20/2018

வடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சரவை பதவியேற்றது.Résultat de recherche d'images pour "ranil and prabhakaran"
அந்த வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பல அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. இதில் முக்கியமாக வடமாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு ஆகிய துறைகளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். அக்டோபர் 26ஆம் தேதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தணிந்து ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
அமைச்சர்கள் விவரம்:
1. ரணில் விக்ரமசிங்க : தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடமாகாண அபிவிருத்தி, தொழில்பயிற்சித் திறன் அபிவிருத்தி, இளைஞர் விவகார அமைச்சர்
2. ஜோன் அமரதுங்க : சுற்றுலாத்துறை அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சர்
3. காமினி ஜயவிக்ரம பெரேரா : புத்தசாசனம் மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
4. மங்கள சமரவீர : நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சர்
5. லக்ஷமன் கிரியெல்ல : அரச தொழில் முயற்சி, கண்டி மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்
6. ரவூப் ஹக்கீம் : நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர்
7. திலக் மாரப்பன : வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்
8. ராஜித சேனாரத்ன : சுகாதார, போசணைகள் சுதேச மருத்துவத் துறை அமைச்சர்
9. ரவி கருணாநாயக்க : மின்சக்தி, சக்தி வலு மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர்
10. வஜிர அபேவர்த்தன : உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர்
11. ரிஷாத் பதிறுதீன் : கைத்தொழில், வாணிப அலுவல்கள் நீண்டகாலமாக இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர்
12. பாட்டலி சம்பிக்க ரணவக்க : பெருநகரங்கள், மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்
13. நவீன் திசாநாயக்க : பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
14. பீ ஹரிசன் : விவசாயம், கிராமிய பொருளாதாரம், பண்ணை வள அபிவிருத்தி, நீர்ப்பாசனம், மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர்
15. கபீர் ஹாசிம் : நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர்
16. ரஞ்சித் மத்தும பண்டார : பொதுநிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
17. கயந்த கருணாதிலக : காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு
18. சஜித் பிரேமதாச : வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
19. அர்ஜுன ரணதுங்க : போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர்
20. பழனி திகாம்பரம் : மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்.
21. சந்ராணி பண்டார : மகளிர், சிறுவர் அலுவல்கள், உலர் வலய அபிவிருத்தி அமைச்சர்
22. தலதா அதுகோரள : நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்
23. அகில விராஜ் காரியவசம் : கல்வி அமைச்சர்
24. அப்துல் ஹலீம் முஹம்மட் ஹசீம் : தபால் சேவைகள், முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர்
25. சாகல ரத்நாயக்க : துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்
26. ஹரீன் பெர்ணான்டோ : தொலைத்தொடர்பு, டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர்
27. மனோ கணேஷன் : தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர்
28. தயா கமகே : தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர்
29. மலிக் சமர விக்ரம : அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தகம், விஞ்ஞான, தொழிநுட்ப ஆராய்ச்சி அமைச்சர்

»»  (மேலும்)

12/19/2018

பொதுஜன பெருமுனவில் இணைந்த மஹிந்த, நாமல் மற்றும் ஏனையோர் பதவியிழப்பார்களா?


