10/27/2017

சுவிஸ் தமிழர் படுகொலை சொல்வதென்ன?

சுவிஸ் தமிழர் படுகொலை சொல்வதென்ன?
நீதியை விட, பொருளாதார தேவைகளை முன்னிறுத்தும் சுயநல சமூகம்
 *கலையரசன்

Image associéeதமிழர்களை நம்பி எந்தப் போராட்டமும் நடத்த முடியாது. நடுத்தெருவில் தவிக்க விட்டு ஓடி விடுவார்கள். அந்தளவுக்கு சுயநலவாதிகளால் நிறைந்த சமூகம்.

சுவிட்சர்லாந்தில் சில வாரங்களுக்கு முன்னர், சுவிஸ் பொலிஸ் ஒரு ஈழத் தமிழ் அகதியை சுட்டுக் கொன்றது. அது பற்றிய சர்ச்சை காரணமாக, சம்பந்தப் பட்ட போலீஸ்காரர் மீது தவறிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. சிலநேரம் வேலையில் இருந்து இடைநிறுத்தி இருக்கலாம்.

அந்த சம்பவத்தில் பலியான தமிழ் அகதி கையில் கத்தியுடன் குத்துவதற்கு தயாராக நின்றதாக பொலிஸ் கூறியது. ஆனால், தமக்குத் தெரிந்த வரையில் "அவர் சாந்தமான குணமுடையவர். சண்டைக்கு போகும் தன்மை கொண்டவர் அல்ல..." என்று உறவினர்கள் கூறினார்கள்.

அதே நேரம், பலியான அகதியின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, சுவிஸ் அரசு, இலங்கையில் இருந்த அவரது உறவினர்களுக்கு விசா கொடுத்து வரவழைத்தது. தற்போது அந்த உறவினர்கள் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற காரணங்களினால், வருங்காலத்தில் பலருக்கு விசா கொடுக்க மறுப்பார்கள் என்பது உண்மை தான்.

இருப்பினும், அவர்கள் சுவிஸ் அரசுக்கு ஒரு நன்மை செய்துள்ளனர். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்ட அகதிக்கு நீதி கோரி, உறவினர்கள் வழக்காடி இருக்கலாம். அது சுவிஸ் அரசுக்கும் பெரியதொரு தலையிடியாக இருந்திருக்கும். ஆனால், சம்பந்தப் பட்ட உறவினருக்கு நீதியை விட, பொருளாதார தேவைகளே முக்கியமாகப் பட்டுள்ளன.

அன்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப் பட்டது, ஒரு ஆப்பிரிக்கராகவோ, அல்லது துருக்கியராகவோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அங்கு பெரியதொரு கலவரம் வெடித்திருக்கும். தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களும், கைதுகளும் தொடர்ந்திருக்கும். சுவிஸ் பொலிஸின் அளவுகடந்த வன்முறை பற்றி சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப் பட்டிருக்கும். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்காரர் மட்டுமல்லாது, நீதி அமைச்சரும் பதில் கூற நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள்.
சுவிஸ் அரசின் "நல்ல காலம்", செத்தது ஒரு தமிழன்.

அதனால் எந்தப் பிரச்சினையும் வரவில்லை. தமிழராவது போராடுவதாவது? சும்மா காமெடி பண்ணாதிங்க ஸார். இப்படியானவர்களை ஒன்று சேர்த்து தமிழீழம் காணலாம் என்று நினைத்தால்.... தப்புக் கணக்கு தலைவா!

நன்றி முகநூல்

0 commentaires :

Post a Comment