கல்குடா மதுபான தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தேசிய கொள்கைக்கு முரணானது சர்ச்சைக்குரிய கல்குடா மது உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தேசிய போதைப்பொருள் ஒழிப்புக் கொள்கைக்கு முரணானது போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
இந்த அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சண்டே டைம்ஸ் பத்திரிகைக்கு கூறியுள்ளார்.
போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் தெரிவித்த இந்த கருத்தை சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று தமது பிரதான தலைப்பாக வெளியிட்டுள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில், ஜனாதிபதி செயலணியின் ஊடாக ஆக்கபூர்வமான பல நடவிக்கைகள் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செயலணியின் பணிப்பாளரை மேற்கோள் காட்டி பத்திரியை செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் கல்குடா மது உற்பத்தி தொழிற்சாலைக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக போதைப்பொருள் ஒழிப்பு ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் சமந்த கித்தலவாராச்சி தெரிவித்துள்ளார்.
டபிள்யூ எம் மென்டிஸ் நிறுவனத்திற்கு சொந்தமான மதுபான உற்பத்தித் தொழிற்சாலைக்காக கல்குடாவில் 17 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் அதில் நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வருகின்றமை தொடர்பிலும் நாம் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்திகளை வெளியிட்டிருந்தோம்.
மென்டிஸ் நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கமைய அதன் தலைவராக மத்திய வங்கி முறிகள் மோசடி குறித்து குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள பேர்பச்சுவல் ட்ரஷரிஸ் நிறுவனத்தின் அர்ஜூன் அலோசியஸ் செயற்படுகின்றார்.
கல்குடா மதுபான உற்பத்தி தொழிற்சாலை இயங்குவதற்கு இடமளிமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி வழங்கிய கடிதமொன்று தொடர்பில் பிரதியமைச்சர் அமீர் அலி சபையில் கருத்து வெளியிட்டார்.

0 commentaires :
Post a Comment