‘நேர்பட உரைத்தல்’
சமூகம், மக்கள், தேசம் போன்றவைகள்மீதான உணர்வுபூர்வமான அக்கறையும் நேசமும், தத்துவங்களாக, அனுபவங்களாக, தகவல்களாக என பல்வேறு பதிவுகளாக வெளிவருவதற்கு காரணமாக சிறைச்சாலையும் பிரதான பங்குவகித்து வருவதை வரலாற்று வெளிச்சத்தில் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. கிரேக்க சிந்தனையாளரான சாக்ரட்டீசில் இருந்து அந்தோனியோ கிராம்சி, தஸ்தாயெவ்ஸ்கி, என உலகில் மானுடத்தை, சமூகத்தை நேசித்த சிந்தனையாளர்களை சிறையில் அடைத்தார்கள்! ஆனால் சிறையில் உதித்த அவர்களது சிந்தனைகளை, இலக்கியத்தை, தத்துவங்களை, அனுபவங்களை எந்தவொரு சிறைக்குள்ளும் அடைத்துவிட முடிவதில்லை.
வரலாறுகளை தாங்கி சுழலும் பூமியின் எதோ ஒரு மூலையில் ஒதுங்கிக்கிடப்பதுதான் இலங்கை எனும் ஒரு தீவு. ஆயினும் இங்கும் மக்கள் வாழ்கின்றார்கள்! வெவ்வேறு இன மத பண்பாட்டு கலாசாரங்களை பேணுகின்ற சமூகங்கள் வாழ்கின்றன. குறிப்பாக அரசியல் எனும் ஒரு செயல்பாடும் இயங்குகிறது. இங்கும் மக்களுக்கான சமூகத்திற்கான தேசிய, பிரதேச, மாகாண பற்றுடைய மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள்! அவர்களே மக்களால் தேர்ந்தெடுக்கவும் படுகிறார்கள்!
சிவநேசன் சந்திரகாந்தன் அவர்கள் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு நீண்டகாலமாக விசாரணை ஏதுமின்றி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்! ஆயினும் சிறைச்சாலையும் பிள்ளையானை ‘வளர்த்து வருகிறது’: இலக்கிய சாரல் தெறிக்க நனைந்து செல்லும் அவரது சொல்மொழியின் ஈரம் வாசிப்பிற்கு குளிர்மையாக இருந்தது. ‘’பாடசாலை தாண்டி பிள்ளையார் கோயில் கடக்க வலது பக்கமாக கிழக்குவானம் சிவந்துகொண்டிருந்தது. நீருக்குள் எழுவதும் பறப்பதுமாய் இரைதேடிக்கொண்டிருக்கும் நீர்க்காகங்களும் நாரைகளும் அந்த சூரியனின் வரவுக்காய் ஏங்குவது தெரிந்தது. சில கொக்குள் எமது வாகனத்தை முந்திக்கொண்டு, நாம் முந்திச்செல்கின்றோம். நீங்கள் பின்னால் வாருங்கள் என்று சொல்லி வரிசையாக பறப்பது போலவும் தென்பட்டது.
இந்த பகுதியில் அவுஸ்ரேலியாவில் இருந்து வரும் பறவைகளும் பருவகாலங்களில் வந்து தங்கி செல்வதாக அறிந்துள்ளேன். இது மட்டக்களப்பில் போற்றி பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்று.‘’ என ‘கண்ணா பற்றைகளும் நீர் பறவைகளும்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட பகுதியியோடு நனைந்து. இறுதியில் மட்டக்களப்பு வாவியில் மூழ்கச் செய்தது ‘வேட்கை’ இவ்வாறு: ‘’இரவு மணி ஒன்பது ஆகிக்கொண்டிருந்தது. மட்டுநகரினுள் நுழைகின்றபோது வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தது. பெருநகர பரப்புகள் ஓய்ந்து அமைதி குடிகொள்ள தொடங்கியிருந்தது. எங்கும் ஒரே அமைதி. ஆனால் இந்த அமைதியின் பின்னர்தான் எங்கள் வாவியில் மீன்கள் பாடத்தொடங்கும்.‘’ என்பதோடு பிள்ளையானின் ‘வேட்கை’ தணிந்துபோய்விடுமா?
