உள்ளூராட்சி தேர்தல்! என்னவாகும்?-அஜீவன்
உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தவின் தாமரை மொட்டு தனியாக களமிறங்குகிறது எனச் செய்தி வருகிறது.
அதனால் மைத்ரியின் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனியாகவே போட்டியிட வேண்டிய நிலை.
கடந்த சில காலமாக மகிந்த , மைத்ரி இடையே நடந்த சமரச முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. அதனால் மைத்ரியின் எண்ணங்கள் நிலை குலைந்துள்ளன.
அதேவேளை இரட்டை குடியுரிமை பிரச்சனையால் , பலர் தலையை சொறிந்து கொண்டிருக்கிறார்கள். ஏனைய கட்சிகளில் இருப்போரும் முணுமுணுக்கிறார்கள்.
19வது திருத்தச் சட்டத்தில் இரட்டைக் குடியுரிமையுள்ளோர் எவரும் அரசியலில் ஈடுபட முடியாது எனும் சட்டத்தை நல்லாட்சி கொண்டு வந்தது. அதை யாரும் பெரிது படுத்தவில்லை. இவங்க என்ன தேடியா பிடிக்கப் போறாங்க எனும் அசமந்தம். ஆனால் இனி கறுப்பு விடாது.
அண்மைய இரட்டைக் குடியுரிமையுள்ளோர் எவரும் அரசியலில் ஈடுபட முடியாது எனும் வழக்கின் தீர்ப்பினால் மகிந்த தரப்பு கீதா குமாரசிங்க பதவி இழந்துள்ளார். அதனால் மகிந்தவின் சகோதரர்களான பசில் மற்றும் கோட்டாபய ஆகியோரும் கூட அரசியலில் ஈடுபட முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இருந்தாலும் பசில் , இனவாதமில்லா அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பசிலோடுதான் மகிந்த இருக்கிறார். இனவாதம் வெற்றி தராது என்பதை மகிந்த உணர்ந்துள்ளார். அமைதியாக பலர் இருந்தாலும், விசில் அடிப்பவர் குரல்தான் உச்சமாக கேட்கும். அதனால் எல்லோரும் விசலடிக்கிறார்கள் என அர்த்தமல்ல. அதுபோலத்தான் இனவாதிகளின் குரலும்!
கோட்டாபய இனவாத அரசியலை வியத்மக எனும் பெயரில் , முன்னெடுத்து அரசியல் கட்சி ஒன்றை தனித்து உருவாக்கி பலப்படுத்த முயன்றார். அவருக்கு பக்க பலமாக, வன்னியை மீட்டவர்களில் ஒருவரான கமல் குணரத்ணவும் , அவரோடு இணைந்தார். கமலின் வருகை ஆக்ரோசமாக பார்க்கப்பட்டது. ஆனால் கமல் குணரத்ண பேசிய இனவாத பேச்சை சிங்கள மக்கள் , எதிர்க்கவும் , பகிரங்கமாக விமர்சிக்கவும், தொடங்கினார்கள். இது யாரும் எதிர்பாராத ஒன்றுதான். மக்களின் எதிர்வினை விமர்சனங்களின் பின் , கோட்டாபய , அடுத்தடுத்து நடந்த வியத்மக நிகழ்ச்சிகளுக்கு போவதையே தவிர்த்து விட்டார். இதற்குள் இரட்டை குடியுரிமை பிரச்சனை வேறு வந்து தடுமாற வைத்து விட்டது.
இன்றைய நிலையில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்துள்ள பிரிவுகள் , எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்டால் , மகிந்தவின் மொட்டுக்கே வெற்றி பெற, அதிக வாய்ப்புகள் உண்டு. மகிந்த காலத்தில் , உள்ளூராட்சிகள் மகிந்தவின் ஆதரவாளர்களாகத்தான் நிறைந்து இருந்தன. எனவே அவர்களில் எத்தனை வீதம் மைத்ரிக்கு ஆதரவாக மாறுவார்கள் என இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் சிங்கள கிராம மக்களின் தலைவன் மகிந்ததான். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என நினைப்போர் நிலைதான் கேள்விக் குறியாக உள்ளது.
