வெருகல் படுகொலை- பதின் மூன்று ஆண்டுகள்
(முன்னாள் மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவ-சந்திரகாந்தன் தடுப்புக்காவலில் இருந்து வெருகல் படுகொலை தினத்துக்காக அனுப்பியிருந்த சிறப்புரை, இன்று 10/04/2017 அன்று நிகழ்வில் ஆற்றப்பட்டு பிரசுர வடிவில் விநியோகிக்கப்பட்டது )
என்றும் என் அன்புக்கும் கருணைக்குமுரிய வீரத்தாய்மார்களே! தந்தையர்களே! எனது உடன்பிறப்புகளாகிய சகோதரர்களே! சகோதரிகளே! இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களே! பொறுப்பாளர்களே!போராளிகளே! மற்றும் எமது கட்சியின் உறுப்பினர்களே! தொண்டர்களே! ஆதரவாளர்களே! உங்களனைவருக்கும் எனது வணக்கங்கள்.
ஐந்து யாழ்ப்பாணக்கட்சிகளின் தலைவர்களும் ஒருமித்து வந்து இங்கே முகாமிட்டு எமக்கெதிராக பிரச்சாரம் செய்தார்கள். ஓட்டுக்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம், படித்தவர்களை தெரிவு செய்யுங்கள் என்று அவர்கள் செய்த பிரச்சாரத்தில் மீண்டுமொரு முறை ஏமாந்தான் மட்டக்களப்பான். ஆனால் இன்று அவர்களெல்லாம் எங்கே?
(முன்னாள் மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவருமான சிவ-சந்திரகாந்தன் தடுப்புக்காவலில் இருந்து வெருகல் படுகொலை தினத்துக்காக அனுப்பியிருந்த சிறப்புரை, இன்று 10/04/2017 அன்று நிகழ்வில் ஆற்றப்பட்டு பிரசுர வடிவில் விநியோகிக்கப்பட்டது )
என்றும் என் அன்புக்கும் கருணைக்குமுரிய வீரத்தாய்மார்களே! தந்தையர்களே! எனது உடன்பிறப்புகளாகிய சகோதரர்களே! சகோதரிகளே! இந்நிகழ்வினை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்களே! பொறுப்பாளர்களே!போராளிகளே! மற்றும் எமது கட்சியின் உறுப்பினர்களே! தொண்டர்களே! ஆதரவாளர்களே! உங்களனைவருக்கும் எனது வணக்கங்கள்.
தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றில் இரத்தக்கறை படிந்த தினமான சிவப்பு சித்திரை பத்தாம் நாளாகிய இன்று இந்த வெருகல் மலைப் பூங்காவில் நீங்கள் எல்லோரும் கூடியிருக்கின்றீர்கள். கடந்த ஆண்டை போலவே இம்முறையும் இந்த நிகழ்வுக்கு சமூகமளிக்க எனக்கு காலம் இடம்தரவில்லை.
எனது அரசியல் செயல்பாடுகளை முடக்கிவிடும் நோக்கத்தோடு என்னை சிறைப்படுத்தி வைத்திருக்கின்றனர் நீங்கள் அறிவீர்கள். ஆனால் இது சாதாரண பிள்ளையான் ஒருவனுக்கெதிரான சதியல்ல என்பதை நீங்கள் அனைவரும் நன்கே புரிந்து கொள்ளவேண்டும். வரலாற்றிலே முதல்தடவையாக கிழக்கிலே உருவாகிய அரசியல் எழிச்சியை அழித்தொழிக்கின்ற பாரிய சதியொன்று எனது கைதின் பின்னணியில் இருக்கின்றது.
