லண்டனில் கக்கூஸ்(90 Minutes)’ஆவணப்படம் திரையிடல்
=============================================================
அண்மைய ஆண்டுகளில் வெளியான இந்திய ஆவணப்படங்களில் மிகவும் முக்கியமான தமிழ் ஆவணப்படமான ‘கக்கூஸ்(90 Minutes)’ ஆங்கிலத் துணைத் தலைப்புகளுடன் எதிர்வரும் 29.04.2017 சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு லண்டனில் திரையிடப்படுகிறது.
-----------------------------------
மனிதர்களை மலக்கிடங்கில் இறக்கி சுத்தம் செய்ய வைப்பது சட்ட விரோதமாக்கப்பட்டிருக்கும் சூழலில் தொடர்ந்து தமிழகத்தில் மலக்கிடங்கு மரணங்கள் அதிகரித்து வருகின்றன. மலசலக் கூடங்களைச் சுத்தம் செய்கிற மனிதர்களை சாதியத்தின் பெயரால் ஒதுக்கும் இந்துத்துவ சமூகத்தில் மலம் அள்ளுவதை புனிதப்படுத்தி அத்தொழிலைச் சாசுவதமாக்கமும் இந்துத்துவ அரசு முனைந்து வருகிறது. இச்சூழலில் தமிழகமெங்கும் மலக் கிடங்கு சுத்தம் செய்யும்போது மரணமுற்ற மனிதர்களின் அன்றாட வாழ்வின் குரூரங்களையும் அவர்தம் குடும்பங்களின் நிராதரவான அந்தகார வாழ்வையும் தமிழகம் முழுதும் பயணம் செய்து ஆவணப்படுத்தியிருக்கிறார் ஆவணப்பட இயக்குனர் திவ்யாபாரதி. தமிழகத்தின் பல மாவட்டத் தலைநகர்களில் திரையிட அனுமதி மறுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் ஐரோப்பிய நாடுகளில் முதன் முறையாக 'விம்பம்' கலை, இலக்கிய , திரைப்பட அமைப்பின் சார்பில் லண்டனில் திரையிடப்படுகிறது
---------------------------------
ஆவணப்பட அறிமுகம் : தோழர். நடேசன்
கலந்துரையாடல் நெறியாள்கை : தோழர்.வேலு
----------------------------------
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
‘VIMBAM’
An organisation for the promotion of Arts, Literature and Film Culture

0 commentaires :
Post a Comment