கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் 6 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகை தொடர்பான விசாரணை திங்கட்கிழமை ஆரம்பமானது.
இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் தொடர்பு படுத்தி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் காலை 10.30 மணி தொடக்கம் இந்த வழக்கு மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நாளையும் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் நடைபெறவுள்ளது.இன்றைய இந்த விசாரணையில் சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து வருகைதந்துள்ள சட்டத்தரணிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
அரசியல் பழிவாங்கலுக்காக கைது செய்து சுமார் இரண்டு வருடங்களாக முன்னாள் முதல்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கு மேல் தடுத்து வைக்க எந்த வழியியும் இல்லை என்னும் நிலையில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
0 commentaires :
Post a Comment