3/12/2017

கருணாவின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைக் காரியாலயம் திறந்துவைப்பு (படங்கள்)

முன்னாள் மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தலைமையிலான தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி அரசியல் கட்சிக்குரிய தலைமை அலுவலகம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.


குறித்த அலுவலகம் கல்லடியில் இன்று (11) கட்சியின் தலைவரினால் உத்தியோக பூர்வமாக திறந்துவைக்கப்பட்டது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அடுத்த அலுவலகம் வடக்கில் மாங்குளத்தில் திறக்கப்படவுள்ளதுடன், கொழும்பிலும் திறக்கப்படவுள்ளதகவும் மேலும்தெரிவித்துள்ளார்.

0 commentaires :

Post a Comment