4/18/2017

மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல்லாதவர்கள்

மட்டக்களப்பில் உள்ள அரசியல்வாதிகள் முதுகெலும்பு இல்லாதவர்கள் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.Résultat de recherche d'images pour "சிவநேசதுரை சந்திரகாந்தன்"
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று(17) ஆஜர்படுத்தப்பட்ட அவர் மீண்டும் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்ட போதே ஊடகவியலாளர்களிடம் இந்த கருத்தை கூறியுள்ளார்.

கல்குடாவில் மதுபான உற்பத்தி நிலையம் இன்னும் மூடப்படவில்லை.கிழக்கு மாகாண முதலமைச்சர் நீதித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்போகின்றேன் என்று கூறினார். ஆனால் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இது தொடர்பில் சந்தேகமாகவுள்ளது.அனைத்து அரசியல்வாதிகளும் காசினைப் பெற்றுவிட்டார்களோ தெரியாது.
மேலும், மதுபான உற்பத்தி நிலையம் பிராந்திய பிரதேச சட்டத்தினை மீறிய செயற்பாடாகும்.அதனை நன்றாக தெரிந்துகொண்டும் அதனை நிறுத்த முடியாமல் இருப்பது கவலைக்குரியதாகும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்

.

0 commentaires :

Post a Comment