30 ஆண்டுகளுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கானமக்களையும் போராளிகளையும் எம் தோழர்களையும் இழந்து நாம் பெற்றதென்ன?
இந்த கேள்வியை நாம் சாதாரணமாக கடந்துசெல்கிறோம்.இந்த உயிரிழப்பு தியாகம் சர்வசாதாரணமானதா?ஆனால் இவை பற்றியபிரக்ஞை எதுவுமற்றுத்தான் இன்று காரியங்கள் நிகழ்கின்றன.
யுத்தம் முடிந்து 7 ஆண்டுகளுக்கு எல்லாம் மறக்கப்பட்டுவருகின்றன.
தமிழ்மக்கள் இந்தநாட்டில் சகசமூகங்களுடன் சமத்துவமாக வாழ்வேண்டும் சகலவிதமான சமூக அநீதிகளும் தகர்க்கப்படவேண்டும் என்பதே போராட்டத்தின் சாரம்சம்சமாக இருந்தது. ஆனால் போராட்டம் யுத்தத்திற்கு பிந்திய சூழலில் 7ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தியாகங்கள் கருத்திற்கு எடுப்பட்டிருக்கின்றனவா? அநியாய இழப்புக்களின் கனதி உணரப்பட்டிருக்கிறதா?? போராடியவர்கள் இழப்புகளை சந்தித்ததவர்கள் குறைந்தபட்ச கண்ணியமான வாழ்வை பெற்றிருக்கிறார்களா???
போராட்டத்தில் பங்குபற்றிய பெண்களின் நிலை என்ன ? சமூகஅநீதிகள் தொடர்பான விழிப்புணர்வு எதுவும் சமூகதத்தில ;நிலவுகிறதா? சமூகங்களிடையே நல்லெண்ணத்திற்கான காத்திரமான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறதா. பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் சமூக பாதுகாப்புநிலை என்ன மாதிரி இருக்கிறது. தமிழர்களுக்கும் சகசமூகங்களுக்கும் அதிகாரப்பகிர்வு தொடர்பாகஒருபடிதன்னும் முன்னோக்க சென்றிருக்கிறோமா?
நிலத்துக்காகவும் காணாமல் ஆக்கபட்ட தமது உறவுகளுக்காகவும் சிறையிலிருப்பவர்களின் விடுதலைக்காகவும் வேலை ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவும் மக்கள் இளைஞர்- பெண்கள் நூறு நாட்கள் கடந்துபோராடிக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம ;அதற்கான ஜனநாயகசூழல் நிலவுகிறது.
பயங்கரவாததடைச்சட்டம் நீக்கப்படுவது
இராணுவபிரசன்னம் குறைக்கப்படுவது அதிகாரப்பகிர்ந்தளிப்பு
சமூகபொதுளாதார அபிவிருத்தி -சமூகபாதுகாப்பு
வீதியல் இறங்கிபோராடும் மக்களின் கோரிக்ககைளுக்கு முன்னுரிமை இவை தமிழர்தலைமைத்துவத்தின் பிரதானகடமையாக இருக்கவேண்டாமா? ஆனால் என்னநிகழ்கிறது. கன்னை பிரித்து“குடுமிபிடிச்சண்டை”
இவ்வளவுபேரழிவும் தியாகமும் நிகழ்ந்த சமூகத்தில் யுத்தத்தின் பின்னமைந்த வடமாகாணசபையின் நிகழ்ச்சிநிரல் 3 வருடம் கழித்து ஊழல் துஸ்பிரயோகத்தை சுமந்துநிற்பது சமூகஅககறைகொண்டோருக்கு விசனத்தையும் வெறுப்பையும் கவலையையும் ஏறப்படுத்துவதாக அமைந்துவிட்டது.
நம்பிதெரிவு செய்த மக்கள் வஞ்சிக்கப்டடிருக்கிறார்கள். ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். கிழக்கு, வடக்குமாகாணசபைகள் சர்வதேச கரிசனைக்குரியவை அவர்களின் பார்வையில் கோமாளிக் கூத்து- கையாலாகாதகளமாக வடமாகாண சபை மாறியிருக்கிறது. தியாகங்களால் பெறுமதிசேர்க்கப்பட்ட தமிழர் விடயங்கள் “நலங்கெடபுழுதியில்” எறியப்பட்டது போன்ற அவலநிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.பல்லாயிரம் மக்களும் போராளிகளும் பொதுமக்களும் தியாகம் செய்து உருவான பலாபலன்கள் பாதுகாக்கப்படுவதும் பேரழிவைச் சந்தித்த இந்தசமூகத்திற்கு பயனுடையதாக மாற்றுவதுமே நாம் மறைந்தவர்களுக்குச் செய்யும் உணமையானஅஞ்சலியாக இருக்கும.;
சிந்தித்துபாருங்கள!; எழிலார்ந்த கனவுகளுடன் உயிர்த்தியாகம் செய்தவர்களை நாம் மீண்டும் மீண்டும் கொல்லவில்லையா என்று.
இவ்வளவு பெரியதியாகங்கள் நடந்தமண்ணில் நாங்கள் ஒன்றும் பெரியவிம்பங்கள்அல்ல. முகம் தெரியாமல் பல்லாயிரம் பேர் மரணித்த மண்ணில் கன்னைபிரித்து போலிகடவுளர்- கதாநாயக விம்பங்களை உருவாக்குவது சற்று எரிச்சலாக இருக்கிறது. இந்தபோலிகதாநாயக வழிபாடுஅல்ல. அதில் புழகாகிதம் அல்ல. துன்புறும் மக்களுக்கு அர்ப்பணிப்பதே இன்று பிரதானபணி. எமதுமக்களும் கண்மூடித்தனமான வழிபாடுகளைத் தவிர்த்து பகுத்தறிவின் பாற்பட்டு செயற்படவேண்டும். குறுகிய அற்ப தனிப்பட்ட ஆட்களின ;அரசியல் நலன்களுக்காக பெருவாரியானமக்களின் நலன்கள் அடகுவைக்கப்படும் அவலம் வேண்டாம்.வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மக்களுக்காக ஆக்கபூர்வமாகச் செயற்படமுனைவோம்.
இந்த 27 வதுதியாகிகள் தினத்தில் எமதுவேண்டுதல் இதுவே
சுகு-ஸ்ரீதரன்
தமிழர் சமூக ஜனநாயககட்சி
தமிழர் சமூக ஜனநாயககட்சி
0 commentaires :
Post a Comment