

நூல்களை பெற்றுக்கொண்டபின்னர் நூல் நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரையாற்றிய சிகாப்தீன் அவர்கள் நூலகத்தின் நிறுவனரான முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரான கெளரவ சந்திரகாந்தன் அவர்களின் பணிகளை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
குறிப்பாக கிழக்கு மாகாண சபையை கட்டியெழுப்பியதிலும் அதனை மூவின மக்களுக்கும் உரியதாக வழிநடத்துவதிலும் முன்னாள் கிழக்கு மாகாண சபை முதலமைச்சரான கெளரவ சந்திரகாந்தன் அவர்கள் ஒரு முதிர்ந்த அரசியல்வாதிக்குரிய பண்புகளுடன் செயலாற்றினார் என புகழாராம் சூட்டினார்.