6/07/2017

பிள்ளையானை திறந்து விட்டு அரசியலில் எதிர்கொள்ள முடியாத கோழைகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையை, எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதிக்கு, மட்டக்களப்பு மேல்நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம்.இஸ்ஸதீன் ஒத்திவைத்தார்.Résultat de recherche d'images pour "chief minister eastern province"


அத்துடன், அரசியல் பழிவாங்கல் காரணமாக இந்தப் படுகொலையுடன் தொடர்பு படுத்தப்பட்டு கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்களது விளக்கமறியலையும், அன்றைய தினம் வரை நீடிக்கவும், நீதிபதி உத்தரவிட்டார்.

கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில்  கிழக்கின் முன்னாள் முதலமைச்சர், அவரது கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப் புலனாய்வு உத்தியோகஸ்தர் எம்.கலீல் ஆகியோர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், வினோத் எனப்படும் வெலிக்கந்தையை சேர்ந்த மதுசங்க என்பவரும், கடந்த மாதம் கைது செய்யப்பட்ட நிலையிலேயே, சந்தேகநபர்கள் ஐவரதும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :

Post a Comment