காலத்துக்கு காலம் இந்த மண்ணிலே உருவாக விளைகின்ற, இந்த கிழக்கு மண்ணை வளப்படுத்த முனைகின்ற தலைமைகளை திட்டமிட்டு அழித்தொழிக்கின்ற நடவடிக்கைகள் யாழ் மேலாதிக்க வாதிகளால் அரங்கேற்றப்பட்டே வந்திருக்கின்றன. இந்த மண்ணின் மைந்தர்களான பெருந்தலைவர் நல்லையாவையும், சொல்லின் செல்வர் இராஜதுரையையும் திருமலை தந்த தலைவன் தங்கத்துரையையும் துரோகிகளாக்கியதன் மூலம் இந்த மண்ணை வெறுமையாக்க முனைந்தவர்கள் யார் என்பதை கடந்தகால வரலாறு சொல்லி நிற்கின்றது. இது எமக்கு புதியதல்ல. அந்த யாழ்-மேலாதிக்க வரலாற்றின் தொடர்ச்சியே என்மீதான இந்த பழிவாங்கும் படலமும் ஆகும். அதுவே என்னை சிறைப்படுத்துவதன் மூலம் இன்று அரங்கேறுகின்றது என்பதை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
என்னை சிறைப்படுத்துவதன் மூலம் கிழக்கின் அரசியல் அடையாளமான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியை அழிக்கும் பாரிய சதி ஒன்று பின்னப்பட்டிருக்கின்றது. நாளை இந்த வரலாறும் எழுதப்படத்தான் போகின்றது. ஆனால் அது பிள்ளையானை "ஒடுக்க முனைந்தார்கள்" என்று மட்டும் எழுதப்படுமேயன்றி "பிள்ளையானை ஒடுக்க முடிந்தது" என்று எழுதப்படபோவதில்லை என்பதை நான் ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
என்னை ஒடுக்குவதன் மூலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகளை யாரும் அழித்துவிட முடியாது. காரணம் இது நான் தலைவனாகுவதற்காக உருவாக்கப்பட்ட கட்சியல்ல. அரசியலும் சட்டமும் படித்து விட்டு அதிகாரமும் பதவியும் வீடு தேடி வரும் என்று கட்சியில் சேர்ந்தவர்கள் நாங்களுமல்ல. விடுதலை வேட்கையிலும் வெந்த தணலிலும் இருந்து வீறு கொண்டெழுந்த கட்சி இதுவாகும்.
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் உருவாக்கம் என்பது காலம் இட்ட கட்டளையாகும். காற்றிலும் மழையிலும் கரைந்து போவதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் வெறும் உப்புக் கற்களல்ல என்பதை என்னை சிறைப்படுத்தியவர்களுக்கு எடுத்து சொல்ல விரும்புகின்றேன். இக்கட்சியின் போராளிகள் ஒவ்வொருவரும் பட்டை தீட்டப்பட்ட வைரங்கள் ஆகும். அதனால்தான் என்னை சிறைப்படுத்த முனைந்தவர்களுக்கு எமது கட்சியின் செயல்பாடுகளை முடக்க முடியாது போய் விட்டது . நானில்லாத வேளையிலும் வெருகல் படுகொலை தினம்,மே தினம், மகளீர் தினம் எதுவாக இருப்பினும் எமது கட்சியின் செயல்பாடுகள் இந்த மண்ணில் எமது இருப்பினை பறை சாற்றிக்கொண்டே இருக்கின்றது.
இதற்காக எமது கட்சியின் கண்மணிகள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள் ஆகும். கட்சி மீது நீங்கள் கொண்டுள்ள விசுவாசத்துக்கும் அதற்காக நீங்கள் கொடுத்துவரும் விலைகளுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
இந்த மண்ணுக்காக போராடிய இந்த மண்ணின் மைந்தர்களுக்கு இந்த மண்ணிலே நடந்தேறிய அந்த கொடூரத்தின் பெயரால் நாமனைவரும் ஆண்டுதோறும் இந்த நினைவினை மீட்டுப்பார்க்கின்றோம். அதேபோல இந்த பதின் மூன்றாவது ஆண்டிலும் இந்த மண்ணிலே கொன்று வீசப்பட்ட எமது சக போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம். ஆம் இன்றோடு வெருகல் படுகொலை நடந்து முடிந்து பதின் மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன.
எமது இலங்கை திருநாட்டில் நடந்தேறிய அனைத்து படுகொலைகளையும் போல இந்த வெருகல் படுகொலையும் எம்நெஞ்சங்களைவிட்டு இலகுவில் அகன்று விட முடியாத ஓன்றாகும். ஆனால் அனைத்து படுகொலைகளும் ஏதோ ஒரு விதத்தில் நியாயம் கேட்கவும் நீதி கேட்கவுமாக ஆண்டு தோறும் ஊடகங்கங்களால் நினைவு கூரப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த வெருகல் படுகொலையின் நினைவை மட்டும் அனைவரும் மறுதலிப்பது ஏன்?அதனை அடக்கி வாசிக்கமுயல்வது ஏன்? இந்த நாட்டிலே எல்லா படுகொலைகளினதும் நினைவாக வீடியோக்களும் விளம்பரங்களும் ஆவணபடங்களும் ஆய்வுக்கட்டுரைகளும்கூட ஆண்டுதோறும் வெளியிடப்படுகின்றனவே?
