மட்டக்களப்பு மற்றும் தென் கிழக்கு நோக்கிய பயணங்களின் போது வாகரை மற்றும் கதிரவெளியைக் கடந்து செல்லுகின்ற வேளை கண்கள் தானியங்கித் துப்பாக்கிகள் போல நம்மிடம் அனுமதி கேட்காமலே சாலையின் இரண்டு கரைகளையும் நோக்கி நீண்டு விடுகின்றன. வழமையாக வாகரை மற்றும் கதிரவெளியை ஊடறுத்துச் செல்லுகின்ற போது கரும்பாம்பு போல வளைந்து நெளிந்து ஆங்காங்க சொர சொரப்போடு நீள்கின்ற மட்டக்களப்பு வீதியின் இரு கரைகளிலும் வயிற்றுப் பாட்டுக்காக பத்துக்கும் இருபதுக்குமென்று சீசனல் வியாபாரம் செய்கின்ற தமிழ்ச் சிறு குழந்தைகளின் ஏகப்பட்ட ஆவணப் படங்களை எடுத்து களைத்துப் போய்க் கிடக்கின்றன எனது இரு கண்கள்.
கடந்த காலத்தை இருளில் கரைத்து விட்டு நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் மில்லியன் டொலர் கொஸ்ஷன்களாக்கி விட்டு நிறம் மங்கிய காற்சட்டை, மேற் சட்டை அல்லது வெறும் ஜம்பர் மற்றும் பாழடைந்த கணக்கில் ஜீன்ஸ்களை அணிந்து கொண்டு நான்கைந்து சில நேரம் அதற்குக் கூடிய வயதுடைய சிறுவர்களும் சிறுமிகளும் கைகளில் சீசனுக்கேற்ற மாதிரி அவித்த சோளகக் கதிர், கச்சான் கொட்டை, வீரைப்பழம், பாலப் பழம், என்று கைகளில் வைத்துக் கொண்டு எதிர்ப்படுகின்ற வாகனங்கள் எல்லாவற்றையும் நோக்கி ஓடி வந்து நிறுத்தச் சொல்லி சத்தம் போடுவார்கள்.
வாகனத்தை நிறுத்தி விட்டால் உசைன் போல்டை கால்களில் அணிந்து கொண்டு வாகனங்களை நோக்கி உற்சாகமாக ஓடி வந்து வாங்குங்கைய்யா வாங்குங்கைய்யா என்று ஹை பிட்ச்சிங்கில் கோரஸ் பாடுவார்கள். காசு கொடுத்து வாங்கினால் பரவசத்தில் சந்தோஷ் சிவனின் கமராக்களாகின்ற அவர்களது முகங்கள் வாங்காமல் போகின்ற போது மணிரத்தினத்தின் நாயகன் படத்து இருண்ட காட்சிகளாக மாறி விடுவதனை நான் பல தடவைகள் அவதானித்திருக்கின்றேன். பெரும்பாலும் இவ்வாறு தெருவோர வியாபாரம் செய்கின்ற வறுமைக்குப் பிறந்த இந்தப் பிஞ்சுகள் சற்று அழுக்கோடு இருப்பார்கள்.
அவர்கள் அணிந்திருக்கின்ற ஆடைகளில் வறுமையும் ஏழ்மையும் என்ற டைட்டில் கார்டு தொங்க விடப்பட்டிருக்கும். பார்க்கின்ற போது இதயத்துக்குள்ளே வேட்டையாடு விளையாடு படத்தில் அமெரிக்காவில் மெடிக்கல் ஃபெக்கல்ட்டி ஹொஸ்டலில் வைத்து கமலஹாசனின் முகத்தில் சேர்ஜிக்கல் கத்திகளால் இளமாறனும் அமுதனும் மாறி மாறிக் கீறுகின்ற போது நம்ம பிக் பாஸ் கமலஹாசன் வலியால் நிலத்தில் வீழ்ந்து கண்களால் அதனைக் காட்டுவாரே அந்த மாதிரித்தான் அந்த சிறுவர்களை பார்க்கின்ற போது பெயரற்ற வலியொன்று மனசை சற்று பெயர்த்தெடுத்து விடும்.
