மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் கடந்த இருமாத காலமாக தமது தொழிலுரிமை வேண்டி உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அவர்களது போராட்டத்தை வழிநடத்தும் முன்னணி படடதாரி ஒருவர் மட்டக்களப்பு அரசியல் வாதிகளால் மிரட்டப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றார்.இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் கீழே---
இன்று எமக்கான தீர்வினை பெற்றுத்தரவேண்டிய அரசியல்வாதிகள் எமக்கான மிரட்டல்வாதிகளாக பரிணமித்துள்ளமை அவர்களது அரசியல் வங்குறோத்து நிலையினை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. எமது போராட்டம் சார்ந்து என்னால் பதிவேற்றப்படுகின்ற விமர்சனரீதியான பதிவுகளை தாங்கிக்கொள்ள முடியாத அரசியல்வாதிகளும் #அவர்களது_அள்ளக்கைகளும் தொடர்ந்து எனக்கான மிரட்டல்களை விடுகின்றமை அவர்களது இயலாமையையாகவே உணர்கின்றேன். "நான் இப் போராட்ட களத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தால்" அவர்களால் எனக்கு நடப்பது வேறு எனவும்
"நான் தனியாக போராட்டக்களத்தினை விட்டு வெளியில் வரும்போது தாக்குவது" எனவும்
"ஒருவர் அன்றி பலபேர் சேர்ந்து என்னை தாக்கினால் ஒருவரும் கேட்கமாட்டார்கள்" எனவும்
பல்வேறு மிரட்டல்களை விடுகின்றனர். மிரட்டல்கள் விடுக்கும் #பச்சோந்திகளிடம்
பப்ளிக்கா ஒன்றை வினவுகின்றேன், எனது இடுகைகளை வாசித்து எனக்கான மிரட்டல்விடுவதற்கு நீங்கள் காட்டும் அக்கறையில் 10% ஆவது எங்களது போரட்டத்தில் அக்கறை செலுத்த தவறுவது ஏன்??? ஒன்றுமட்டும் நான் உணர்கின்றேன் நீங்கள் என்மீது விடும் மிரட்டல்கள் ஒவ்வொன்றும் எங்களது போராட்டத்தின் வளர்ச்சியே அன்றி பின்னடைவு அல்ல. நான் பொதுவாக ஒன்றை தெரிவிக்கின்றேன் எனக்கு ஏதாவது பாதிப்பு நிகழ்ந்தால் அதற்கு அரசியல் அள்ளக்கைகளே பொறுப்பு.........
0 commentaires :
Post a Comment