2/28/2017

திரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம். த.ம.வி.பு கட்சி

திரவியம் மீது திட்டமிட்டு; மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.Résultat de recherche d'images pour "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்"
 
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய நாகலிங்கம் திரவியம் மீது ஓட்டமாவடி நாவலடிச் சந்தியில் வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் வேண்டுகோள் விடுத்துள்ளது
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமாகிய நாகலிங்கம் திரவியம் (ஜெயம்) நாவலடி சந்தியில் வைத்து தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 மேலும் அவ்வறிக்கையில் வாழைச்சேனையிலிருந்து வாகரை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியத்தின் வாகனத்தில் நாவலடிச் சந்திக்கு அருகில் ஏற்பட்ட சிறிய வீதி விபத்தினை அடுத்து திட்டமிட்ட முறையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பிரதித் தலைவர்இகிழக்கு மாகாண சபை மக்கள் பிரதிநிதி என்று நன்கு தெரிந்திருந்த போதும்  பொல்லுஇ தடி உள்ளிட்ட ஆயுதங்களால் சிலர் மேற்கொண்ட தாக்குதலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
மக்கள் பிரதிநிதி மீதான இத்தாக்குதலானது அரசியல் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக தமிழ் அரசியல் தலைமைகளையும் மௌனிகளாகுவதற்கான திட்டமிட்ட தாக்குதலாக இருக்குமோ என ஐயங்கொள்ளத் தோன்றுகிறது.
 சட்டத்தினை யாரும் கையில் எடுத்துக் கொள்வதனை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆங்காங்கே ஏற்பட்டுவரும் சில திட்டமிட்ட குழுக்களின் விசமத்தனமான சட்டத்திற்கு முரணான செயற்பாடுகள் பூதாகரமாக இனவிரிசலை ஏற்படுத்துவதற்கு சமுகஇசமயத் தலைவர்களும் சமாதான விரும்பிகளும் இடங்கொடுக்கக் கூடாது. குறித்த திட்டமிட்ட தாக்குதல் தொடர்பாக  பொலிசார் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தி குற்றவாளிகளை சமுகத்தின் முன் அடையாளப்படுத்துவதுடன் சட்டப்படியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

2 commentaires :

sugeetha love.com said...

இப்படி இனையத்துல வன்மையாக கன்டிதாலும் சரி சாதாரனமா கன்டித்தாலும் சரி ஒன்னும் புடுங்க போரது இல்ல. அவனே கோழத்தனமா அடி வாங்கித்து வந்து படுக்கான் நிங்க இனையத்துல என்னத்தடா புடுங்க போரிங்க அவன் உன்னமயான வீரமுல்ல தமிழனா இருந்தா அந்த இடத்துலயே வீரத்த காட்டி இருக்கனும்டா சும்மா போங்கடா மானமே போச்சு இதுல நீங்க வேர கடுப்பேத்திட்டு.

sugeetha love.com said...

இப்படி இனையத்துல வன்மையாக கன்டிதாலும் சரி சாதாரனமா கன்டித்தாலும் சரி ஒன்னும் புடுங்க போரது இல்ல. அவனே கோழத்தனமா அடி வாங்கித்து வந்து படுக்கான் நிங்க இனையத்துல என்னத்தடா புடுங்க போரிங்க அவன் உன்னமயான வீரமுல்ல தமிழனா இருந்தா அந்த இடத்துலயே வீரத்த காட்டி இருக்கனும்டா சும்மா போங்கடா மானமே போச்சு இதுல நீங்க வேர கடுப்பேத்திட்டு.

Post a Comment