ஆனால் இந்த வெருகல் படுகொலையில் அகோரம் மட்டும் இன்றுவரை தமிழ் ஊடகங்களால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருவதன் காரணமென்ன? தமிழனை தமிழனே கொன்று குவித்தான் என்பதாலா? யாருடனோ போராட புறப்பட்ட இயக்கம் தன் சொந்த போராளிகளையே கொன்று வீசிய கொடுமையை மறைப்பதற்காகவா? ஒரே இயக்கத்துக்குள்ளேயே சக பெண் போராளிகளை மானபங்கம் செய்த கொடுமை உலகில் வேறெங்கும் இடம்பெறவில்லை என்கின்ற அவமானம் வெளியுலகுக்கு தெரிய கூடாதென்பதாலா ?
இவற்றையெல்லாம் தட்டிக்கேட்டமையால் நாம் துரோகிகள் ஆக்கப்பட்டோம். தமிழன் தமிழன் என்று நாம் யாழ்மேலாதிக்கத்தின் கீழ் பட்டழிந்தது போதும் என்றுதான் எமக்கான மாகாண சபையை உருவாக்கினோம். எம்மால் முடிந்த கடமைகளை எமது மக்களுக்காக செய்தோம். அதையும் துரோகமென்கிறார்கள்.
2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபையை இந்த மண்ணின் மைந்தர்களான எம்மிடமிருந்து பறித்தெடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மேடைகளில் முழங்கினார்கள். தனக்கு மூக்கு போனாலும் பரவாயில்லை எதிரிக்கு சகுனப்பிழையாக இருக்க வேண்டும் என்கின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த பழிவாங்கும் உணர்வு இன்று கிழக்கு தமிழர்களை அரசியல் அனாதைகளாக்கியிருக்கிறது.
ஐந்து யாழ்ப்பாணக்கட்சிகளின் தலைவர்களும் ஒருமித்து வந்து இங்கே முகாமிட்டு எமக்கெதிராக பிரச்சாரம் செய்தார்கள். ஓட்டுக்கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம், படித்தவர்களை தெரிவு செய்யுங்கள் என்று அவர்கள் செய்த பிரச்சாரத்தில் மீண்டுமொரு முறை ஏமாந்தான் மட்டக்களப்பான். ஆனால் இன்று அவர்களெல்லாம் எங்கே?
"எங்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை, உரிமைகளே தேவை என்று இந்த மண்ணிலே முழங்கினார்களே" இன்று "படித்தவர்கள்"கல்வியமைச்சராகவும் விவசாய அமைச்சராகவும் இருக்கின்றார்களே! கிழக்கில் என்ன பாலும் தேனுமா பாய்ந்து ஓடுகின்றது? பாவம் எமது மக்களே! இன்று அபிவிருத்தியுமில்லை, உரிமையுமில்லை. இதைத்தான் பொல்லுக் கொடுத்து அடி வாங்குவதென்பது. பொல்லை கபீர் நசீரிடம் கொடுத்து விட்டு சம்பந்தன் வாளாதிருக்கின்றார். அடிவாங்குவதோ எமது மக்கள்.
அதே போன்றுதான் பாராளுமன்ற தேர்தலிலும் நல்லாட்சியை கொண்டுவருவோம் என்கிறார்கள். எமது மக்களும் அதனை நம்பி வாக்களித்தார்கள்.
*இப்போது நான் கேட்கின்றேன், எது நல்லாட்சி?
*யாருக்கு நல்லாட்சி நடக்கின்றது?
*விலைவாசி கூடிக்கொண்டே செல்கிறது, சாமானியர்கள் பட்டினியில் வாடுகின்றார்கள்.
*இந்நாட்டிலுள்ள விவசாயிகளுக்கான மானியங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
எமது கையை விட்டு 2012ஆம் ஆண்டு மாகாணசபை பறிக்கப்பட்ட பின்னர் 2013, 2014, 2015 ஆம் ஆண்டுகளில் நெல் உற்பத்தி 1,20,000 மெற்றிக் தொன் ஆக குறைந்துள்ளது. பால் உற்பத்தியும் அப்படியே கீழ் நோக்கி செல்கின்றது.
.
* கபீர்நசீர்-சம்பந்தன் கூட்டு அரங்கேற்றியுள்ள மாகாணசபையிடம் விவசாயம் குறித்து என்ன திட்டமிடல் இன்றுள்ளது? இது குறித்து ஏன் எமது இளைஞர்கள், கல்விமான்கள் சிந்திப்பதில்லை?
*நாட்டிலே கல்வி சுகாதாரம் என்று சகல துறைகளும் தனியார் துறைக்கு தரை வார்க்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகின்றன.