கடந்த நான்காம் திகதி (2017-09-04) காக்காமுனை ஜுனைதீனின் வேனில் அக்கரைப்பற்று நீதிமன்றுக்கு ஒரு காணி வழக்குக்காக நானும் எனக்கு மிக நெருக்கமான அன்சார் நாநாவும் சென்று அதனை முடித்துக் கொண்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வாகரையில் நிறைய சிறுவர்கள் கைகளில் கசியக் கசிய ஷொப்பிங் பேக்கினை தொங்க விட்டுக் கொண்டு விதியில் வருகின்ற போகின்ற வாகனங்களை துரத்திக் கொண்டிருந்தனர்.
எல்லோர் கைகளிலும் நாவற் பழங்கள் கசிகின்ற ஷொப்பிங் பேக்குகள். இப்படியே தெருவோரத்தில் நின்று கொண்டிருந்த சிறுவர் வியாபாரிகளை கடந்து வந்து கொண்டிருந்த போது ஒரு இடத்தில் வெறும் ஜீன்ஸ் அணிந்து கொண்டு முகத்தில் ஆங்காங்க திட்டுத் திட்டாய் பவுடர் அப்பிக் கொண்டு நாவற் பழங்கள் கொண்ட பேக்கோடு யாராவது இதனை வாங்க மாட்டார்களா என்ற நூற்றாண்டு கால ஏக்கத்தோடு ஒரு நான்கைந்து வயது வறுமையின் வாரிசு.
அந்தப் பையன் அணிந்து கொண்டிருந்த ஜீன்ஸ் அவ்வப்போது கீழே வழுகுவதும் வழுகுகின்ற ஜீன்சை அந்தப் பிஞ்சு மேலே இழுத்து விடுவதுமாய்…….நெடு நேரமாக பாதையையே பார்த்துக் கொண்டு நின்று கொண்டிருப்பான் போலும். நாங்கள் வந்த கொண்டிருந்த வாகனத்தை அவனுக்கருகாமையில் நிறுத்தினோம். பவர் கட்டாகி திடீரென்று கரன்ட் வந்தவுடன் பளிச் பளிச்சென்று பல்புகள் எரியுமே அந்த மாதிரி முகத்தில் ஃபோக்கஸ் லைட்டின் புளகாங்கிதம். எங்களைக் கண்டவுடன் வாகனத்தருகில் வந்த “அம்பது ரூவா. நாவப்பழம் வாங்குங்க” என்று அந்தச் சிறுவன் மெல்லிய குரலில் சொன்னான்.
அவன் வைத்திருந்த பேக்கை வாங்கி விரித்துப் பார்த்தேன். அதற்குள்ளே நாவற்பழங்கள் ரொம்ப அடிபட்டுக் கிடந்தன். எக்ஸ்பயரி டேட்டுக்கு மிக நெருக்கமாக இருந்தன. முகர்ந்து பார்த்தேன். மூக்கை கடுமையாக இம்சை பண்ணியது. பழைய பழங்கள். நேற்று பறித்திருக்க வேண்டும். யாரேனும் பொதுச் சகாதாரப் பரிசோதகர் பார்த்தால் நிச்சயமாக மனித பாவனைக்கு உகந்ததல்ல என்று சேர்ட்டிபிகேட் கொடுத்து அந்தப் பழங்களை விற்றுக் கொண்டிருந்த பையனுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் “ஃபூட் எக்ட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து விடுவார்.
அந்தளவுக்கு அந்தப் பழங்கள் பெரும்பாலும் சக்கராத் ஹாலில் இருந்து கொண்டிருந்தன. பையன் எங்களது முகங்களையே பாரத்துக் கொண்டிருந்தான். ஒரு வேளை அவனது குடும்பத்து இரவுணவு அந்த நாவற் பழங்களில்தான் இருந்திருக்க வேண்டும். சற்றுத் தூரத்தில் அவனது வீட்டு வாசலில் அவனது அம்மாவாக இருக்க வேண்டும். புதிய வரவுக்கு மடியில் வைத்துக் கொண்டு பால் புகட்டிக் கொண்டிருந்தாள். வேன் டிரைவர் ஜூனைதீன் என்னிடம் “சேர் இந்தப் பொடியனிடம நாவப் பழம் வாங்கப் போறீங்க. இவன் எப்டி இருக்கான் பாருங்க. இவனப் பாத்துக்கிட்டு இந்தப் பழத்த திண்ணலுமா சேர். எப்படி இருக்கான் பாருங்க. விடுங்க சேர் நான் நல்ல பழமா ஊர்ல வேங்கித் தர்ரேன்.” என்றான்.
