10/29/2017

பிரபாகரன் மூட்டிய தீயால் கண்ட பயனென்ன? யோகேஸ்வரன் வைத்த திரி எத்தனை நாளைக்கு?

பிரபாகரன் மூட்டிய தீயால் கண்ட பயனென்ன? யோகேஸ்வரன் வைத்த திரி எத்தனை நாளைக்கு? தமிழ் இளைஞர்கள் மட்டுமல்ல முஸ்லிம்களும் பொறுமை காக்க வேண்டும்.L’image contient peut-être : ciel et plein air

"யோகேஸ்வரன் போன்ற   அரசியல்வாதிகள் தமது கையாலாகாத்தனங்களை மறைக்க இனவாதத்தை கையிலெடுக்கின்றனர்". என்று நேற்றைக்கு முன்தினம் வாழைச்சேனை "பஸ் தரிப்பிட முறுகல் நிலை" தொடர்பாக இடப்பட்ட  எனது பதிவு தொடர்பாக நான் பல்வேறு விதமான விமர்சனங்களை எதிர்கொள்ள நேர்ந்தது. எப்படியிருப்பினும் மகிழ்ச்சி.

எனது பதிவானது முஸ்லிம்களுக்கு சார்பானது என்கின்ற குற்றச்சாட்டுக்கள் கருத்தூட்டங்களிலும் உள்பெட்டி செய்திகளிலும் நிறையவே வந்தன. குறித்த பஸ்தரிப்பிடம் ( பஸ் நிலையம் அல்ல) அமைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது. ஆனால் அந்த இடத்தை சகோதர இன முஸ்லீம் ஆட்டோக்காரர்கள் உரிமைகொண்டாடுவது ஏற்புடையதல்ல.என்கின்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன. சரி அப்படியே எடுத்துக்கொள்வோம்.

ஒரு   பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட  வீதியில் ஆட்டோ வண்டிகள் நிறுத்தப்படுவதற்கு அந்த இடம் பாவிக்கப்பட்டு வந்தால், அது சட்டத்துக்கு முரணாக இருந்தால் அவர்களை அகற்றிவிட்டு புதிதாக அங்கே  பஸ் தரிப்பிடத்தை உருவாக்குவதற்கு முறையான நிர்வாக படிமுறைகள் உள்ளன.  அவற்றை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தெரிந்திருக்க வில்லையா?  அப்படி முறைப்படிஏன் நடைமுறைகளை செயல்படுத்த வில்லை? அப்படி அணுகியிருந்தால் அதற்கெதிராக யார் அடாவடித்தனம் பண்ணினாலும் பிரதேச சபை சட்டரீதியாக அதை எதிர்கொண்டிருக்கும்.போலீசார் தமது (நல்லாட்சி) கடமையை செய்திருப்பார்கள்.

அதை விடுத்து இவர் பெரிய ஹீரோ போல போய் கல்லு வைப்பாராம் பின்னர் முஸ்லீம் ஆட்டோக்காரர்கள் அதை எதிர்ப்பார்களாம்? பிறகு தமிழ் இளைஞர்கள் அவர்களை எதிர்ப்பார்களாம்.பிறகு அடிபிடி வருமாம்.

பிறகு தமிழரின் பூர்வீக நிலத்தை முஸ்லிம்களிடமிருந்து காப்பாற்ற சாமி போராடுகின்றாராம்.என்னய்யா கதை விடுறீங்கள்?

வடக்கு கிழக்கின் நிலபுலங்களை இணைத்து அங்கு வாழும் மக்களனைவரையும் ஆட்சி செய்ய தனிநாட்டு அரசாங்கத்தை  உருவாக்க போராடிய ஒரு இனம் இன்று ஒரு பஸ் தரிப்பிடத்தை உருவாக்க முடியாமல் தள்ளாடுவது இழிநிலைதானே? அது யாருடைய குற்றம்? யாருடைய அரசியல் வாங்குறோட்டுத்தனம்? அதுவும் யோகேஸ்வரன் எம்பியின் தொகுதியில்? அவரது சொந்த ஊரில் ஒரு பஸ் தரிப்பிடத்தை நிறுவ முடியாத நிலையில் அவர் இருப்பது கேவலமாக இல்லையா?  இதற்கு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து தமிழ் மக்களின் வாக்குகளை சூறையாடி அவர்களின் பெயரால் அரசியல் செய்து வரும் தமிழரசு கட்சியும் அதன் தலைவர்களும்தானே தானே பொறுப்பு சொல்ல வேண்டும்? 