அதிபர் தேர்தலில் மைத்ரியின் , வெற்றிக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாக்குகள் கை கொடுக்கவில்லை. மைத்ரி வெல்வதற்கு , பெரும்பாலும் ஐதேக மற்றும் தமிழ் - இஸ்லாமிய - மலையக வாக்குகளே காரணமாயின.
இதுவரை காலமும் , இலங்கை அரசியலில், கட்சி தலைவராக ஆகி இருந்த ஒருவர்தான், இலங்கையின் அதிபராகி உள்ளார்கள். அப்படியில்லாமல் , முகம் தெரியாமல் இருந்த ஒருவர் , அதிபராகியது , எவரும் எதிர்பார்க்காத ஒன்றுதான். சிவனே என உட்கார்ந்திருந்த ஒருவரை, சிவனாக்கியதற்கு ஒப்பானது.
மைத்திரியை அரச நாற்காலியில் உட்கார வைத்த, பெரும்பான்மையினர் அவரது கட்சிக்காரர்கள் அல்ல. ஆனால் , பொது அபேட்சகராக வெற்றி பெற்றவர் , அனைவருக்கும் பொதுவானவராக இருந்திருக்க வேண்டும். அதிலிருந்து வழுகி , தன்னால் அநாதையான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை, தனது தலைமையில், கட்டி எழுப்ப வேண்டும் என செயல்பட முனையப் போய் பெரும் சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அடுத்த நாளே, ரகசியமாக மகிந்த தரப்பில் சிலரோடு ஆலோசனை நடத்தினார். தன்னால் சிதைக்கப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை , கட்டி எழுப்பி விட்டு, பதவி துறந்து செல்ல வேண்டும் என மைத்ரி நினைக்கிறார். அதனால் அதிபர் முறையை ஒழிக்க, இப்போது அவர் விரும்பவில்லை. பலம் இருந்தால்தான் தான் நினைப்பதை நிறைவேற்ற முடியும்.
ஆனால் அவரோடு பலமானவர்கள் இருக்க வேண்டுமே? தவிர விதி விலக்காக இருப்பது மகிந்தவோடு இருக்கும் கூட்டு எதிர்க் கட்சி அணியாகும்.இங்கு நடக்கும் விடயங்கள், மகிந்தவும் , மைத்ரியும் விடாக் கண்டன் , கொடாக் கண்டன் டைப்பில் செயல்படுவதைக் காட்டுகிறது .
இந்நிலையில்தான் உள்ளூராட்சி தேர்தல் வந்து விட்டது. இங்கே எல்லோரும் எப்படி, தத் தமது தரப்புகளில் வெல்வது என வியூகங்களை வகுக்கத் தொடங்கியுள்ளனர்.
மகிந்த தரப்பு, பசிலால் எவரையும் வளைத்து போட முடியும். பசில், பேசி அல்லது பணம் கொடுத்து எவரையும் ஈர்த்துவிடுவார். மகிந்த காலத்தில், அவரால் நியமிக்கப்பட்டோரே பெரும்பாலும் உள்ளூராட்சி பதவிகளில் இருந்தார்கள். உள்ளூராட்சி மட்டுமல்ல , இலங்கையின் அனைத்து இடங்களிலும்!