வை எல் எஸ் ஹமீட் (சட்ட முதுமாணி)  L’image contient peut-être : 1 personne, gros plan
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச மற்றும் சிலர் ஐ ம சு கூ இல் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்ட நிலையில் அண்மையில் பொதுஜன பெரமுனவில் உத்தியோகபூர்வமாக இணைந்திருந்தனர். இவ்வாறு இணைந்து ஒரு மாதம் பூர்த்தியாகவுள்ள நிலையில் அரசியலமைப்பின் சரத்து 99(13) இற்கமைய, ஒரு மாதமுடிவில் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளை இழந்துவிடுவார்கள்; என சில ஊடகங்கள் செய்திவெளியிடுகின்றன.
இது பிழையான தகவலாகும். கட்சிமாறுவதால் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் பதவி இழக்கமாட்டார். சரத்து 99(13) கட்சிமாறுபவர்கள் பதவியிழப்பார்கள்; என்று கூறவுமில்லை.
சரத்து 99(13) கூறுவதென்ன?
—————————————-
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ராஜினாமா செய்வதன்மூலமாகவோ, விலக்கப்படுவதன் மூலமாகவோ அல்லது வேறுவழியிலோ தான் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின்/ சு குழுவின் அங்கத்தவத்தை இழந்தால், அவ்வாறு இழந்து ஒரு மாதத்தில் அவர் தனது பாராளுமன்ற ஆசனத்தை இழப்பார்; என்று கூறுகின்றது.
அதேநேரம் கட்சியிலிருந்து விலக்கப்படுமிடத்து அந்த ஒரு மாதம் முடிவதற்குள் அவர் உயர்நீதிமன்றம் சென்று, உயர்நீதிமன்றம் விலக்கியது பிழை எனத் தீர்மானித்தால் அவரது பதவி பறிபோகாது; எனவும் கூறுகிறது.
இந்த சரத்துத்தான் இந்த குழப்பகரமான செய்தி உலாவருவதற்கு காரணமாகும்.
இந்த சரத்தை ஆழமாக கவனித்தால் எந்தவொரு இடத்திலும் ‘ கட்சி மாறினால் பா உறுப்பினர் பதவி ஒரு மாதத்திற்குள் பறிபோகும்; என்று இல்லை. மாறாக “ தான் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின்/ சு குழுவின் அங்கத்துவத்தை இழந்தால் ஒரு மாதத்திற்குள் பதவி பறிபோகும்;” என்றுதான் இருக்கின்றது.
இங்கு புரிந்துகொள்ள வேண்டியது “ கட்சி மாறுவது” என்பதும் “கட்சியின் அங்கத்துவத்தை இழப்பது” என்பதும் ஒன்றல்ல.
இந்த விடயத்தில் சரத்து 99(13) ஐ பாராளுமன்ற தேர்தல்கள் சட்டம் பிரிவு 64 உடன் சேர்த்து வாசிக்கவேண்டும்.
மேற்படி பிரிவு 64இன் படி பாராளுமன்ற செயலாளர் நாயகம் அரசியலமைப்பு சரத்து 66 மற்றும் 99(13) ஆகியவற்றில் ஒன்றின் பிரகாரம் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடம் ஏற்படும்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பார். அதன்பின் ஆணைக்குழு வெற்றிடத்தை நிரப்புவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இங்கு கவனிக்கவேண்டியது, பாராளுமன்ற செயலாளர்நாயகம் ‘ வெற்றிடம் ஏற்பட்டுள்ளது’ என்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்க வேண்டும்.
வெற்றிடம் இரண்டுவகையில் ஏற்படலாம். ஒன்று சரத்து 66 இன் கீழ். இதில் பல விடயங்கள் இருக்கின்றன. உதாரணம் ஒரு பா உறுப்பினர் ஜனாதிபதியாதல் போன்றவை. அவற்றில் ஒன்று அவர் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு அறிவிப்பது.
இரண்டு சரத்து 99(13) இன் கீழ் தான் தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் / சு குழுவின் அங்கத்துவத்தை இழப்பது. இதை அக்கட்சியின் செயலாளர்/ சு குழுவின் தலைவர் பா செ நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்து ஒரு மாதத்திற்குள் நீதிமன்றம் செல்லவேண்டும்.
எனவே, இங்கு புரிந்துகொள்ள வேண்டியது முதலாவது கட்சி அங்கத்துவத்தை இழக்கவேண்டும். இரண்டாவது அதை கட்சியின் செயலாளர் பா செ நாயகத்திற்கு அறிவிக்க வேண்டும்.
கட்சி அங்கத்துவத்தை இழத்தல்
——————————————-
பிரதானமாக கட்சி அங்கத்துவத்தை இழக்கும் முறைகள் 1) கட்சியிலிருந்து ராஜினாமா செய்தல்.
( சரத்து 66 இன் கீழ் செய்யும் ராஜினாமா பாராளுமன்ற உறுப்புரிமையில் இருந்து- எனவே இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம்)
2. கட்சியிலிருந்து விலக்கல்.
கட்சியிலிருந்து ராஜினாமா செய்தல்
————————————————
ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தனது கட்சியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார். அது ஊடகங்களிலெல்லாம் வெளிவந்திருக்கிறது. இப்பொழுது அவர் ஒரு மாதத்தில் பதவியை இழப்பாரா? நிச்சயமாக “ இல்லை”.
ஏன்? ஊடக செய்தியை வைத்து பா செ நா செயற்பட முடியாது. கட்சியின் செயலாளர் ‘ இவர் ராஜினாமா செய்ததன் காரணமாக கட்சியின் அங்கத்துவத்தை இழந்துவிட்டார்’ என்று பா செ நா இற்கு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் பதவி பறிபோகாது.
