புகலிட இலக்கிய சந்திப்பின் 47 வது தொடர் இம்முறை இலங்கையின் மலையகத்தில் இடம்பெறவுள்ளது.
-
எதிர்வரும் ஜூலை மாதம் 29ஆம் 30ஆம் திகதிகளில்இடம்பெறவுள்ள இந்நிகழ்வு கொட்டகலை யில் நடக்க ஏற்பாடாகியுள்ளது.சுமார் முப்பது வருடகாலமாக புகலிட நாடுகளில் இடம்பெற்று வந்த இந்த சந்திப்பு தொடரானது யுத்தம் முடிவடைந்த பின்னர் இலங்கையிலும் நடத்தப்பட்டு வருகின்றது.
47 வது இலக்கியச் சந்திப்பு இடம் – கொட்டகலை
முதல் நாள் அரங்கு 29.07.2017
நேரம் காலை 9- பகல் 12
மீனாட்சி அம்மை அரங்கு - நாட்டாரியல்
மலையகம் -ஆய்வு
அளிக்கை கிழக்கு -ஆய்வு
அளிக்கை வடக்கு -ஆய்வு
அளிக்கை சிங்கள நாட்டாரியல்
பகல் 01- மாலை 04.00
சி.வி. வேலுப்பிள்ளை அரங்கு - இலக்கியம்
நாவல் /சிறுகதை/கவிதை
மலையகம்
வடக்கு
தென்னிலங்கை
மாலை 4.30
அரங்கின் இறுதியில் காமன் கூத்து அளிக்கை இடம்பெறும்
இரண்டாம் நாள் - 30.07.2017
நேரம் காலை 9- பகல் 12
திருச்செந்தூரன் அரங்கு – அரங்கியல்
மலையகம்
மட்டக்களப்பு
தென்கிழக்கு
வடக்கு
சிங்கள அரங்கியல்
பகல் 01- மாலை 03.00
கே.கணேஷ் அரங்கு - மொழிபெயர்ப்பும் இதழியலும்
மாலை 03.30- 5.30
நடேசய்யர் அரங்கு - அரசியல்
மாலை 6.00
ஆவணப்படம்
ஆய்வு கட்டுரைகள் நிகழ்ச்சிகளை வழங்குவோர் பெயர் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்
- இலக்கிய சந்திப்பு ஈழத்து எழுத்துப்பரப்பில் கனதியான பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கிறது. யுத்தம் சிதைத்த வாழ்வுக்குள் தள்ளப்பட்டு புகலிடம் தப்பிச் சென்ற பலரின் இலக்கிய, அரசியல், சமூக வெளிப்பாடுகளை பகிர்ந்துகொள்ளும் தளமாக மட்டுமன்றி அனைத்துவித அராஜகங்களையும் தட்டிக் கேட்கும் களமாகவும், கண்டனங்களை பதிவு செய்யும் களமாகவும் நிலைநிறுத்தி வந்துள்ளது. இது "ஒரு" குறிப்பிட்ட அரசியலின் மேலாதிக்கத்திலிருந்து துண்டித்து பல அரசியல்களின் பன்முகத்தன்மையைப் பேண வழிவகுத்திருந்தது.
புகலிட சிறு சஞ்சிகைகள் அதிகம் வெளிவந்த 80கள் 90களில் அந்த சஞ்சிகையாளர்களைஒன்றுகூட்டும்ஆன்மாவாகவும் இருந்துவந்துள்ளது. பல அராஜக அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டபடி இத்தனை இலக்கிய சந்திப்புகள் நடத்தப்பட்டிருக்கிறது.
இலக்கிய சந்திப்பு என்பது எந்தவித சட்டாம்பித்தனங்களுக்கும் இடம்கொடுக்காமல், அனைத்து வித அரசியல் நிலைப்பாடுள்ளவர்களும் (பரஸ்பர முரண்பாடுகளைக் கொண்டவர்களும்) கருத்தாடுவதற்கான கருத்துச் சுதந்திரத்துக்கான களமாக இயங்கி வருகிறது. அது ஒன்றே இதுவரை நீண்ட காலமாக நின்றுபிடித்து வரும் ஒரே ஜனநாயகக் களமாகவும் நாம் கருத முடியும். பல்வேறு சந்தர்ப்பங்களில் சில தனிநபர்களின் மீதோ அல்லது குறிப்பிட்ட இலக்கிய சந்திப்பை ஏற்பாடு செய்தவர்களின் மீதோ இருந்த முரண்பாடுகள் காரணமாக சிலர் தவிர்த்து வந்திருக்கிறார்கள். அல்லது எதிர்த்து தள்ளி நின்றிருக்கிறார்கள். அல்லது எதிர்த்தே வந்திருக்கிறார்கள். ஆனால் அவ்வாறான எதுவும் இலக்கிய சந்திப்பின் இருப்பைப் பாதித்ததில்லை.
அதற்கான அடிப்படை காரணம் இந்த இலக்கிய சந்திப்பு எந்த ஒரு தனி நபரிடமோ அல்லது எந்வொரு குழுவிடமோ நிரந்தரமாக சிக்கவில்லை. இது ஒரு அமைப்பு இல்லை. இதற்கென்று ஒரு நிர்வாகம் இல்லை, இதற்கு என்று ஒரு கட்டுப்படுத்தும் யாப்பு இல்லை. உரிமை கோர எவருமில்லை. இவை தான் இலக்கிய சந்திப்பின் இருப்புக்கான வெற்றியின் இரகசியம். இவற்றில் ஏதாவது ஒரு விடயம் இருந்திருந்தாலும் அது உடைந்து சுக்கு நூறாக அழிந்து போயிருக்கும்.
ஒற்றைச் சிந்தனை, சகிப்பின்மை, தனிப்பட்ட குரோதம் போன்றவற்றின் பாத்திரம் இலக்கிய சந்திப்பின் மீதான வெறுப்புணர்ச்சியில் கணிசமான பாத்திரத்தை ஆற்றி வந்துள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. இலக்கிய சந்திப்பு என்றும் எவர் கைகளுக்கும் நிரந்தரமாக போகமுடியாதபடி அதன் பொறிமுறை பேணப்பட்டு வருகிறது.
0 commentaires :
Post a Comment