அதைத்தொடர்ந்து இன்று ஞாயிறு தினம் கிரான் சந்தையை முஸ்லிம்களுக்கு மூடிவிட்டு தமிழர்கள் தனியா வியாபாரம் செய்ய போகின்றார்களாம்.   பெரிய வெற்றியாம் கொண்டாட்டம் நடக்கின்றது. இப்படி எத்தனை தடவை கடந்த காலங்களில் இந்த கிரான்,மற்றும் களுவாஞ்சிகுடி சந்தைகளை முஸ்லிம்களுக்கு கடந்த காலங்களில் மூடினோம். ஆனால் காலத்தின் ஓட்டத்தில் அந்த தடைகளுக்கு எல்லாம் என்ன நடந்தது?

 சரி இந்த முஸ்லிம்களுக்கான தடை சில வாரங்கள் நீடித்தால் இதன் எதிரொலியாக நாளை காத்தான்குடி பட்டினத்துக்குள் தினசரி சென்று கூலி தொழில் செய்து பிழைப்பு நடாத்திவரும் பல நூறு தமிழர்களுக்கு முஸ்லிம்கள்  தடை  போட்டால் அந்த ஏழைகளின் குடும்பங்களுக்கு சோறுட்டுவது யார்?


"தம்பிமாரே இதெல்லாம் வேலைக்குதவாது"  என்று சொன்னால் "நீ  சோனிக்கு பிறந்தவன்" என்பீர்கள். மகிழ்ச்சி

ஆனால்  என்ன நடக்கும்.அதன்பிறகு ??  அடுத்த வாரம் --அடுத்த மாதம்--  மீண்டும் பேச்சுவார்த்தை, மீண்டும் சுமூகநிலை, மீண்டும் ஒருமித்த வாழ்வு. அதில்தானே வந்து முடிய வேண்டும். அதன்பின்னர் முஸ்லிம்கள் கிரான் சந்தைக்கு வரத்தான் போகின்றார்கள்.

குறிப்பு உங்கள் சிந்தனைக்கு!

பென்னம்பெரிய படைபலம் கொண்டு வடக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது ஒரு லட்ஷம் முஸ்லிம்களை வடக்கிலிருந்து தென்னிலங்கை நோக்கி துரத்திய பிரபாகரன் இன்றில்லை. ஆனால் முஸ்லிம்கள் இன்று அங்கிருக்கின்றார்கள்.  வரலாற்றில் வென்றது யார்?  

எனவே இனவாதத்தை பரப்பி அரசியல் வியாபாரம் செய்யும் போக்கிரிகளுக்கு பின்னால் இளைஞர்கள் தயவு செய்து அணிதிரள வேண்டாம். வன்முறை வழி அழிவையே தரும் அதிலும் அதிகம் எம்மை நோக்கியே பாயும். ஓட்டப்பம் வீட்டைச்சுடும் என்று எம்முன்னோர்கள் சும்மா சொல்லவில்லை. முரண்பாடுகள் இல்லையென்பதல்ல.அனைத்துக்கும் ஒரே வழி உரையாடல் ஒன்றே.

எம்.ஆர்.ஸ்டாலின்




»»  (மேலும்)

10/27/2017

சுவிஸ் தமிழர் படுகொலை சொல்வதென்ன?

சுவிஸ் தமிழர் படுகொலை சொல்வதென்ன?
நீதியை விட, பொருளாதார தேவைகளை முன்னிறுத்தும் சுயநல சமூகம்
 *கலையரசன்

Image associéeதமிழர்களை நம்பி எந்தப் போராட்டமும் நடத்த முடியாது. நடுத்தெருவில் தவிக்க விட்டு ஓடி விடுவார்கள். அந்தளவுக்கு சுயநலவாதிகளால் நிறைந்த சமூகம்.

சுவிட்சர்லாந்தில் சில வாரங்களுக்கு முன்னர், சுவிஸ் பொலிஸ் ஒரு ஈழத் தமிழ் அகதியை சுட்டுக் கொன்றது. அது பற்றிய சர்ச்சை காரணமாக, சம்பந்தப் பட்ட போலீஸ்காரர் மீது தவறிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. சிலநேரம் வேலையில் இருந்து இடைநிறுத்தி இருக்கலாம்.

அந்த சம்பவத்தில் பலியான தமிழ் அகதி கையில் கத்தியுடன் குத்துவதற்கு தயாராக நின்றதாக பொலிஸ் கூறியது. ஆனால், தமக்குத் தெரிந்த வரையில் "அவர் சாந்தமான குணமுடையவர். சண்டைக்கு போகும் தன்மை கொண்டவர் அல்ல..." என்று உறவினர்கள் கூறினார்கள்.

அதே நேரம், பலியான அகதியின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக, சுவிஸ் அரசு, இலங்கையில் இருந்த அவரது உறவினர்களுக்கு விசா கொடுத்து வரவழைத்தது. தற்போது அந்த உறவினர்கள் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வருகின்றன. இது போன்ற காரணங்களினால், வருங்காலத்தில் பலருக்கு விசா கொடுக்க மறுப்பார்கள் என்பது உண்மை தான்.

இருப்பினும், அவர்கள் சுவிஸ் அரசுக்கு ஒரு நன்மை செய்துள்ளனர். பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப் பட்ட அகதிக்கு நீதி கோரி, உறவினர்கள் வழக்காடி இருக்கலாம். அது சுவிஸ் அரசுக்கும் பெரியதொரு தலையிடியாக இருந்திருக்கும். ஆனால், சம்பந்தப் பட்ட உறவினருக்கு நீதியை விட, பொருளாதார தேவைகளே முக்கியமாகப் பட்டுள்ளன.

அன்று பொலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப் பட்டது, ஒரு ஆப்பிரிக்கராகவோ, அல்லது துருக்கியராகவோ இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அங்கு பெரியதொரு கலவரம் வெடித்திருக்கும். தன்னெழுச்சியான ஆர்ப்பாட்டங்களும், கைதுகளும் தொடர்ந்திருக்கும். சுவிஸ் பொலிஸின் அளவுகடந்த வன்முறை பற்றி சர்வதேச ஊடகங்களில் விவாதிக்கப் பட்டிருக்கும். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸ்காரர் மட்டுமல்லாது, நீதி அமைச்சரும் பதில் கூற நிர்ப்பந்திக்கப் பட்டிருப்பார்கள்.
சுவிஸ் அரசின் "நல்ல காலம்", செத்தது ஒரு தமிழன்.

அதனால் எந்தப் பிரச்சினையும் வரவில்லை. தமிழராவது போராடுவதாவது? சும்மா காமெடி பண்ணாதிங்க ஸார். இப்படியானவர்களை ஒன்று சேர்த்து தமிழீழம் காணலாம் என்று நினைத்தால்.... தப்புக் கணக்கு தலைவா!

நன்றி முகநூல்
»»  (மேலும்)

10/26/2017

மரபுரிமை காத்தல்.

யாழ்ப்பாணத்தில் மிருக பலியிடலுக்கெதிரான உயர் நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாக தமிழ்ச் சமூகம் உடனடியாக தனது எதிர்வினையை ஆற்றியாக வேண்டும். பௌத்த பெருந்தேசியத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் இந்திய இந்துத்துவாவின் நிகழ்ச்சி நிரலுக்குள்ளுமிருந்து நாம் வெளியேறியாக வேண்டும். மிருக காருண்யம் என்பதற்கும் மரபு வழி இருப்பு என்பதற்குமிடையில் பாரிய வேறுபாடுகளுண்டு. Résultat de recherche d'images pour "மிருக பலி"


இலங்கைத் தமிழர் பண்பாட்டு மரபு ரீதியாக தனித்துவமான ஒரு இனம். இவ்வின இருப்பை இந்திய மேலாதிக்கம் இல்லாதொழித்து இந்த...ியாவின் பண்பாட்டு அடையாளங்களை எம்மீது திணிக்கும் வேலைத்திட்டங்களை தெளிவாக வெற்றிகரமாக நீண்ட நாட்களாகச் செயல்படுத்தி வருகின்றது. இதனுாடாக காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் தொப்புள் கொடி உறவு என்னும் மாயைக்குள் நாம் சிக்குண்டு நமக்கான அடையாளங்களை சிறிது சிறிதாக இழந்து வருகின்றோம். சிவசேனை, விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்,ஹோலிப்பண்டிகை என எண்ணிலடங்கா நிகழ்ச்சி நிரலுக்குள் நாம் சிக்குண்டு போயுள்ளோம்.

சிங்களப் பெருந்தேசியம், மேர்வின் சில்வா போன்றவர்களுாடாக நிறைவேற்ற முடியாமற் போன மரபழிப்பின் வடிவத்தை நாமெல்லாம் போற்றிப் புகழும் நீதிபதி ஒருவரூடாக எம்மீது எதிர்க் கேள்விகளற்று இறக்கியிருக்கிறது.


சமயங் சடங்கு என்பதற்கப்பால் இங்கு மிருக பலியிடலுக்காக வளர்க்கப்படும் மிருகங்கள் எமது பாரம்பரிய இனங்களாகும். இத்தடை மூலம் எமது மரபு வழி இனங்களும் அழிவடைந்து போய் விடும். மரபுரிமையை காப்பதும் அதனை அடுத்த சந்ததிக்குக் கடத்துவதும் இன்று எம்முன்னேயுள்ள பாரிய சவாலாகும். தமிழர் இது தொடர்பான தீவிர கலந்துரையாடல்கள் ஊடாக இதற்கான எதிர்வினையாற்றல்களை ஆரம்பிக்க வேண்டிய தருணம் இது. வழமைபோலவே இதற்காகவும் தமிழ்த் தேசிய அரசியல் (தற்போதைய) தலைமைகள் வாய் திறக்கப் போவதில்லை.
மக்கள் வீதிக்கிறங்காமல் விடிவில்லை எமக்கு.

நன்றி  *முகநூல் .Thirunavukkarasu Gopahan
»»  (மேலும்)

10/25/2017

திருப்பெருந்துறை -அது சபிக்கப்பட்ட நிலம்....

அது சபிக்கப்பட்ட நிலம்....*தோழர் திலீப்குமார்
L’image contient peut-être : plein air

திருப்பெருந்துறையில் அமைந்துள்ள குப்பை மேடு தொடர்பில் அண்மைக்காலமாக மக்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்களை நடாத்தி வந்த விடயம் யாவரும் அறிந்ததே,
மட்டக்களப்பு நகரிலிருந்து 3km தொலைவில் அமைந்துள்ள இப் பிரதேசத்தில் 400க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கின்றன.
உரிய வகையில் குப்பைகள் அகற்றப்படாமையால் நீண்டகாலமாக துன்பம் அனுபவிக்கும் மக்கள் குப்பை மேட்டினை அங்கிருந்து முழுமையாக அகற்றுமாறும் கழிவுகளை வேறு இடத்திற்கு எடுத்து செல்லுமாறும் தமது கோரிக்கைகளை முன் வைத்து வருகின்றனர்.

100மில்லியன் செலவில் ஆரம்பிக்கப்பட்டதாக அறியப்படும்
இந்த திட்டம் எப்படி செயற்படுகிறதென்றால்
வவுசர் வண்டிகள் மூலம் கொண்டு செல்லப்படும் மலசலகூட கழிவுகள் திறந்த வெளியில் வீசப்படுகின்றன.
குப்பையில் இருந்து வெளியேறும் நச்சுத்தன்மை கொண்ட நீரானது சிறிய வடிகான் மூலம் மட்டு வாவியில் கலக்கின்றது,
மழைக்காலத்தில் வடிகான் நிரம்பி மக்கள் குடியிருப்பு பகுதிகளிலேயே இத்தகைய கழிவு நீர் பரவுவதாக அறிய முடிகிறது,
குடிக்க முடியாத நிலையிலேயே நிலத்தடி நீர் மாசுபட்டுக் கிடக்கிறது,
பறவைகள் இஷ்டத்திற்கு கழிவுகளை காவிக்கொண்டு பறக்கின்றன
அவை இறுதியில் வீடுகளிலும் கிணறுகளிலுமே வந்து சேரும்,
வெறும் 10 அடி இடைவெளி வீதி ஒன்று தான் மக்கள் குடியிருப்பையும்
குப்பை மேட்டையும் பிரித்து நிற்கிறது,
சகிக்க முடியாத துர்நாற்றம் வேறு...L’image contient peut-être : plein air et nature

அண்மையில் குப்பை மேடு தீப்பற்றி தொடர்ச்சியாக சில நாட்கள் எரிந்த போது முழு ஊரும் சாம்பல் மண்டிக்கிடந்தது
நான் கூட தீப்பற்றி எரிந்த குப்பை மேட்டினை பார்வையிட்டு வந்து அன்றைய இரவு முழுவதும் மூச்செடுக்க கஷ்டப்பட்டேன்.
ஆனாலும் குப்பை மேட்டின் அருகில் வாழும் குழந்தைகள் ஒவ்வொரு நாளும் அவஸ்தையான அந்த சூழலிலேயே படுத்துறங்கியிருப்பார்கள்.
கிராமசேவையாளர் அலுவலகம், பாலர் பாடசாலை போன்றவை இயங்குவதற்காய் அமைக்கப்பட்ட பொதுசனக்கட்டிடம் பொருத்தமற்ற சூழலால் கைவிடப்பட்டு பாழடைந்து கிடக்கிறது, ஊரே வெறிச்சோடிக் கிடக்க  இது திருப்பெருந்துறையின் பிரச்சினை என்று இயல்பாய் கடந்து செல்கிறோம். அங்கு வாழ்பவர்களும் எங்களை போன்ற ஜனங்கள் தானே?
மட்டுவாவியின் தூய்மையும் அழகும் கெடுவதும்
உரிய பராமரிப்பற்ற அபாயகரமான குப்பை மேடு பொதுமக்கள் குடியிருப்பின் மத்தியில் அமைந்திருப்பதும் ஒட்டு மொத்த மட்டக்களப்பின் பிரச்சினை தானே?
நாம் வாழ்வதற்கும்  எமது குழந்தைகள் நின்மதியாய் உறங்குவதற்கும் ஆரோக்கியமான சூழல் இருக்கிறது. நமது வீட்டு குப்பைகள் அகற்றப்பட்டு திருப்பெருந்துறையில் வீசப்பட்டால் போதும்  என்று கருதுவது கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனமான மனோநிலை தவிர வேறொன்றுமில்லை.
அந்த மக்கள் அத்துமீறி குடியேறினார்கள் என்று சிலர் வாதிடக்கூடும்
அவர்கள் அறிந்து கொள்வதற்காகச் சொல்கிறேன்
மட்டு விமானப்படை தளத்திற்காக காணிகள் பாதுகாப்பு அமைச்சால் சுவீகரிக்கப்பட்டு 2நாட்களில் வெளியேற சொல்லி நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களும், வீரமுனை சிக்கல்களால் இடம்பெயர்ந்து
பின்னர் முஸ்லீம் காங்கிரஸ் அமைச்சரான
அஷ்ரப் அவர்களால் மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுமே
இங்கு பெரும்பான்மையாக வசிப்பவர்கள்.


இரண்டு கேள்விகள்

1.இங்கே குப்பையிலிருந்து பெருமளவில் பிரித்தெடுக்கப்படும்
பிளாஸ்டிக், காட்போட்,உலோகங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள்
யாருக்கு என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது?
இது மூலம் பெறப்படும் வருமானம் மாநகர சபையில் கணக்கு காட்டப்படுகின்றதா?



2.செங்கலடி கொடுவாமடுவில்
பல மில்லியன் ரூபாய் செலவில் நவீன முறையில் குப்பை சேகரித்து மீள் சுழற்சி செய்யும் இடம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு பகுதிகளில் இருந்தும் இங்கு குப்பைகள் கொண்டு செல்லப்படும்போதும்  மட்டக்களப்பு மாநகர சபை மட்டும் ஏன் அப்படி செய்யாமல் திருப்பெருந்துறை பிரச்சினையினை நீடிக்கின்றது?


நன்றி முகநூல்
»»  (மேலும்)

10/23/2017

வைத்திய சேவை பணம்பண்ணும் தொழிலாகியதன் விளைவு

Dr v.o.g சரவணனின் மாறுபட்ட சத்திரசிகிச்சையால் கொல்லப்பட்ட சிவகுமார் லதாசிறின் பூதவுடல் மயானத்தை நோக்கியபோதும் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமும்..L’image contient peut-être : une personne ou plus, personnes debout, foule, mariage et plein air
பிரசவத்திற்காக மட்டக்களப்பு பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சடலமாக திரும்பினார் ,வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம்..!
தாய்மையடையும் பெண்கள் பல்வேறு கனவுகளுடன் வைத்தியசாலைகளுக்கு பிரசவத்திற்காக செல்கின்றனர். வைத்தியசாலையில் இடம்பெறும் அசமந்த போக்குகள் அந்த கனவினையே கலைத்து விடுகின்றது.
அவ்வாறான சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. மட்டக்களப்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் சடலமாக வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதற்கு எதிராகவும் வைத்திய சேவையினை முறையாக முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உயிரிழந்த பெண்ணின் சடலத்துடன் விசித்திரமான முறையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது.
கறுப்பு துணியை அணிந்தவாறு சடலம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, குறித்த பெண் உயிரிழந்த வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் நடாத்தப்பட்டதை தொடர்ந்து, சடலம் ஊர்வலமாக கள்ளியங்காடு பொதுமயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நான்காம் குறுக்கு வீதியை சேர்ந்த 45 வயதுடைய திருமதி லதாசிறி சிவகுமார் என்னும் பெண் பிரசவத்திற்காக மட்டக்களப்பின் பிரபல தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரை பிரபல மகப்பேற்று வைத்திய நிபுணர் ஒருவர் பரிசோதனை செய்து பின்னர் சத்திரசிகிச்சை செய்ய வேண்டும் எனக்கூறியுள்ளார். பின்னர் அப்பெண் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையினை பிரசவித்துள்ளார்.
பிரசவத்தின் பின்னர் வைத்தியசாலையின் அறையொன்றுக்குள் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர், குறித்த தாயின் உடம்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அது தொடர்பில் வைத்தியசாலையில் அறிவிக்கப்பட்டும் முறையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லையென உறவினர்கள் தெரிவித்தனர்.
அங்கு கடமையில் இருந்த வைத்தியர்களும் தாதியர்களும் குறித்த பெண் தொடர்பில் முறையான நடவடிக்கையெடுக்கப்படவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் சத்திர சிகிச்சை செய்யும்போது ஆபத்து ஏற்பட்டால் அதற்கான தீவிர சிகிச்சைகளை செய்வதற்கான உரிய வசதிகள் அந்த தனியார் வைத்தியசாலையில் காணப்படவில்லையெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
சாதாரணமாக கதைத்துக் கொண்டிருந்த குறித்த தாய் திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டபோது அங்கிருந்த தாதியரினால் சுவாச நோய் என்று கூறப்பட்டு, மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அதுவரையில் எந்த வைத்தியரும் வரவில்லையெனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
மூச்சுத்திணறல் அதிகரித்தபோதே வைத்தியர் வந்து பரிசோதித்துவிட்டு பரபரப்பான முறையில் மருத்துவம் வழங்கிய நிலையில், அங்கு வந்த மகப்பேற்று வைத்திய நிபுணர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் கூறியுள்ளார்.
குறித்த பெண் அதிகாலை 2.45க்கு மிகமோசமான நிலைக்கு சென்ற நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லுமாறு மகப்பேற்று வைத்திய நிபுணரால் பணிக்கப்பட்ட நிலையில் அதிகாலை 4.30 மணிக்கு பின்னரே அம்பியுலன்ஸ் கொண்டு வரப்பட்டு குறித்த பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
ஆனால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையின்போது அது மாரடைப்பினால் ஏற்படவில்லை. குழந்தை பிரசவத்திற்காக மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின்போது ஏற்பட்ட தவறு காரணமாக இரத்த குழாய் ஒன்றில் ஏற்பட்ட இரத்தக் கசிவே காரணம் என கண்டறியப்பட்டதாகவும் அது தொடர்பில் தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த பெண்ணின் மரணத்தில் தங்களுக்கு பலத்த சந்தேகம் நிலவுவதாகவும் குறித்த பெண்ணை தாங்கள் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு கூறியபோது பல தடைகள் ஏற்படுத்தப்பட்டதாகவும் பல தடைகளுக்கு மத்தியில் நீதிமன்றில் அனுமதி பெற்று குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டதாக உயிரிழந்தவரின் கணவரான சிவகுமார் தெரிவித்தார்.
இது போன்ற சம்பங்கள் இனிவரும் காலங்களில் யாருக்கும் நடக்ககூடாது என்பதற்காக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
»»  (மேலும்)

10/22/2017

புதிய பெயர் --சீன உதவி

புதிய பெயர் மகிந்த ஆட்சியில் சீன ஆக்கிரமிப்பு  என்பது நல்லாட்சியில் சீன உதவி என மாற்றப்பட்டுள்ளது
Résultat de recherche d'images pour "autoroute vide"


நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைகளை சீன நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும குற்றஞ்சுமத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் அதிவேக நெடுஞ்சாலைகளை நிர்மாணிக்க அரசாங்கம் கடன் பெற்றுக்கொண்டுள்ளமை நகைப்பிற்குரிய எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வலஸ்முல்ல, விஜயசிறிபுர பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் கைதானவர்களின் வீடுகளுக்குச் சென்று திரும்பியபோது ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிகவேக நெடுஞ்சாலை, கொழும்பு கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை ஆகியவற்றை அரசாங்கம் சீன நிறுவனங்களுக்கு குத்தகைக்குவிட தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

கிழக்காசிய நாடுகளில் பெரும்பாலும் அதிவேக நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்படுகின்றன.
நெடுஞ்சாலைகளை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம் அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி கிடைப்பதுடன் வீதி பராமரிப்பு, நிர்வாக செலவுகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் கையாளும் என்பது குறிப்பிடத்தக்கது.
»»  (மேலும்)

10/19/2017

 எழுத்து பிழையுடன் பேசும் ரீயூசன் மாஸ்டரும் எம்பியுமான அமல்

L’image contient peut-être : 1 personne, texteகாலத்துக்கு தேவையான அவசியமான கருத்து ஒன்றை எங்கள் மட்டக்களப்பு மாவட்ட  தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ வியாழேந்திரன் (அமல்) அவர்கள் கூறியிருக்கின்றார். அவரது கருத்துத்தான் எமது பல இளைய சமூகத்தினரின் கருத்தாகவும் உள்ளது.
தங்களுக்கு வாழ்த்துக்களும் வரவேற்புக்களும் ஐயா. ஆனாலும் ஒரு சின்ன எழுத்துப்பிழையுள்ளது.
தமிழ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவோர் துரோகிகள் என்பதில் "வெளியேறுவோர்" என்பது "வெளியேறாதோர்" என்று  வந்திருக்க வேண்டும்.

»»  (மேலும்)

10/13/2017

வாழ்வாங்கு வாழ்ந்த தோழர் பரா- பத்தாண்டு நினைவுக் கருத்தரங்கு

வாழ்வாங்கு வாழ்ந்த தோழர் பரா மாஸ்டர் அவர்கள்  மறைந்த பத்தாண்டு நிறைவையொட்டிய நினைவுக் கருத்தரங்கு ஒன்று லண்டன் நகரில் நடைபெறவுள்ளது.Résultat de recherche d'images pour "பரா குமாரசாமி"

இலங்கையின் இடதுசாரி பரப்பரியத்தின் மூத்த தோழர்களில் ஒருவரும் தொழிற்சங்க வாதியுமான   பரா குமாரசாமி அவர்களின் பத்தாண்டு நினைவு தினத்தையொட்டிய இக்கருத்தரங்கானது எதிர்வரும் 16/12/2017 அன்று நடத்தப்பட ஏற்பாடாகியுள்ளது. தோழர் பரா புகலிட இலக்கியத்தின் மூல வேர்களில் ஒருவராகவும் திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



»»  (மேலும்)

10/12/2017

சக மனிதர்களின் உரிமைகளை தட்டிப் பறிக்கும் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருகிறார்கள்

என்ன பேராசைகள்--விஜய பாஸ்கர்  Résultat de recherche d'images pour "north sri lanka"
------------------------
தமிழ் ஈழம் போய் வடக்கும் கிழக்கும் வேண்டும்.புதிய அரசியல் போராட்டம்.ஒவ்வொரு தடவைகளிலும் ஏதோ ஒரு காரணத்தை உருவாக்கி இன முரண்பாடுகளை வளர்க்கிறார்கள்.
இனம் இனம் என்று கத்தும் இவர்கள் தமிழினத்துக்கு என்ன செய்தார்கள்? 1948 இல் இருந்து இன்றுவரை பகைகளை உருவாக்குவதே தமிழர்களின் அரசியலாகவுள்ளது.ஏதோ ஒரு வகையில் நல்லதைச் செய்பவன் எல்லாம் துரோகிகள் என மக்களை நம்பவைத்து விடுகின்றனர்.நல்ல விசயங்களை புறக்கணிக்கின்றனர்.
1956 பண்டா செல்வா ஒப்பந்தம் தொடங்கி சந்திரிகா வரை நல்ல தீர்வுக்கான சந்தர்பங்கள் கிடைத்தன.எல்லாமே தவறிப்போய் விட்டன.
தமிழர் அரசியல் என்பது யாழ் குடாநாட்டு வெள்ளாளரின் மையப் புள்ளியாகவே உள்ளது.இவர்களின் ஆசைகளே தமிழர் பிரச்சினைகளாக திரிபு படுத்தப்படுகின்றன.

1800 களின் தொடக்கத்தில் மூன்று வீதமாக இருந்த வெள்ளாளர்கள் எப்படி பெரும்பான்மை சமூகமாக மாறியது? வடமாகாணத்தில் எண்பதுவீதமான நிலங்கள் அவர்களுக்கே சொந்தம்.இது எப்படி?புதிதாக உருவான சகல குடியேற்ற திட்டங்களில் முழு நிலமும் வெள்ளாளருக்கு வழங்கப்பட்டது.இங்கே நிலமற்று வாழும் ஒடுக்கப்பட்ட சமூக மக்களுக்கு ஒரு வீதம் கூட வழங்கப்படவில்லை.மன்னார் தவிர்ந்த வன்னி நிலப்பரப்பில் எங்காவது இஸ்லாமியர்களுக்கு நிலம் இருக்கிறதா? வழங்கப்பட்டதா?
திருகோணமலை கந்தளாய் குடியேற்ற திட்டத்திலும் காணிகளைப் பெற்றார்கள்.தம்பலகாமத்தில் வாழும் பெரும்பான்மையோர் யாழ்ப்பாண வெள்ளாளர்களே.அம்பாறை கல்லோயா திட்டத்திலும் வடக்கே வாழும் வெள்ளாளருக்கு காணிகள் உண்டு.மட்டக்களப்பிலும் அப்படித்தான்.இராதுரைகூட யாழ்ப்பாண தமிழரே.புலிகளின் தளபதி குமரப்பா,புலேந்திரன் எல்லாம் யாழ்ப்பாண தமிழர்களே.
சிங்கள குடியேற்றம்,இஸ்லாமிய குடியேற்றம் என புலம்புவோர்கள் இவற்றைக் கவனிப்பது இல்லை.அரசாங்க பதவிகள் அத்தனையையும் சுருட்டி வைத்திருக்கிறார்கள்.ஆனால் தரப்படுத்தலை எதிர்க்கிறார்கள் .
சக மனிதர்களின் உரிமைகளை தட்டிப் பறிக்கும் யாழ்ப்பாண வெள்ளாளர்கள் வடக்கையும் கிழக்கையும் இணைக்க கோருகிறார்கள்.இவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?
1948 தொடங்கி இன்றுவரை தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முயலவில்லை.அது சாதியாக,மதமாக,பிரதேசமாக பிரிந்தே உள்ளது.முரண்பாடுகளை பூசி மெழுகி தமிழ் தேசியம் என்றால் எப்படி நம்புவது?அரசியல பதவி கொடுத்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா?
வடக்கும் கிழக்கும் இணைவதா என்பதை கிழக்கு மக்களே தீர்மானிக்கவேண்டும்.தமிழர்கள் தொடர்பில் இஸ்லாமிய தமிழர்களின் அச்சம் நியாயமானதே.
வடக்கு அரசியல்வாதிகளும் மக்களும் எந்த தவறுகளையும் ஒத்துக் கொண்டதில்லை.நடந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்டதும் இல்லை.அதை நிவர்த்தி செய்ய முயன்றதும் இல்லை.
அற்ப பதவிகளுக்காக தமது உரிமைகளை கிழக்கு மாகாண மக்கள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.ஒரு சிறுபான்மை வெள்ளாள சமூகத்தின் பேராசைக்காக கிழக்கை வடக்கோடு இணைக்க முடியாது.இஸ்லாமிய மக்களுக்கும் ஒரு பாதுகாப்பான இடம் தேவை.அது கிழக்கு மட்டுமே.
தமிழின் பெயரால் சிறுபான்மையான வெள்ளாள சமூகம் வடக்கையும் கிழக்கையும் ஆள்வதை அனுமதிக்க முடியாது.வட கிழக்கு என்பது யாழ்பாண வெள்ளாளரின் பேராசை.இவர்களின் பேராசையும் பிடிவாதமும் கிடைப்பதையும் மீண்டும் கிடைக்காமல் செய்யலாம்.

நன்றி *Vijaya Baskaran -முகநூல்
»»  (மேலும்)

10/10/2017

சே -50 வது ஆண்டு நினைவில்

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ட்டோ குவேரா டி லா செர்னா  ஜுன் 14 1928 அக்டோபர்-9இ1967அர்ஜெண்டினாபிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர்இ மருத்துவர், மார்க்சியவாதி,அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்கு கொண்ட போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.  Image associée


மார்க்ஸியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.


கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடி போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும்இ புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர்இ கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.


பொலிவியாவில் சேகுவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் அக்டோபர் 9-1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்கு பெற்றவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படிஇ சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)
»»  (மேலும்)

10/02/2017

லாஸ் வேகஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு: 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் உள்ள மாண்டலே பே ஹோட்டல் அருகே பலத்த துப்பாக்கிச் சூட்டில்20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும். இந்த சம்பவத்தில் குறைந்தது 100 பேர் காயமடைந்தனர்.  லாஸ் வேகாஸ் சூதாட்ட விடுதி அருகே துப்பாக்கி சூடு: பலர் பலி?மாண்டலே பே சூதாட்ட விடுதியின் மேல் மாடியில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக இந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விடுதியில் ஒரு நாட்டுப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த துப்பாக்கி சூடு தொடர்பாக அடையாளம் காணப்பட்ட உள்ளூர்வாசியான சந்தேக நபர் போலீஸ் அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அமெரிக்க நேரப்படி இரவு 10.30 மணிக்கு நடந்த இந்த துப்பாக்கி சூட்டில் பலர் பலியாகி இருக்கக்கூடும் என்று தகவல்கள் கூறுகின்றன. சம்பவம் நடந்த இந்த இடத்தை தவிர்க்குமாறு மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் குறைந்தது 100 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக ஒரு மருத்துவமனை பேச்சாளர் அமெரிக்க ஊடகத்தில் தெரிவித்தார்.
»»  (மேலும்)