மாகாணசபை உறுப்பினராக இருப்பதால் ஒவ்வொரு மாகாணசபை அமர்விற்கும் சமூகளிக்கும் வாய்ப்பை சிறைச்சாலை வழங்கியிருக்கிறது. அவ்வாறான ஒரு மாகாணசபை அமர்விற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து திருகோணமலைக்கு விலங்கு பிணைக்கப்பட்ட கரங்களோடு பயணிக்கும்போது கிராமங்களையும், பிரதேசங்களையும், வீதிகளையும், கட்டிடங்களையும் அவர் கடந்து செல்லுகின்றார்.
தனது பொறுப்பில் இருந்த மகாணசபையின் நான்கு வருடகாலத்தை பயன்படுத்தி மேற்கொண்ட பணிகளை நினைந்து திருப்தியடையும் அதே தருணம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் தேங்கிக்கிடக்கும் அவலத்தை கண்ணுற்று ஏங்கும் அவரது மனதையும் புரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.
பிரதேசங்களை கடந்து செல்லுகின்றபோது தன்னால் மேற்கொண்ட பணிகளோடு தான் குழந்தை போராளியாக புலிகளில் இணைந்து, கிழக்கு புலிகளாகவும், வன்னிப் புலிகளாக பிளவுபட்ட அவலங்களின்; நினைவுகளும் அவரது பயணத்தோடு தொடர்ந்து வருகிறது.
கடந்த ஆட்சியாளர்கள் தமது நலன்களுக்கு உபாயமான ஒரு கருவியாக பிள்ளையானை கருதியிருக்கலாம்/கருதினார்கள். எவ்வளவு தூரம் அவர்களின் நலன்களுக்கான கருவியாக பிள்ளையான் செயல்பட்டார் என்பதை அவரது நான்கு வருட மகாணசபை நிர்வாக செயல்பாட்டை அலசிப்பார்பவர்களால் புரிந்து கொள்ளமுடியும். ஆனால் கிடைத்த அந்த குறைந்தபட்ச சலுகைகளைக்கொண்டு நிறைவேற்றிய சமூக-பிரதேச நலப்பணிகளை நினைந்து சுமக்கும் தன் மன வேட்கையை ‘விலங்கிட்ட கரங்களால்’ பதிவுசெய்திருக்கின்றார்.
பிள்ளையான் தான் செய்த பணிகளையும் குழைந்தைப் போராளியான கதைகளையும் ஒரு சிறு பதிவாக்கியிருக்கின்றார்.
ஆனால் பல்லாயிரம் பக்கங்களைக் கொண்டதாக எமது கல்விச் சமூகத்திற்கான வடமகாணசபை முதல் அமைச்சரின் பணிகளின் வரலாற்று வாழ்வு எழுதப்பட இருக்கிறது. நல்லாட்சியை எமக்கருளிய தமிழ் தலைமைகளின் ஆசியோடு கிடைக்கப்பெற்ற எமது முதல் அமைச்சர் தமிழர்களின் விடிவுக்காய் மேற்கொண்ட சர்வதேச பயணக்கட்டுரையே ஆயிரம் பக்கங்களை தாண்டிவிடக்கூடியது. மாகாணசபையில் எழுந்த கலகங்கள்,எவ்வித பணிகளையும் மேற்கொள்ளாமல் மேற்கொண்ட ஊழல் விவகாரம். உட்கட்சி பூசல்கள், பதவிக்கான போட்டி- பந்தயங்கள், என எமது முதல் அமைச்சரின் வரலாற்றில் வாழ்தலை எழுத பல்லாயிரம் பக்கங்கள் காத்திருக்கின்றது. என்ன….! ஒரு 'உக்குட்டி' குறை இருக்கும்…! அதில் சமூகத்திற்காக, மக்களுக்காக, பிரதேசங்களுக்காக மேற்கொண்ட காரியங்கள் என எதுவுமே இருக்காது! அப்படி ஒரு காரியம் ஆற்றவா நாம் பிரதிநிதிகளை இதுவரைகாலமாக தேர்ந்தெடுக்கின்றோம். இல்லையே!
நன்றி முகநூல் -அசுரா-

0 commentaires :
Post a Comment