9/21/2017

இராவண தேசம் அறிமுக விழா

Aucun texte alternatif disponible.
இராவண தேசம் அறிமுக விழா
==========================
மட்/ மாநகர சபையின் அனுசரணையுடன் மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் பெளர்ணமி கலை நிகழ்வின் பத்தொன்பதாவது நிகழ்வாக ஆய்வாளரும், பிரபல ஊடகவிபலாளருமான திருமலை நவம் எழுதிய இராவண தேசம் ஆய்வு நூலின் அறிமுக விழா எதிர்வரும் 23-09-2017 சனிக்கிழமை மாலை 4.15 மணிக்கு மட்/பொது நூலக கேட்போர் கூடத்தில் பேராசிரியர் சி.மெளனகுரு தலைமையில் நடைபெறவுள்ளது.

பாடும்மீன்... இணைபத்தள ஆசிரியர் சிவம் பாக்கியநாதனின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகும் இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீட பீடாதிபதி திரு.மு.ரவி கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

நூலின் முதற்பிரதியை மட்/ தமிழ்ச்சங்க பொருளாளரும் இலக்கிய ஆர்வலருமான புரவலர் வி. றஞ்சித மூர்த்தி பெற்றுக் கொள்ள நூல் வெளியீட்டுரையை மகுடம் வி.மைக்கல் கொலினும் நூல் அறிமுகவுரையை கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி சு.சிவரெத்தினமும் ஆற்றவுள்ளனர்.

கவிஞர் கதிரவன் த.இன்பராசா தொகுத்து வழங்கவுள்ள இந் நிகழ்வில் நன்றியையும் ஏற்புரையையும் திருமலை நவம் நிகழ்த்துவார்.

0 commentaires :

Post a Comment