11/05/2017

சுரேசை தொடர்ந்து மட்-துரைரெத்தினமும் கூட்டமைப்பிலிருந்து வெளியேற்றம்?


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து சுரேஸ் அணி வெளியேறுவதாக அறிவித்துள்ளனர். Résultat de recherche d'images pour "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து"
எனது தனிப்பட்ட கருத்தின் படி சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்களின் செயற்பாடு நல்ல விடயம்.
இவர் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் கொடுக்காத போதே வெளியேறியிருக்க வேண்டியவர்.
ஆனாலும் உள்ளே இருந்து கூட்டமைப்பை உடைக்கலாம் என எதிர்பார்த்தார்.
அது நடைபெறவில்லை.
...
கடந்த இரண்டு வருட காலத்தில் சுரேஸின் செயற்பாடுகள் முற்றுமுழுதாக கூட்டமைப்புக்கு எதிராகவே அமைந்திருந்தது.
ஆனாலும் கூட்டமைப்பு அவரது கட்சியை விலக்காமல் உள்ளே வைத்து அவமானப்படுத்தியது.
அதாவது தானாக வெறியேறிப் போகவேண்டும் என்ற எதிர்பார்ப்பே கூட்டமைப்பின் தலைமைக்கு இருந்தது.
கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய சுரேஸ் தமிழ் மக்கள் பேரவையை தூசுதட்டி, கட்சியாக பதிவுசெய்யும் முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாக தெரிகிறது.
ஆனந்த சங்கரியின் சூரியனை கொண்டுவந்து பிழைப்பு நடத்தலாம் என்ற திட்டமும் உள்ளதாம்.
அடி வாங்கி நொந்து நூலாகிப் போன கஜேந்திரகுமாரின் முன்னணியையும் இணைத்துக்கொண்டு பயணிக்க நினைத்த அவரது நீண்ட நாள் கனவை நனவாக்கவுள்ளார்.
துருப்புச் சீட்டாகவுள்ள வடக்கு மாகாண முதல்வர் விக்கினேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடு எவ்வாறானதாக உள்ளதென்பது தெரியவில்லை.
அதே நேரம் கஜேந்திரகுமார் எந்த நேரத்தில் துரோகி பட்டம் கொடுத்து தூக்கியெறிவார் என்ற பயமும் சுரேசுக்கு இருக்கவே செய்யும்.
எது எப்படியோ..
கூட்டமைப்பின் ஆதரவாளர்களுக்கு சுரேஸின் வெளியேற்றம் எந்த விதக் கவலையுமற்றதாகவே காணப்படுகிறது.
அதேபோல தேர்தல்களில் சுரேசின் வெளியேற்றம் கூட்டமைப்புக்கு எந்தவித பாதகங்களையும் ஏற்படுத்தப்போவதில்லை.
மறுபக்கமாக கூட்டமைப்புடன் இருந்தபோதே மக்களால் நிராகரிக்கப்பட்டவர் சுரேஸ்.
வவுனியாவில் சிவசக்தி ஆனந்தன் கூட்டமைப்பின் உறுப்பினர் என்ற ஒரே காரணத்துக்காக மக்களால் ஆதரிக்கப்படுகிறார்.
இனிவரும் காலங்களில் சிவசக்தி ஆனந்தனின் அரசியல் வாழ்க்கையும் முகவரியற்றுப் போகும் என்பதே உண்மை.
அதே போல மட்டக்களப்பில் மக்களால் ஓரளவு மதிக்கப்படும் துரைரத்தினத்துக்கும் அஸ்த்தமனம் ஆரம்பித்துவிட்டதாகவே உணர முடிகிறது.

நன்றி முகநூல் *நவநீதன்

0 commentaires :

Post a Comment