சிலவேளை கட்சி அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாமல் விடலாம். அதனால் பா செ நா இற்கு அறிவிக்காமல் விடலாம். எனவே, கட்சியில் இருந்து ராஜினாமா செய்தாலும் கட்சி பா செ நா இற்கு அறிவித்தாலேயொழுய பதவி பறிபோகாது. ஆனால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து பா செ நா இற்கு அறிவித்தால் உடனடியாக பதவி பறிபோய்விடும்.
எனவே, இரண்டு ராஜினாமாக்களினதும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
கட்சியிலிருந்து விலக்குதல்
————————————
கட்சியிலிருந்து ஒரு உறுப்பினரை விலக்குவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அது அவர்களது கட்சியாப்பு, தீர்மானங்களைப் பொறுத்ததாகும். ஒருவர் கட்சி மாறியதற்காக அல்லது ஒழுக்கக் கட்டுப்பாட்டை மீறியதற்காக கட்சியிலிருந்து விலக்கலாம். அல்லது கட்சிமாறினாலும் விலக்காமலும் இருக்கலாம். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிகளில் இருப்பதற்கு அவர்களின் கட்சியாப்பு இடம்கொடுக்கலாம். அது அவர்களைப் பொறுத்தவிடயம்.
உதாரணமாக 2004ம் ஆண்டு மு கா, தேர்தலின்பின் உயர்பீடத்திற்குத் தெரியாமல் ஒரு ஒப்பந்தம் செய்தது. அதன்பிரகாரம் ஐ தே கட்சியில் மு கா சார்பில் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஐ தே க அங்கத்தவர்களாக மாற்றப்பட்டார்கள்.
அது தொடர்பாக நாங்கள் உயர்பீடத்தில் போராடினோம். எங்களுக்கெதிராக உயர்பீடக்கூட்டத்தில் பலவந்தம் பிரயோகிக்க முற்பட்டார்கள். சட்டத்தரணி சஹீட் குர்ஆன் பிரதியுடன் இது திருட்டு ஒப்பந்தமில்லை; என்று சத்தியம் செய்யுங்கள் என்று உயர்பீடக்கூட்டத்தில் கேட்டபோது அவர்மீது வன்முறைபிரயோகிக்க எத்தனிக்கப்பட்டது. அப்போது எங்களை உள்ளேபேச அனுமதிக்காவிட்டால் வெளியில் போய்ப்பேசுவோம்; என்று கூறிவிட்டு வந்தோம்.
இதில் விதியின் திருவிளையாடல் என்னவென்றால் அன்று நாங்கள் நியாயத்திற்கு கட்சிக்குள்ளே குரல்கொடுத்தபோது தலைவருக்காக எங்களுக்கெதிராக செயற்பட்ட பலர் இன்று கட்சியில் இல்லை. இறுதியில் அவர்களுக்கு நியாயத்திற்காக போராடிய திருப்தியுமில்லை, தலைவருக்கு வக்காலத்து வாங்கியதற்காக
கட்சியில் நிரந்தர இடமுமில்லை; என்கின்ற நிலைமையாகி விட்டது.
எனவே, இங்கு புரிந்துகொள்ளவேண்டியது கட்சி மாறுவதால் உறுப்புரிமை இழக்கப்பட மாட்டாது. மாறாக அதன்காரணமாக கட்சியில் இருந்து விலக்கி அதனை பா செ நா இற்கு கட்சி அறிவிக்க வேண்டும்.
மஹிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச போன்றோர் விடயத்தில் அவ்வாறு அறிவிக்கப் படவில்லையாதலால் பதவியிழக்க மாட்டார்கள்.
விலக்கினால் நீதிமன்றம் செல்லல்
———————————————-
அவ்வாறு விலக்கினாலும் நீதிமன்றம் செல்லலாம். அவர்கள் சரியான முறையில் விசாரணை நடாத்தவில்லை; என்ற பலவிடயங்கள் அங்கு முன்வைக்கப்படலாம். அதாவது ஒருவரை சாதாரணமாக விலக்கமுடியாது. விசாரணை தேவை. அங்கு Natural Justice பின்பற்றப்பட்டிருக்க வேண்டும். இதை இலகுவாகப் புரிந்துகொள்வதற்கான உதாரணம் கீழே.
ரிசாட், அமீர்அலி, நஜீபின் பதவிகள் காப்பாற்றப்பட்டமை
————————————————
மூவரும் சந்திரிக்கா அரசுடன்சேர்ந்து அமைச்சுப்பதவி பெற்றபோது இம்மூவரின் கையொப்பத்துடன் சகோ ரவூப் ஹக்கீமிற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்தக்கடிதம் மாஷாஆல்லா என்னால் எழுதப்பட்டது. அதில் இந்த நிலைப்பாட்டிற்குக் காரணம் ரவூப் ஹக்கீமின் பிழையான தீர்மானங்கள் என்று அவருடைய செயற்பாடுகளை பிய்த்தெடுத்து அக்கடிதத்தில் மேயப்பட்டிருந்தது.
அதை வாசித்ததும் அவர் தன்னைமறந்து உணர்ச்சிவசப்பட்டு எனது ஞாபகப்படி “ இந்த சமூகம் உங்களை மன்னிக்காது” என்று பதில் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
நீதிமன்றம் தனது தீர்ப்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது மு கா உயர்பீடம். அதன் தலைவர் ரவூப் ஹக்கீம். அவர் “சமூகம் உங்களை மன்னிக்காது” என்று ஏற்கனவே எழுதியதன் மூலம் “ இம்மூவரும் குற்றவாளிகள்” என்ற முடிவுக்கு விசாரணைக்கு முன்பே வந்துவிட்டார்.
எனவே, விசாரணைக்கு முன்பே தீர்ப்பை எழுதிவிட்டார்” என்ற அடிப்படையில் அது Natural justice இற்கு முரணானது என்றவகையில் “ இவர்களை விலக்கியது செல்லுபடியாகாது” என்று தீர்ப்பளித்தது.
அன்று மாஷாஅல்லாஹ், வை எல் எஸ் ஹமீட்டின் பேனை அம்மூவரின் பதவிகளையும் காப்பாற்றுவதற்கு துணைபுரிந்ததற்கு நன்றிக்கடன்தான் அவர்களின் அடிப்படைக் குணத்தைக் காட்டியது; என்பது வேறுவிடயம்.
மட்டுமல்ல, இரண்டாவது தடவையும் ரிசாட்டையும் அமீர்அலியையும் மு கா விலக்கியபோது வை எல் எஸ் ஹமீட்டின் சத்தியக்கடதாசிதான் மாஷாஅல்லாஹ் அவர்களைக் காப்பாற்றியது; என்பதையும் மறந்தவர்கள்தான் அவர்கள் என்பதும் வேறுவிடயம். ஆனால் கட்சியில் இருந்து விலக்கி அங்கத்துவத்தை இழந்ததாக பா செ நா இற்கு அறிவித்தாலும் அது அறுதியானதல்ல; என்பதை இவற்றை வைத்துப்புரிந்துகொள்ள வேண்டும்.