இலங்கை முழுவதும் நடந்த பொருளாதார வளர்ச்சி திட்டங்கள் அனைத்துமே , பசிலின் கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்தன. அதன் பின்னால் நூலிழை போல இருந்தது கமிசன் வியாபாரம். தமது பகுதி முன்னேற்றம் அடைவதை பார்த்து , மக்கள் மகிழும் போது , அதில் ஈடுபட்டோர் கமிசன் அடித்து மகிழ்ந்தனர். எல்லோருக்கும் ஏதோ ஒரு சில வீதங்கள் கிடைத்ததில், கட்சியிலிருந்த அனைவருமே மகிழ்ந்தார்கள். அப்படி இருந்தோருக்கு இப்போது வறுமை. பசியோடு நிற்போரால், பசில் சார்பு மகிந்தவின் மொட்டு பலம் பெற வைக்கப்படும் என அதிகமானோர் நம்புகிறார்கள். தீயாக இறங்கி வேலை செய்வார்கள் என கணக்கு போடுகிறார்கள்.
ஆனால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு விலகி ,
பாராளுமன்றத்தில் இருக்கும் யாராவது , மகிந்த பக்கம் போனால் , அவர்களை கட்சியை விட்டு நீக்க மைத்ரிக்கு அதிகாரம் உண்டு. அப்படி நீக்கப்படுவோரின் , பாராளுமன்ற உறுப்பினர் பதவிகள் இல்லாமல் போகும். இது மண்டையை காய வைக்கும் விடயம்.
இங்குதான் பலர் ஆப்பிழுத்த குரங்கு நிலைக்கு ஆளாகியுள்ளார்கள். கட்சியா? தலைவனா? கொள்கையா? நியாயமா? என்பதை விரைவில் நம்மால் பார்க்க முடியும்.
இதற்குள் மொட்டில் ஒரு பிரிவினர் , பிரிந்து செல்லப் போவதாக வேறு செய்திகள் கசிந்துள்ளன. இதன் பின்னணி பதவி இழந்து விடுவோமோ அல்லது பழைய சிக்கல்களில் மாட்டி விடுவோமோ எனும் அச்சம்தான்.
இப்படியானாலும் , மகிந்த - மைத்ரி போட்டியில் அதிக இடங்களை கைப்பற்றும் வாய்ப்பு மகிந்தவுக்கே உண்டு என சொல்லலாம். காரணம் மைத்ரியோடு சேர்ந்து பதவியை தக்க வைத்துக் கொண்டு, மைத்ரிக்கு பலர் ஆப்பும் வைக்கலாம்.
பொதுவாக எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் , சிங்களப் பகுதிகளில் ஐதேக , அதிக இடங்களைப் பெறும். காரணம் ஐதேகவின் வாக்கு வங்கி ஒரு போதும் சிதறுவதில்லை. அடுத்து ஐதேக தலைவர் , யாருக்கு வாக்களிக்கச் சொன்னாலும் , மறு பேச்சே இல்லாமல் , வாக்களிக்கும் வாக்காளர்கள் ஐதேகவிலேதான் உண்டு. அடுத்த கட்சிகளில் விவாதப்படுவார்கள். அந்த குணாம்சம் ஐதேகவில் இல்லை. இல்லாவிட்டால் மைத்ரிக்கு ஐதேக வாக்களிக்குமா?
தவிர பதவியில் உள்ள கட்சியோடு பயணித்தால்தான், இப்போது எதையாவது செய்து கொள்ள அல்லது பெற முடியும்.
இரண்டாவது இடம் அதிகமாக மகிந்தவுக்கு சாத்தியம் எனச் சொல்லப்படுகிறது. அது கூட்டு எதிர்க் கட்சியின் பாய்தலை அல்லது பாச்சலைப் பொறுத்து மாறலாம். பணமா? பதவியா? இதுதான் இப்போதைக்கு முன்னால் நிற்கும் பிரச்சனை.
கூட்டு எதிர்க் கட்சியினர் , மகிந்தவோடு நிலைத்தால் , அடுத்த போட்டி , மைத்ரி மற்றும் JVPயினதாக இருக்கும். JVP இரண்டாவது இடத்துக்கு வர முயல்கிறது. ஆனால் 3 - 4 எனும் இடங்களே JVP அல்லது மைத்ரிக்கு கிடைக்கப் போகிறது.
நன்றி முகநூல் - அஜீவன்

0 commentaires :
Post a Comment