11/13/2017

பாரிஸ் நகரில் வேட்கை நூல் வெளியீட்டில் வன்முறை. மூன்று இலங்கைத்தமிழர்கள் கைது.

பாரிஸ் நகரில் வேட்கை   நூல் வெளியீட்டில் வன்முறை. மூன்று இலங்கைத்தமிழர்கள்  கைது.
L’image contient peut-être : 2 personnes, personnes assises et intérieurL’image contient peut-être : 2 personnes, personnes assises et intérieur



பிரான்ஸ் பாரிஸ் நகரில் நேற்று ஞாயிறு மாலை இடம்பெற்ற  வேட்கை நூல் வெளியீட்டு நிகழ்வில் புகுந்த   ஒரு குழுவினர்  வன்முறையிலீடுபட்டுள்ளனர். 

 முன்னாள் போராளியும் கிழக்கு மாகாண முன்னாள் முதல்வருமான  சிவ. சந்திரகாந்தன் பிள்ளையான் எழுதிய "வேட்கை " என்னும் நூலின் வெளியீட்டு நிகழ்வு எக்ஸில் வெளியீட்டகம் சார்பில் பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்றபோது முன்னாள் புலிகள் என தங்களை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு குழுவினரால் மேற்படி வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது.

நிகழ்வு ஆரம்பவதற்கு முன்பே மண்டப வாசலில் வைத்து நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்களை  மிரட்டியும் தூஷண வார்த்தைகளால் திட்டியும் கொண்டிருந்த அக்குழுவினர் இறுதியில் நிகழ்வுகள்  ஆரம்பமாவதை தடுக்கும் நோக்கில் மண்டபத்துக்குள் நுழைந்து குழப்பம்விளைவித்தனர்.

இறுதியாக ஒருதொகுதி புத்தகங்களை பறித்தெடுத்து சென்ற அந்த வன்முறை குழுவினரை போலீசார் தேடிப்பிடித்து கைது செய்துள்ளதாக அறிய முடிகின்றது.

பாலமுரளி  பாலசிங்கம்,சசிகுமார் பரம்சோதி,பாலகிருஷ்ணன் கஜன் என்கின்ற மூவர் கைதாகி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனாலும் அத்தனை குழப்பங்களுக்கும் பின்னர் நூல் வெளியீட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடந்தேறியுள்ளன. எழுத்தாளர்கள் சோபா சக்தி, அசுரர போன்றோரின் அறிமுக விமர்சன உரைகளும்  கவிஞர் அருந்ததியின் தலைமையுரையும் நிகழ்வுகளுக்கு மெருகூட்டின.


0 commentaires :

Post a Comment