10/26/2017

மரபுரிமை காத்தல்.

யாழ்ப்பாணத்தில் மிருக பலியிடலுக்கெதிரான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்ச் சமூகம் உடனடியாக தனது எதிர்வினையை ஆற்றியாக வேண்டும். பௌத்த பெருந்தேசியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் இந்திய இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளுமிருந்து நாம் வெளியேறியாக வேண்டும். மிருக காருண்யம் என்பதற்கும் மரபு வழி இருப்பு என்பதற்குமிடையில் பாரிய வேறுபாடுகளுண்டு. Résultat de recherche d'images pour "மிருக பலி"


இலங்கைத் தமிழர் பண்பாட்டு மரபு ரீதியாக தனித்துவமான ஒரு இனம். இவ்வின இருப்பை இந்திய மேலாதிக்கம் இல்லாதொழித்து இந்த...ியாவின் பண்பாட்டு அடையாளங்களை எம்மீது திணிக்கும் வேலைத்திட்டங்களை தெளிவாக வெற்றிகரமாக நீண்ட நாட்களாகச் செயல்படுத்தி வருகின்றது. இதனுாடாக காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் தொப்புள் கொடி உறவு என்னும் மாயைக்குள் நாம் சிக்குண்டு நமக்கான அடையாளங்களை சிறிது சிறிதாக இழந்து வருகின்றோம். சிவசேனை, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்,ஹோலிப்பண்டிகை என எண்ணிலடங்கா நிகழ்ச்சி நிரலுக்குள் நாம் சிக்குண்டு போயுள்ளோம்.

சிங்களப் பெருந்தேசியம், மேர்வின் சில்வா போன்றவர்களுாடாக நிறைவேற்ற முடியாமற் போன மரபழிப்பின் வடிவத்தை நாமெல்லாம் போற்றிப் புகழும் நீதிபதி ஒருவரூடாக எம்மீது எதிர்க் கேள்விகளற்று இறக்கியிருக்கிறது.


சமயங் சடங்கு என்பதற்கப்பால் இங்கு மிருக பலியிடலுக்காக வளர்க்கப்படும் மிருகங்கள் எமது பாரம்பரிய இனங்களாகும். இத்தடை மூலம் எமது மரபு வழி இனங்களும் அழிவடைந்து போய் விடும். மரபுரிமையை காப்பதும் அதனை அடுத்த சந்ததிக்குக் கடத்துவதும் இன்று எம்முன்னேயுள்ள பாரிய சவாலாகும். தமிழர் இது தொடர்பான தீவிர கலந்துரையாடல்கள் ஊடாக இதற்கான எதிர்வினையாற்றல்களை ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது. வழமைபோலவே இதற்காகவும் தமிழ்த் தேசிய அரசியல் (தற்போதைய) தலைமைகள் வாய் திறக்கப் போவதில்லை.
மக்கள் வீதிக்கிறங்காமல் விடிவில்லை எமக்கு.

நன்றி  *முகநூல் .Thirunavukkarasu Gopahan

0 commentaires :

Post a Comment