4/16/2017

மூத்த எழுத்தாளர் நவம் ஐயாவுக்கு அஞ்சலிகள்

Image may contain: drawing


ஆரையம்பதி நவம் 1950களில் எழுத்துலகத்திற்குள்
பிரவேசித்தவர். ஆரம்பத்தில் நாடகத்தில் ஈடுபாடுகொண்டிருந்த இவர் நடிகராக, நெறியாளராக இயங்கி பின் படைப்புலகத்திற்குள் தன்னை நிலை நிறுத்தியவர். இதுவரை நந்தாவதி(சிறுகதைத்தொகுப்பு) , நீலவேனி, அழகுசுடுவதில்லையென இரு நாவல்களையும், சென்னை முதல் குமரிவரை என்ற பயணக்கட்டுரை நூலினையும், வாரிசுகள் என்ற தொகுப்பு நூலினை தனது ...புதல்வர்களின் படைப்புக்களுடன் தனது படைப்பினையும் இணைத்துத் தொகுத்துத்தந்துள்ளார்.


இந்தியாவிலிருந்து வெளிவரும் கல்கி இதழ்
இலங்கையர்களுக்கான சிறுகதைப்போட்டியில்
நவம் ஐயாவின் நந்தாவதி முதல் பரிசுபெற்றது.
நாட்டின் இனக்கலவரத்தை மையப்படுத்தி பிக்குவின் ஊடாக நகரும் கதைசொல்லி மிகச்சிறப்பான பெறுதியாக நந்தாவதியாக ஜனனித்தாள். 1960 களில் மிகச்சிறந்தகதையிது

அதுபோல் அவருடைய. கூத்துச்சிறுகதையும்
சிறந்தகதை க.பொ உயர்தர பாடவிதானத்தில்
இக்கதை சேர்க்கப்பட்டுள்ளது.


அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் "நவத்தின் படைப்புலகம்" எனும் தொனியில்
கருத்துரையை எனது மறுகா அமைப்பினால் ஏற்பாடுசெய்த உரையரங்கு தற்செயலானதா அல்லது...என்னவென்று தெரியவில்லை எப்படியிருப்பினும் ஒரு படைப்பாளியை உயிரோடு இருக்கும் போதுதான் கொண்டாடவேண்டும். மறுவாசிப்பு செய்யவேண்டும்.

நன்றி முகநூல்  மலர்ச்செல்வன்

0 commentaires :

Post a Comment