6/13/2017

தத்தளிக்கும் தமிழ் மாகாணம்

நான்கு அமைச்சர்களையும் பதவி நீக்க உறுப்பினர்களுடன் விக்கி ஆலோசனை ; இந்த நேரத்தில் நீக்குவதற்கு சிவில் சமூகம் எதிர்ப்பு
வடக்கு மாகாண சபை­யின் நான்கு அமைச்­சர்­க­...ளை­யுமே பதவி நீக்கி, அமைச்­ச­ரவை மாற்­றத்தை மேற்­கொள்­வது தொடர்­பில், ஆளும் கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு நேர­டி­யாக அலை­பே­சி­யில் அழைப்­பெ­டுத்து அவர்­க­ளின் கருத்­துக்­க­ளைக் கேட்­ட­றிந்­தார் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன். Résultat de recherche d'images pour "வடக்கு மாகாண முத­ல­மைச்­சர்"

2016ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம், அப்­போ­தைய பிரதி அவைத் தலை­வர் ம.அன்­ர­னி­ஜெ­க­நா­தன் தலை­மை­யில், ஆளும் கட்­சி­யின் 16 உறுப்­பி­னர்­கள் அமைச்­ச­ர­வையை மாற்­றம் செய்­யு­மாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரி­டம் கோரி­யி­ருந்­த­னர். அவ்­வாறு கோரிய 16 உறுப்­பி­னர்­க­ளி­ட­மும், அதன் பின்­னர் மாகாண சபை உறுப்­பு­ரி­மை­யைப் பெற்­றுக் கொண்ட உறுப்­பி­னர்­க­ளி­ட­முமே, முத­ல­மைச்­சர் கருத்­துக்­களைக் கேட்­ட­றிந்தார்.
வடக்கு மாகாண அமைச்­சர்­கள் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டுக்­களை விசா­ரணை செய்த விசா­ர­ணைக் குழு­வி­னர், விவ­சாய அமைச்­சர் பொ.ஐங்­க­ர­நே­சன், கல்வி அமைச்­சர் த.குரு­கு­ல­ராசா ஆகி­யோர் பதவி நீக்­கம் செய்­யப்­பட வேண்­டும் என்று பரிந்­து­ரைத்­தி­ருந்­த­னர். விசா­ரணை அறிக்­கையை கடந்த 7ஆம் திகதி சபை­யில் முத­ல­மைச்­சர் சமர்ப்பித்­தி­ருந்­தார்.
அமைச்சர்களின் தன்னிலை விளக்கம் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்களைக் கேட்டுத் தானே இறுதி முடிவு செய்வேன் என்றும் முதலமைச்சர் சபையில் அறிவித்திருந்தார். இது தொடர்பான சிறப்பு அமர்வு நாளை மறுதினம் புதன் கிழமை, வடக்கு மாகாண சபையில் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்றைய தினம், ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு நேரடியாக அலைபேசியில் அழைப்பெடுத்துப் பேசினார். 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமைச்சரவையை மாற்றியமைக்குமாறு கையெழுத்திட்டு கடிதம் தந்திருந்தீர்கள். இது தொடர்பில் தற்போது உங்களின் நிலைப்பாடு என்ன என்று அவர் வினவியுள்ளார்.
அந்தக் காலப் பகுதியில் சபை உறுப்பினர்களாக இல்லாமல் அதன் பின்னர் பதவியேற்ற உறுப்பினர்களிடம், முதலமைச்சர் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளார்.
இதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரன் நியமித்த விசாரணைக் குழு இரு அமைச்சர்களைப் பதவி நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள நிலையில் முழு அமைச்சரவையையும் மாற்ற நினைப்பது அவரது விசாரணைக் குழு மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும் என்று அரசியல் அவதானிகளும், சிவில் சமூகத்தினரும் சுட்டிக்காட்டியுள்ளனர். குற்றவிசாரணை மீதான நம்பகத்தன்மையை இழிவாக்கும் செயல் இது என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

*நன்றி தாய்நாடு

0 commentaires :

Post a Comment