மூதுர் படுகாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த 100 ஏக்கர் மக்கள் காணிகள் இன்றுடன் விடுவிப்பு - கிழக்கு மக்களின் குரல் மூதூர்
திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட படுகாடு எனும் பிரதேசத்தில் உள்ள மக்களுக்குச் சொந்தமான 100 ஏக்கர் விவசாயக் காணிகளைக் கடந்த பல வருடங்களாக சிவில் பாதுகாப்புப் படையினர், அரச அனுசரனையுடன் பயன்படுத்தி வருவது யாவரும் அறிந்ததே.
இவ்விடயம் தொடர்பாக எவ்வித ஆக்கபூர்வ அழுத்தங்களும் இதுவரை எடுக்கப்படாததை அடுத்து, மக்கள் தொடர் அசெளகரியங்கரியங்களுக்கு முகங்கொடுத்து வந்தனர். மக்களால் ஆர்ப்பாட்டங்களும் நிகழ்த்தப் பட்டன. இவ்விடயம் தொடர்பாக பிரதேச வாசிகளால் சில மாதங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தோழர் அனுர குமார திசாநாயக்கவிடம் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து அகில இலங்கை விவசாய சம்மேளனம் மற்றும் கிழக்கு மக்களின் குரல் ஆகிய அமைப்புகள் தொடர்ந்தும் ஊடக சந்திப்புக்கள் மற்றும் மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டன. தொடர்ந்தும் மக்களின் காணி உரிமைகள் தொடர்பாக அரசாங்க அதிபருடன் இடம்பெற்ற தொடர் சந்திப்புக்களினை அடுத்து, இன்றைய தினம் (22/09/2017) அரசாங்க அதிபரின் கையொப்பத்துடன் குறித்த காணிகளை உடன் விடுதலை செய்யும் படி கடிதம் பிறப்பிக்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக நியாயமான முறையில் நடவடிக்கை எடுத்த திருகோணமலை அரசாங்க அதிபர் அவர்களுக்கு பாதிக்கப்பட்ட மக்கள் சார்பிலும், கிழக்கு மக்களின் குரல் சார்பிலும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 commentaires :
Post a Comment