மட்டக்களப்பு கல்குடா பகுதியில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுவரும் மது உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்திசேகரிக்கச்சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தினை கண்டித்து இன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் கண்டன போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஊடகவியலாளர்கள் தமது செயற்பாடுகளை சுதந்திரமாக செயற்படுத்தும் நிலைமை உருவாக்கப்படவேண்டும் என்பதை இதன்போது வலியுறுத்தப்படவுள்ளதாகவும் தாக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் வலியுறுத்தி இந்த கண்டன போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்ட விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் மதுபான உற்பத்தி தொழிற்சாலைகளின் நிர்மாண வேலைகளை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதுடன் மட்டக்களப்ப மாவட்டத்தில் மதுபானசாலைகளை குறைக்க நடவடிக்கையெடுக்குமாறும் வலியுறுத்தி மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இந் கண்டக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றது.

0 commentaires :
Post a Comment