*எங்குபார்த்தாலும் வேலையில்லா திண்டாட்டம், பட்டதாரிகள் நாற்பது நாட்களாக வேலைக்கேட்டு மட்டக்களப்பு காந்தி சிலையின் கீழே காய்ந்துபோய் கிடக்கின்றார்கள்.
*ஆனால் கல்குடாவிலே மதுபான உற்பத்தி தொழில்சாலை உருவாக்கப்படுகின்றது. இதுவா நல்லாட்சி?
*எனது ஆட்சிக்காலத்திலே நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகளை தரமுயர்த்தினேன்,
*இரண்டு புதிய கல்வி வலையங்களை உருவாக்கினேன்.
*எத்தனையோ பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களும் ஆய்வுகூட வசதிகளும் செய்து கொடுத்தேன்.
*பலநூறு வீதிகளை புனரமைத்தேன்.
*எத்தனையோ கிராமங்களுக்கு மின் வசதிகளை ஏற்படுத்தினேன்.
*கலாசார மண்டபங்களையும்,நூல் நிலையங்களையும் கட்டினேன்.
*சுமார் ஆயிரம் வரையான வேலைவாய்ப்புக்களை வழங்கினேன்.
*நகரங்களை அபிவிருத்தி செய்து அழகு படுத்தினேன்.
*ஆழ்கடல் படகுகளையும் தோணி வலைகளையும் மீனவர்களுக்கு பெற்று கொடுத்தேன்.
*வீதிகளையும் பாலங்களையும் மாகாணமெங்கும் கட்டினேன்.
*பல்வேறு குளங்களையும் நீர்த்தேக்கங்களையும் புனரமைத்தேன்.
இன்று என்ன நடக்கின்றது? மாகாண சபையிலும் மத்திய அரசாங்கத்திலும் மானமிழந்த கூட்டு வைத்திருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே உங்களிடம் ஒன்று கேட்கின்றேன்.
இந்த பிள்ளையானை பிடித்து அடைத்துவிட்ட "கேவலமான சாதனை" ஒன்றை தவிர, நான்கு வருட மாகாண சபை ஆட்சியிலும் இரண்டு வருட நல்லாட்சியிலும் நீங்கள் புரிந்த ஏதாவது சாதனை ஒன்றிருந்தால் சொல்லுங்கள், முடிந்தால் அதை உரத்து சொல்லுங்கள்.சிறையிலுள்ள என் காதுகள் குளிரட்டும்.
என்னை கைது செய்த பின்னர் கடந்த வருடம் இந்த வெருகல் படுகொலை தினமும் இடம்பெற்ற போது அது பற்றி செய்தியெழுதிய சர்வதேச தமிழ் தேசிய ஊடகம் ஒன்று இந்த படுகொலையின் கோரங்களை பற்றிய கவலைகளற்று "பிள்ளையான் இல்லாமல் இடம்பெற்ற வெருகல் படுகொலை தினம்" என்று பொடி வைத்து எழுதியது. ஏன் பிள்ளையான் இல்லாவிட்டால் யாழ்- மேலாதிக்கவாதிகளின் கொடுமைகளை இந்த மண் மறந்து விடும் என்கின்ற நப்பாசையா?
அதுமட்டும் நடக்காது என்பேன். இந்த பிள்ளையான் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, இந்த மண் உள்ளவரை, அதில் எமது மைந்தர்கள் வாழும் வரை, இந்த வெருகல் மலைப் பூங்காவில் காற்று வீசும் வரை, நாயும் நரியும் தின்ற எம் போராளியின் உடலங்கள் காய்ந்து கிடந்த கதிரவெளியிலே கடலலைகள் பாய்ந்து கொண்டிருக்கும் வரை இந்த வெருகல் படுகொலை தினம் என்றென்றும் நினைவு கூரப்பட்டுக் கொண்டேயிருக்கும். தமிழ் மக்கள் விடுதலை புலிகள் இந்த கிழக்கு மண்ணெங்கும் வியாபித்துக்கொண்டேயிருப்பார்கள் என்பதை வெருகல் படுகொலையில் உயிரிழந்த இந்த மாவீரர்கள் நினைவாக இந்த உலகுக்கு அறுதியிட்டு சொல்லுகின்றேன்.
நன்றிகள்
சிவ.சந்திரகாந்தன்
(முன்னாள் முதலமைச்சர், தலைவர்-தமிழ்மக்கள்விடுதலை
புலிகள், மாகாண சபை உறுப்பினர்)
10/04/2017 - சிறைச்சாலை -மட்டக்களப்பு
0 commentaires :
Post a Comment