12/02/2017

கிழக்கின் அரசியல்வாதிகளுக்கு முகத்தில் கரிபூசிய ஆளுநர்.

Résultat de recherche d'images pour "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்"

தமிழ்த்தேசியம் பேசிய அரசியல்வாதிகளினால் கைவிடப்பட்ட மட்/நூல் நிலைய கட்டட வேலைகளை கரிசனையுடன் முன்னெடுக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் றோகித வோகொல்லாகமவின் சேவையினை வெகுவாக பாராட்டுவதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலர்  பூ.பிரசாந்தன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அவ்வறிக்கையில்....

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான  சி.சந்திரகாந்தனின் சிந்தனையுடன் மேற்கொள்ளப்பட்ட இலங்கையில் மிகவும் பிரமாண்டமான நூலகமாக மட்டக்களப்பு மாநகர நூலகத்தினை அமைக்கும் முயற்சி 2012 மாகாணசபை கலைக்கப்பட்டதுடன் நிதி ஒதுக்கீடுகள் தடைப்பட்டு நின்றுபோனது. சுமார் 140 மில்லியன் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் மேலும் 110 மில்லியன் நிதித்தேவையுடன் பூரணப்படுத்தப்படாமல் காணப்படுவது இது மாவட்டத்தினை நேசிக்கும் அனைவருக்கும் வேதனையானயை தந்தவிடயம்.
  
பின்னர் கிழக்கு மாகாணசபையில் 2012ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு ஆரம்பம்வரை நஜிட் ஏ மஜித்,காபிஸ் நசீர் என இரண்டு முதலமைச்சர்களும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கல்வி அமைச்சர் உள்ளிட்ட இரண்டு அமைச்சர்கள் இருந்ததுடன் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராக இருந்தும் மட்டக்களப்பு பொது நூலகத்தினை பூரணப்படுத்த வேண்டும் என்று எள்ளளவேனும் கரிசனை காட்ட முடியாத நிலையே இருந்து வந்தது.ஆனால் இன்றைய கிழக்கு மாகாண ஆளுனர் இந்நூலகத்தினை பூரணப்படுத்த எடுத்துவரும் முயற்சிகளை வெகுவாக பாராட்டுகின்றேன்.  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment