திண்டுக்கல்லில் சிலோன் டீ (Ceylon Tea)
அரசியல் பணிகளும், கட்சிப்பணிகளும், பாராளுமன்ற பணிகளும என நாளொன்று நாற்பத்திரண்டு மணித்தியாலங்களாக இருந்தால் என்ன என ஏங்கிக்கொண்டிருக்கும் இந்த நாட்களில் மலையகக் கலை, இலக்கிய பண்பாட்டு வடிவங்களினை ஆய்வரங்கமாக இடம்பெற்ற பன்னாட்டு கருத்தரங்கத்தில் பங்குகொள்ள தமிழ்நாடு, திண்டுக்கல், காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்திற்கு மலைநாட்டு எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினராக சென்றிருந்தேன்.
இரண்டுநாள் அமர்வுகளில் ஒன்றாக 'மலையகக் கவிதை இலக்கியச் செல்நெறி' என்ற கட்டுரையையும் , நிறைவாக நன்றியுரையையும் வழங்கிவிட்டு தங்கியிருந்த பல்கலைக்கழக விருந்தினர் விடுதிக்குள் நுழைந்தபோது ஆய்வரங்கில் கலந்துகொண்ட முனைவர் பட்டத்திற்கான ஆய்வு மாணவர்கள் தனியான சந்திப்பு ஒன்றை செய்ய நேரம் ஒதுக்க முடியுமா என கேட்டார்கள்.
'மலையகத் தமிழர்கள் பற்றிய கருத்தரங்கு இரண்டுநாள்.. நடைபெற்றது.. இன்னுமே எங்களுக்கு சரியான புரிதல் வரவில்லை சார். இலக்கியங்களுக்கு அப்பால் இந்த வரலாற்றை சுருக்கமாக சொல்லமுடியுமா? ஈழத்தமிழர்களில் இருந்து இவர்கள் எவ்வாறு வேறுபடுகிறார்கள்' என முனைவர் பட்ட மேலாய்வு மாணவரான பிரபுராம் முன்வைத்த கேள்வியுடன் உரையாடல் உடனே ஆரம்பமாகியது.
200 வருடத்திற்கு முன்பு தமிழ் நாட்டில் இருந்து சென்ற மக்கள் என்பதில் தெளிவு பெற்றிருந்த மாணவர்கள் தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்கும் ஸ்ரீமா சாஸ்திரி (1964) ஒப்பந்தத்தின் கீழ் தமிழகம் (தாயகம்) திரும்பியோருக்கும் இடையில் வேறுபாட்டை புரிந்துகொள்ள சிரமப்பட்டார்கள். ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் இலங்கையிலேயே அவர்களுக்கு இந்திய கடவுச்சீட்டு வழங்கி இந்தியாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தியத் தமிழர்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலும் தமிழகமெங்கும் சிறுஅளவில் ஆந்திரா, கேரளா, அந்தமான் தீவுகளிலும் கூட சிலோன் காலனிகளில் வாழ்கிறார்கள் என்றேன். என்னுடைய கட்டுரைத்தொடரான 'தமிழ்நாட்டின் சிலோன்காரர்கள்' பற்றியும் கூட சொன்னேன்.
உரையாடலை இடையிடையே கேட்டுக்கொண்டிருந்த விருந்தக உதவியாளர் அர்ஜுன்: 'சார்... இங்கே பின்னாடி ஒரு சிலோன் காலனி இருக்குதுசார்... அங்ககூட சிலோன்காரவுங்கதான் இருக்காங்க. என் வீட்டுல கொத்தனாரு வேல பார்க்குற சகாதேவன்னு ஒருத்தர் அங்கதான் குடியிருக்காரு' என்றார்.
ஆய்வு மாணவரான செல்வம். ஆமா.. நான் கூட கேள்விபட்டிருக்கேன் காலையில் ஒரு ரவுன்ட போய் பார்க்கலாமா சார்.. என்றார்.
இன்று காலை கூட இந்த பல்கலைகழக எல்லை முடியும்வரை நடைப்பயிற்சிக்காக சென்று வந்தேன். ஒன்றும் ஆட்சேபனை இல்லை. விடிந்ததும் சந்திக்கலாம் என இரவு 12 மணியளவில் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொண்டோம். பிரபுராம், கிறிஸ்தோபர், செல்வம் எனும் ஆர்வம் மிக்க ஆய்வு மாணவர்கள் இப்போது நண்பர்களாகியிருந்தார்கள்.
காலை 6.30 அறைக்கு வெளியே உரையாடல் சத்தம் கேட்டது. மாணவ நண்பர்கள் வந்துவிட்டதை உணர்ந்த நான் உடன் தங்கியிருந்த தெளிவத்தை ஜோசப் ஐயாவுக்கு காப்பி ஒன்றை கொடுக்குமாறு உதவியாளரிடம் சொல்லிவிட்டு உடற்பயிற்சிக்குரிய உடையுடன் கிளம்பிவிட்டேன்.
முதல் நாள் நான் உடற்பயிற்சியாக நடைபயிற்சி செய்த அதே வழி. முதல் நாள் நடக்கும்போது தோழர் மு.சி கந்தையா (கண்டி - கூடலூர்), அவரது நண்பர், பூபாலன் (தலவாக்கலை - மேட்டுப்பாளையம்), சுதர்சன் (தஞ்சாவூர் பல்கலைக்கழக ஆய்வு மாணவர் - யாழ்.பல்கலை), பொ.சந்திரசேரகன் (தஞ்சாவூர் பல்கலைக்கழக ஆய்வு மாணவர்- யாழ்.பல்கலை), ஆகியோருடன் உரையாடிச்சென்ற அதே வழி.. இப்போது இந்திய நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு சென்றேன்.
காலையில் சிவா என்னும் முன்னாள் மாணவரும் இணைந்துகொண்டிருந்தார். இப்போது மதுரையில் கல்லூரி உதவி பேராசிரியராக பணியாற்றுகிறார். வலதுகையில் கைப்பெசியை கவனமாக பிடித்து நடந்தார். 'என்ன நான் பேசுதை கைப்பேசியில் பதிவு செய்தகொள்கிறீர்களா என்றேன்'. 'இல்ல சும்மாதான்... ஒரு தேவைக்கு பயன்படுமேனுதான்' என்று பதட்டமானார். 'நான் சந்தேகப்படவில்லை. அவதானித்தேன். அவ்வளவுதான். இதில் ஒன்றும் ரகசியமில்லை. சொல்லவேண்டியவைதான்' என தோளில் தட்டினேன்.. தொடர்ந்து நடந்தோம்.
அவர்கள் துணையுடன் ஒரு கேட் வழியாக பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே வந்தோம். அருகில் ஒரு குடியிருப்புக்கு போகும் வழி. ஓரு 'ஸ்கூட்டி' எங்களைக் கடந்து சென்றது. ஒரு சிறுமியிடம் சகாதேவன்னு ஒருத்தர் இங்கே இருக்காரா என்று கேட்டார்கள் நண்பர்கள். 'இதோ இப்போ வண்டியில போனாரே' என சிறுமி கையைக்காட்டினார். எங்களைக்கடந்து சென்ற ஸ்கூட்டியில் இருந்து இறங்கியவர்க்கு கையசைத்த நண்பர்கள் 'உங்களைத்தான் பார்க்க வருகிறோம்' என்றார்கள்.
அது ஒரு ஆலய முன்றல். பேச்சுகொடுத்தோம். 'சார் சிலோன்ல இருந்து வந்திருக்காரு. நீங்க சிலோன்னு கேள்விப்பட்டோம். அதான் பார்த்து பேசிட்டு போகலாம்னு...' செல்வம் ஆரம்பித்தார். சகாதேவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி.
'சிலோன்ல நீங்க எந்த ஊர்' என்றேன்.
ராகலை, பனியகணக்கு என்றார் சகாதேவன். நான் எதிர்பார்த்தது.
'எனது தொகுதி மக்கள்' என்றேன். மாணவ நண்பர்கள் எதிர்பார்க்கவில்லை.
'எத்தனையாம் ஆண்டு வந்தீர்கள்'
'1986 ங்க... அப்போ எனக்கு 9 வயசு இருக்கும்'
'என்ன தொழில் செய்கிறீர்கள்......?'
'கொத்தனாருங்க... இந்த கோயிலு கூட நான்தான் கட்டினேன்'
ஆதாரமாக நின்றது அந்த சிறிய அம்மன் கோவில்.
எங்களை அவதானித்த இன்னமொருவர் வந்தார்.
உங்கள் பெயர் என்ன ?
சுப்பிரமணியம். மணினு கூப்பிடுவாங்க. இரத்தினபுரி மாவில தோட்டத்துல இருந்து வந்தோம்.
இடையிலேய சிங்களத்தில் இரண்டு கேள்விகளைக் கேட்டேன். தமிழிலில் சரியாக பதில் சொன்னார்கள். தங்களுக்கு பேசுவது புரிகிறது. ஆனால் பேசமுடியவில்லை. தன்னுடைய தங்கச்சிக்கு சிங்களம் பேசமுடியும் என்றார் சுப்பிரமணியம்.
உரையாடல் இடையே இன்னுமொருவர் வந்தார்.
என் பேரு லட்சுமணன் என்றார். ராமர் எங்கே என்றேன். ...அப்பாவியாக சிரித்தவர்.. 'அவரு அண்ணன்.. வெளியில போயிருக்கிறார்"
என்றார். எந்த தோட்டம் என்றேன். லிந்துலை 'ரென்டரை கிளாஸ்' என்றார்.
St.Regulars Estate எனும் ஆங்கிலப்பெயர் மக்கள் மொழியில் 'ரெண்டரை கிளாஸ்' என்று நண்பர்களுக்கு விளக்கினேன்.
எங்கள் உரையாடலை அவதானித்த மாணவ நண்பர்கள் ஆச்சரியமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
என்ன ஆச்சரியப்படுகிறீர்கள் என்றேன்? நேற்று இரவு நீங்கள் கூறிய வரலாற்றின் வாழும் சாட்சிகளாக இவர்கள் இருக்கிறார்களே என்றார்கள்.
ஆமாம் உங்கள் பல்கலைக்கழக வேலிக்கு அருகில் என்றேன்.
'நாம இங்கிருந்துதான் ஆய்வுப்படிப்பையே தொடர்ந்திருக்கனும் செல்வம்' – பிரபுராம்.
'ஆமாப்பா எனக்கு இவுங்க சிலோன்காரவுங்கனு தெரியும். ஆனால், அகதிகள்னு நெனச்சிட்டேன்'... ச்சே..மனசுக்கு வருத்தமா இருக்குப்பா' – செல்வம்.
உணர்ச்சிமிக்க உரையாடல்.
தெளிவத்தை காலை உணவுக்காக காத்திருப்பதாக இரவு எங்களோடு வந்த, இப்போது பணி நிமித்தமாக வர முடியாமல் பொன். கிறிஸ்தோபர் அழைப்பில் வந்து சொன்னார.
புறப்பட தீர்மானித்தோம். புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
இவ்வளவு தூரம் வந்துட்டீங்க... கட்டாயம் டீ சாப்பிட்டுத்தான் போகனும்... லட்சமணன் வேண்டுகோள் வைத்தார். நிறைவேற்றுங்கள் என அவர் வீட்டு வாசலில் நின்றோம்.
சுவையான தேநீர். பிஸ்கட். சுவைத்துக்கொண்டே...
உங்களை எங்கேயோ பார்த்திருக்கிறேனே என்று சுப்பிரமணியத்தைப் பார்த்து கேட்டார் ஆய்வு மாணவர் செல்வம்.
அட... உங்க எல்லாரையும் எனக்கு தெரியுமே.. நான் கெஸ்ட்டு கெண்டீன்ல டீ மாஸ்டரா இருக்கேன்.
அட... ஆமா. சார் நீங்க தங்கியிருக்கிற கெஸ்ட் ஹவுஸ் பக்கத்துல இருக்குதே கெண்டீன்... அதுலதான் இவரு வேலை செய்றாரு. .. இவரு போட்ட டீயதான் நீங்க இரண்டு நாளா குடிச்சிருக்கீங்க... என்றார். செல்வம்.
நான் பருகிக்கொண்டிருந்த தேநீரில் பாசம் கலந்து இன்னும் சுவையானது...
உலகம் முழுவதும் Ceylon Tea.
திண்டுக்கல்லில் சிலோன் காலனி டீ..... சிலோன் காரனின் டீ..... இந்த சிலோனர்காரனுக்கு டீ------
இலங்கையில் தமக்கு தெரிந்த அத்தனை தொடர்பு முகவரிகளையும் அவர்கள் சொல்லச் சொல்ல .. சிவா இப்போது ஏட்டில் பதிவு செய்தார். அவர் கைப்பேசி இப்போது படமெடுக்கப் போய்விட்டது.
பிரிய மனமில்லாமல் விடைபெற்றோம்.
முதல் இரண்டு நாளும்... என்னை சார்;.... சார்... என அழைத்த ஆய்வு மாணவர்கள் மதியம் விடைபெறும் வரை என்னுடன் தோழர்.. தோழர் என நெருக்கமாக வலம் வந்தார்கள்.
இந்த தோழமையை என் அண்ணன்கள்.. சகாதேவன்.. லட்சமணன்.. சுப்பிரமணியத்திடம் இனி காட்டுவார்கள் என்ற நம்பிக்கையோடு திண்டுகல்லில் இருந்து விடைபெற்றோம்....
மலையகம் பற்றி தெரிந்து கொள்ள... தமிழக உறவுகள் வெகுதூரம் செல்லத் தேவையில்லை. தங்களது வேலிகளுக்கு வெளியே வந்தால் போதுமானது...
தாயகம் திரும்பிய மலையகத் தமிழர்கள் சிலோன்காரர்கள் இல்லை.. நம்மவர்கள் என நாலு மாணவ நண்பர்களும் நாளை ஆய்வைத் தொடங்குவார்கள் என நம்புவோமாக...
நன்றி முகநூல்-மல்லிகைப்பூ சந்தி திலகர்

0 commentaires :
Post a Comment