4/15/2017

கொழும்பு அருகே குப்பை மேடு சரிந்தது: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

இலங்கையில் தலைநகர் கொழும்புக்கு வெளியே குப்பைமேடு சரிந்து விழுந்த விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மாலை மீதொட்டுமூல்ல குப்பைமேடு சரிந்த விழுந்த இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சரிந்த குப்பை மேட்டுக்குள் வீடுகள்
தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் நடந்த இந்த எதிர்பாராத விபத்து கொலன்னாவ பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. அவற்றில் 50 குடியிருப்புகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக வெல்லம்பிட்டிய காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 commentaires :

Post a Comment