11/17/2017

தமிழ்த்தேசிய இரத்தமும் , தக்காளிச்சட்னியும்!

தமிழ்த்தேசிய இரத்தமும் , தக்காளிச்சட்னியும்! - தோழர் ஜீவமுரளி
Résultat de recherche d'images pour "சிவனேசத்துரை சந்திரகாந்தனை"L’image contient peut-être : 1 personne
நீதியரசர் கௌரவ விக்னேஸ்வரன் என்று அழைப்பதற்கும், கிழக்கின் முதலமைச்சராக இருந்த சிவனேசத்துரை சந்திரகாந்தனை , சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்று பெயர் சொல்லி , ஊடகங்களோ சரி, நபர்களோ சரி அழைக்க முடியாமைக்குமான காரணம்,அரசியல் பின்னணி அல்லது உளவியல் பின்னணி என்பது யாழ் மைய வாத சிந்தனைத் புலத்தில் இருந்தே வருகின்றது என்பதாகும் .

அதுவே சிவ சந்திரகாந்தனை, பிள்ளையான் என்று அழைக்க வைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால் சிவ.சந்திரகாந்தனை இன்றைய சூழலில் "பிள்ளையான்" என்று அழைப்பதற்குரிய காரணம் அடிப்படையிலேயே தமிழ் தேசிய பற்றுதியின் பெயரால் நடந்த அரசியல் பழிவாங்கல் தான். இன்னும் அடிப்டையான விடயம் இரண்டு பெயர்களுக்கு பின்னால் உள்ள வர்க்க உளவியல்.

மாறாக "வேட்கை" அட்டைப் படத்தில் பிள்ளையான் என்று குறிப்பிட்டு, அடைப்புக்குறிக்குள் சிவ சந்திரகாந்தன் என காட்டப்பட்டிருப்பது. யாழ்மையவாத அரசியலுக்கு எதிரான குறியீட்டு அரசியல் அறிக்கை என்றுதான் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

விடுதலை புலிகள் இயக்கத்தில் செல்லப்பெயராவும், புனை பெயராகவும் இருந்த பிள்ளையான் என்ற  சிவனேசதுரை சந்திரகாந்தன் கிழக்கில் அரசியல் கட்சி ஆரம்பித்த பின்தான் அந்தப்பெயரை துரோகத்தின் குறியீடாக , இழிவின் குறியீடாகவும் தமிழ் தேசிய அரசியல் மாற்றியமைத்தது. சிவ சந்திரகாந்தன் மீதான அரசியல் பழிவாங்கல் இப்படித்தான் ஆரம்பமாகியது. அதற்கு யாழ் மையாவாத கருத்தியல் ஒட்டு மொத்தமாக ஒப்புதல் அளித்தது என்றே சொல்லவேண்டும்.

வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் என்ற விடாப்பிடியான தமிழ் தேசிய சர்வதிகாரத்துக்கு எதிராக உருவாகிய மட்டக்களப்பு தேசியம் தான் சந்திரகாந்தன் மீதான அரசியல் பழிவாங்கலை விரைவு படுத்தியது
ஜோசப் பராராஜசிங்கம்கொலை , ரவிராஜ் கொலை இதன் பொருட்டே சிவ சந்திரகாந்தன் இன்று சிறைவாசம் அனுபவிக்கின்றார் என்பது இலங்கையின் குற்றவியல் சட்டத்திற்கு உட்பட்டு நடந்திருந்தாலும் அதன் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பழிவாங்கல் உள்ளது என்பதே எனது வாதம்.

அதன் நேரடி சூத்திரதாரிகளாக இரா.சம்மந்தனும் சுமந்திரனும் இருந்தார்கள் என்பதுதான் உண்மை. சிவ.சந்திரகாந்தனுக்கும் , இரா.சம்மந்தனுக்கும் நடந்த முறுகல் நிலைக்கு பின்னேதான் அது இலகுவாக சாத்தியமாகியது . அதை இலங்கையின் நீதித்துறை இந்த இருவருக்குமாக செய்து கொடுத்தது. . அதாவது தமிழ்தேசிய கூட்டமைப்பிற்காக, யாழ்மாயவாத அரசியலை இடைஞ்சல் இன்றி இனிதே செய்வதற்காக சாத்தியமாகியது .

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுரேஷ் பிரேம்ச்சந்திரன் , செல்வம் அடைக்கலநாதன். மற்றும் டக்லஸ் தேவானந்தா இவர்களுக்கு கூட கொலைப்பின்னணி இருக்கின்றது. இருப்பினும் அவர்கள் இன்னும் குற்றவாளிகளாக இலங்கையின் குற்றவியல் சட்டத்தால் இனங்காணப்படவில்லை. காரணம் இவர்களும் தமிழ் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஒத்த கருத்து உள்ளவர்களாக இருப்பதுதான்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்,தமிழ் கட்சி வரலாற்றிலேயே தோன்றிய முதலாவது பிராந்தியக்கட்சி என்று தோழர் சோபாசக்தி, பாரிசில் நடந்த வேட்கை நூல் அறிமுகத்தில் குறிப்பிட்டு பேசியது என்னை யோசிக்க வைத்தது. பிள்ளையானின் கட்சி பிராந்தியக்கட்சியாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பை தேசியக்கட்சியாகவும் இனங்காண்பது கூட ஒரு அரசியல் பழிவாங்கல் போல என்னை உணர வைத்தது.

சிவனேசத்துரை சந்திரகாந்தனின் கொலைக்குற்ற பின்னணிக்கு அப்பால் கிழக்கு மக்களின் மீதான யாழ்மைய வாத்தின் வெறுப்பு அரசியலே இந்த பிள்ளையான் என்ற குறியீட்டை கிழக்கின் மீதான ஆதிக்கம் செலுத்துவதற்கு பாவித்து வருகின்றது. மாறாக கிழக்கு மக்களிடம், சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்பது , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் என்றளவிலே தான் வினையாற்றுகின்றது.

யாழ் மையவாத அரசியலுக்கு எதிராக தொடர்ந்து உரையாடுவோம்.

நன்றி முகநூல்

0 commentaires :

Post a Comment