தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (வெருகல் படுகொலை) மாவீரர்களின் பதின் மூன்றாவது நினைவு தினம் (10.04.2017) வெருகல் மலை பூங்காவில் கட்சியின் பிரதி தலைவரம் மாகாண சபை உறுப்பினருமான திரவியம் (ஜெயம்)அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மாவீர குடும்ப உறுப்பினர்கள் பொதுமக்கள் போன்றோர் பெருமளவில் பங்கெடுத்தனர்.
கட்சியின் பிரதி தலைவர்களான திரவியம்,யோகவேல்,செயலாளர் பிரசாந்தன் மற்றும் மகளீர் அணித்தலைவி செல்வி போன்றோர் கலந்து கொண்டனர்.
தலைவர் அவர்கள் தனது மாவீரர்களுக்கான பிரசுர வடிவில் விநியோகிக்கப்பட்டது.
பின்னர் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கட்சியின் மாவீரர்களின் குடும்பத்தினரால் தீபச்சுடர் ஏற்றப்பட்டது.
2004ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி அறிவிக்கப்பட்ட கிழக்கு பிளவானது யாழ்-மேலாதிக்கத்தின் இராணுவ வடிவமான தமிழீழ விடுதலை புலிகளால் மூர்க்கத்தனமாக கையாளப்பட்டமை மாபெரும் படுகொலைக்கு வழிவகுத்தது.
கிழக்கு பிளவின் மீதான புலிகளது இந்த மிலேச்சத்தனமான அணுகுமுறைக்கு ஊக்கமளிப்பவர்களாகவும் ஆலோசனை வழங்குவர்களாகவும் தமிழ் புத்திஜீவிகளும், பத்திரிகையாளர்களும்,தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் செயற்பட்டனர்.
இது அன்று தமிழ் இனத்துக்கு கிடைத்த பெரும் சாபமாகும். எதிரி என்று சொல்லப்பட்ட இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிந்தவர்களுக்கு தமது சொந்த போராளிகளுடன்,நேற்றுவரை ஒன்றாகவிருந்து உணவுண்டவர்களுடன் பேச தெரியாதுபோனது.
இதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வெருகல் ஆற்றங்கரையில் மிகப்பெரிய படுகொலையொன்றை வன்னியிலிருந்து வந்த பிரபாகரனின் படையினர் நிகழ்த்தினர். பிரிந்து செல்கிறோம், ஜனநாயக பாதைக்கு திரும்புகிறோம், சரணடைகிறோம் என்று என்று சொன்ன கிழக்கு போராளிகள் சுமார் 210 பேர் கோரத்தனமாக படுகொலை செய்யப்பட்டனர்
0 commentaires :
Post a Comment