கொழும்பு-06, வௌ்ளவத்தை சவோய் திரையரங்குக்கு அருகில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்துள்ளது. இதனால், 19 பேர் படுகாமயடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் 13பேர் களுபோவில வைத்தியசாலையிலும் மேலும் 6பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இன்னும் சிலர் சிக்கியிருக்கலாம் என்றும் அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றே, இவ்வாறு இடிந்து விழுந்துள்ளதென, பொலிஸ் தலைமையகம் தெரிவித்தது. அக்கட்டடத்தின் மேலும் ஒரு பகுதி, இடிந்து விழும் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், கட்டட இடிபாடு காரணமாக காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
0 commentaires :
Post a Comment