பையன் வைத்திருந்த நாவற் பழங்கள் குமட்டலுக்கு வெல்கம் செரமெனி நடத்திக் கொண்டிருந்தன. பையன் வேறு எங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கின்றான். இந்தப் பையனெல்லாம் யாவாரம் செய்யுறான். இவனிடம் போய் இதனை விலைக்கு வாங்கி வாய்க்குள்ளே போட்டு…………..தொண்டைக்குள்ளாக தொடர்பாடலை இரைப்பைக்கு ஏற்படுத்தி……கற்பனையே கண்றாவியாக இருந்தது. அந்தப் பிஞ்சினை பார்க்க எங்கோ ஒரு துயரம் என்னை குண்டூசி குத்தி இரத்த நாளங்களில் சூனியம் செய்தது.
ஒரு நூறு ரூபா தாளை எடுத்து பையனிடம் நீட்டி “இந்தா இத வெச்சுக்கோ…..நாவப் பழம் வேணாம்…..” என்று சொல்லி அவனிடம் கொடுத்தேன். பையன் அந்தக் காசை எடுத்துக் கொண்டு “அம்மா காசி” என்று கத்திக் கொண்டு அம்மாவின் பக்கம் ஓடினான். கொடிது கொடிது வறுமை கொடிது................மழலைக் காலத்தில் வறுமை வருதல் அதனிலும் கொடிது. சீசனுக்கு எது வருகின்றதோ அதனை விற்று பசிக்கெதிராக போர் செய்து கொண்டிருக்கின்றது இந்த சமூகம். போரின் போது ஆயுதங்களால் பட்ட துன்பத்தை விட அந்த கிராமத்து தமிழ் சமூகம் இப்போது வறுமையின் சூழலிலும் இல்லாமையின் நச்சு வட்டத்துக்குள்ளும், வயிற்றுக்கான அதி பயங்கரப் போருக்குள்ளும் சிக்குண்டு துண்டங்களாகிக் கொண்டிருப்பது கருப்புப் பக்கங்கள்.
தமிழர் போராட்டம் தமிழர்களுக்கான போராட்டம் போருக்குப் பிந்திய தமிழ் சமூகம், போரால் பாதிக்கட்ட தமிழர்களின் போருக்குப் பிந்திய வாழ்க்கை, தமிழர் விடுதலை, தமிழர்களுக்கான நிரந்தர அரசியில் தீர்வு என்று பெரும்பாலும் தமிழ்த் தலைமைகள் எல்லோருமே ஏஸி உறுமுகின்ற அறைகளுக்குள்ளே காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றார்கள். அவற்றைப் பேசிப் பேசியே பெருங் கூட்டமொன்று வயிற்றுப் பிழைப்பை நேர்த்தியாக நடாத்திக் கொண்டிருக்கின்றது. போரைப் பேசியும் போரினால் பாதிப்புற்ற தமிழர்களைப் பேசியும் இன்னோர் கூட்டத்தின் பிழைப்பு பீஎம்டபிள்யூ லெவலில் இருக்கின்றது. ஆயுதப் பொராட்டத்துக்கு இன்ச் சைசுக்கும் சம்பந்தமில்லாத இன்னோர் கூட்டம் பிரபாகரனையும், தமிழீழ விடுதலைப் புலிகளையும் தெய்வங்களாக்கி அந்த பக்தியில் தமது வாழ்கைகைக்கு முக்தி பெற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனால் அதே வறுமை……அதே கொடுமை……போரை விடப் பயங்கரம் இன்றைய போருக்குப் பிந்திய அவர்களின் வறுமை. மட்டக்களப்பு வீதியால் பயணம் செய்கின்ற எல்லோருமே தெருவோரச் சிறுவர்களின் ஐந்துக்கும் பத்துக்குமான போராட்டத்துக்கு கண் கண்ட சாட்சிகள்தான்.
பரிதாபமாக வாங்க மாட்டார்களா வாங்க மாட்டார்களா என்று பயணிகளின் முகத்தைப் பாரத்தவாறு நிற்கின்ற அந்த தமிழ்ச் சிறுவர்களது பால வடிகின்ற முகங்கள் இன்னும் மனசுக்குள்ளே இருக்கின்றன பச்சைக் காயங்களாக.
நன்றி முகநூல்
கிண்ணியா சபருள்ளாஹ்
2017-09-10

0 commentaires :
Post a Comment