நன்றி முகநூல் 
»»  (மேலும்)

12/18/2018

இலங்கை எதிர்க்கட்சித் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ நியமனம்

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் பிரதமராக நியமிக்கப்பட்டு, பதவி விலக நேர்ந்தவருமான மஹிந்த ராஜபக்ஷ தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை அரசியலில் அதிரடித் திருப்பமாக, கடந்த அக்டோபர் 26-ம் தேதி பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க-வை அந்தப் பதவியில் இருந்து அகற்றிவிட்டு தமது எதிர்த் தரப்பில் இருந்துவந்த முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
அதன் பிறகு நடந்த பரபரப்பான அரசியல் நிகழ்வுகளின் முடிவில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க ராஜபக்ஷவால் முடியவில்லை. இதையடுத்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றார்.
இந்நிலையில் இன்று நடந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்தார் சபாநாயகர் கரு.ஜெயசூர்ய.
இலங்கையில் அக்டோபரில் நடந்த அரசியல் திருப்பத்துக்கு முன்பு இலங்கை சுதந்திரக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்திருந்தன.
இலங்கையின் எதிரெதிரான இரு பெரும் அரசியல் தரப்பும் ஓரணியில் இருந்ததால், 16 எம்.பி.க்களைப் பெற்றிருந்த தமிழ்த் தேசியக் கூட்டணி எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தது.
»»  (மேலும்)