11/15/2017

37 ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த முகாபே ராணுவத்தின் பிடியில்

ஜிம்பாப்வேவின் அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. 1980 முதல் அந்நாட்டு அதிபராக இருந்த ராபர்ட் முகாபே பாதுகாப்பாக உள்ளதாக ராணுவம் கூறியுள்ளது.
ராபர்ட் முகாபே
'' சமூக மற்றும் பொருளாதார துன்பங்களை'' உருவாக்கிய முகாபேவுக்கு நெருக்கமானவர்களை தாங்கள் இலக்கு வைத்துள்ளதாக அரசு தொலைக்காட்சியை கைப்பற்றிய பிறகு ராணுவ செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.
தொலைக்காட்சியில் தோன்றி அறிக்கை ஒன்றினை வாசித்த மேஜர் ஜெனரல், இது ஆட்சிக்கவிழ்ப்பு இல்லை என கூறினார். மேலும், முகாபே பாதுகாப்பாக இருப்பதாகக் கூறினார். இச்சம்பவம் ஜிம்பாப்வேவின் தலைநகரான ஹராரேவில் நடந்துள்ளது.
நகரின் வடக்கு புறநகர் பகுதியில், பயங்கர துப்பாக்கிச்சூடு மற்றும் பீரங்கிகளின் சத்தங்களும் கேட்டுள்ளன.
இது குறித்து 93 வயதான அந்நாட்டு அதிபர் ராபர்ட் முகாபேவிடம் இருந்து இதுவரை எந்த வார்த்தையும் வரவில்லை.

0 commentaires :

Post a Comment