ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர் மட்ட தலைவர்களில் ஒருவரான பஷீர் சேகு தாவூத் கட்சியின் சேர்மன் (தவிசாளர்) பதவியிலிருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
இருப்பினும் அவர் கட்சியின் உறுப்பினராக தொடர்ந்து இருப்பார்; பல வருடங்களாக தவிசாளர் பதவி வகித்து வந்த பஷீர் சேகு தாவுத்திற்கும் கட்சி தலைமைப் பீடத்திற்குமிடையில் முரண்பாடுகள் நிலவி வந்தன.
ஊடகங்களில் கட்சி தலைமயையை அண்மைக்காலமாக கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் நேற்று சனிக் கிழமை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் கூடிய கட்சி உயர் பீடம் இந்த முடிவை எடுத்துள்ளது.
இந்த தீர்மானம் கட்சி உயர் மட்ட குழுவில் ஓருமித்த முடிவாக எடுக்கப்பட்டதாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது.
கட்சியை பிளவு படுத்தும் நோக்கில் செயல்பட்டு வந்ததாக இவர் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டு ஒழுக்காற்று விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 commentaires :
Post a Comment