கிளிநொச்சி கல்வி வலயப் பணிப்பாளராக திரு. க. முருகவேல் கடமையாற்றிக் கடந்த மாதம் ஓய்வு பெற்றுச் சென்றார். தான் ஓய்வு பெற்றுச் செல்வதற்கு முன்னர், புதிய கல்விப் பணிப்பாளரை நியமியுங்கள். அவரிடம் கடமையைப் பொறுப்புக் கொடுத்துவிட்டுச் செல்ல வசதியாக இருக்கும் என திரு. முருகவேல் தெரிவித்திருந்தார்.
ஆனால், இதை வடக்கு மாகாணசபையின் கல்வி அமைச்சுக் கவனத்தில் எடுக்கவில்லை. இதனால் பொருத்தமான ஒரு கல்விப்பணிப்பாளர் இல்லாத நிலையில் தற்காலிக கல்விப் பணிப்பாளரை வைத்தே நிர்வாகம் நடந்து கொண்டிருக்கிறது. புதிய கல்விப் பணிப்பாளரை நியமிக்க முடியாத நிலையில் வடமாகாணக் கல்வி அமைச்சு உள்ளது.
இதனையடுத்து தற்போது பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் மூலம் கல்விப்பணிப்பாளரை நியமிப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இந்த விண்ணத்தின் அடிப்படையில் பிற மாகாணங்களில் இருந்தே வரக்கூடிய வாய்ப்புகள் தென்படுகின்றன. குறிப்பாக ஒரு சிங்களவரோ, முஸ்லிமோ, மலைய சமூகத்தினரோ வரக்கூடிய வாய்ப்புகளே அதிகமாகத் தெரிகின்றன.
பொதுவாக வலயக் கல்விப் பணிப்பாளர் முதலான நியமனங்கள் முதுமுறைப் பட்டியலுக்கு(seniority list) அமைவாக இடம்பெறுவது வழக்கம். விண்ணப்பம் கோரப்பட்டாலும் நேர்முகப் பரீட்சையிலும் இந்த ஒழுங்கே பின்பற்றப்படும். இப்போது பொதுச்சேவை ஆணைக்குழு விண்ணப்பம் கோரும் போது இலங்கையில் எங்கிருந்தும் யார் விண்ணப்பித்தாலும் சிரேஷ்ட அடிப்படையில் அவரே நியமிக்கப்படுவார். சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தான் ஆண்டி! என்பது இதுதான். ஒரு வலயக் கல்விப் பணிப்பாளரையே நியமிக்க வக்கில்லாத நிலையில் நீடித்த இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காணப்போகிறர்களாம். வடக்குக் கிழக்கை இணைத்துப் பார்க்கப்போகிறார்கள். கூரையேறிக் கோழியைப் பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக எண்ணினானாம்.
- நன்றி முகநூல் Sivarasa Karunagaran
0 commentaires :
Post a Comment