5/20/2017

சம்பந்தர் ஐயாவை வெளியேற்றி இவ்விடத்திற்கு விக்கியைக் கொண்டு வரும் நுண்ணரசியல்

Thirunavukkarasu Gopahan's Profile Photo, Image may contain: 1 personஐ சப்போர்ட் ஐயா-Thirunavukkarasu Gopahan


இந்தத் தலைப்பு நிறையப்பேரை புருவம் உயர்த்தச் செய்யும் என்பதை நான் அறிவேன்.
முள்ளிவாய்க்காலில் சம்பந்தர் ஐயாவை மக்கள் வெளியேறுமாறு கூக்குரலிட்டனர், அவமானப்படுத்தினர் என்கிற செய்தியை இரு நாட்களாக தொடர்ச்சியாகப் பார்க்கக் கிடைக்கிறது. நான் அங்கு நின்ற போதும் இச்செய்தி பெரும் பேசுபொருளாக இருந்தது. உண்மையிலேயே இது எமக்கெல்லாம் உவப்பான செய்திதானா??? எமது மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டமைக்கும் காணாமல் ஆக்கப்பட்டமைக்குமாக நாங்கள் யாரிடம் நீதி கேட்க வேண்டும்? சிங்கத்தின் மீது குரலெழுப்பி நீதி கேட்பதை விட்டு விட்டு தமிழ்த்தலைமையின்மீது பழிபோடுவதன் மூலம் எமது ஒட்டுமொத்த பிரயத்தனங்களும் தோற்றுப் போய் விட்டதை நாம் முள்ளிவாய்க்கால் மணலில் அன்று காணவில்லையா??? எம்மை எமக்கெதிராக துாண்டிவிட்டதன் மூலம் சிங்களம் இன்னுமொரு முறை வெற்றி கண்டிருக்கிறது. எமது ஒட்டுமொத்த கோபத்தையும் யார் மீதாவது நாம் பாய்ச்சியாக வேண்டும் என்கிற வகையில் சம்பந்தன் ஐயாவின் மீது அதனை பாய்ச்சி நாம் திருப்தியுடன் வீடு மீண்டிருக்கிறோம். இது எவ்வளவு பெரிய தோல்வி நமக்கெல்லாம்.
துரோகியென்றும் ஒத்தோடிகளென்றும் தமிழீழ விடுதலைப் போராட்டம் கண்டெடுத்த சொல்லாடல்களை வைத்துக் கொண்டு இன்னும் எத்தனை காலத்திற்கு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளப்போகிறோம்.?
வட மாகாணம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு தினம் சிங்களத்தின் மீது கேள்விகளை தொடுப்பதையும் நீதி கேட்பதையும் விட்டு விட்டு சம்பந்தன் ஐயாவை கேள்விக்குள்ளாக்கி திருப்தி கொண்டிருக்கிறது. அவர் மீது நிறையவே விமர்சனங்கள் இருக்கின்றன. அவற்றை இல்லையென்று யாரும் சொல்லிவிட முடியாது. ஆனாலும் எதிர்த்துப் போராட வேண்டிய எதிரி நம்மை நமக்குள்ளேயே மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக சம்பந்தரை அனுப்பச் சொல்லி விக்கினேஸ்வரனை கெஞ்சும் வீடியோவும் என்னை இன்னும் ஆழமாகச் சிந்திக்க வைக்கிறது. தமிழ்த்தேசிய தலைமைத்துவத்திலிருந்து சம்பந்தர் ஐயாவை வெளியேற்றி இவ்விடத்திற்கு விக்கியைக் கொண்டு வரும் இன்னுமொரு நுண்ணரசியல் நடைபெறுவதாக நான் உணர்கிறேன். இது மிக தீவிரமாக கவனஞ்செலுத்தப்பட வேண்டிய விடயமாகும். அரசியல் என்பது மக்களின் இருப்பின் மீது கட்டியெழுப்பப்டவேண்டுமே தவிர தனிநபர்களின் விம்பங்கள்மீதல்ல என்பதனை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.
முள்ளிவாய்க்காலில் ஐயாவை வெளியேற்ற திட்டமிட்ட அனைவரும் தமிழ்த்தேசியத்தின் இருப்பை பின்தள்ளும் சிங்களத்தின் முயற்சிக்கு ஆதரவளிக்கிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

நன்றி முகநூல்

0 commentaires :

Post a Comment