இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று புதன்கிழமை இரவு சிவில் அதிகாரியொருவர் அடையாளம் தெரியாத ஆட்களினால் சுடப்பட்டுள்ளார்.
காணி மறுசீரமைப்பு ஆணையகத்தின் மாவட்ட இயக்குநரான என். விமல்ராஜ், சுடப்பட்டு காயமடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுதாவளையிலுள்ள அவரது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரு நபர்கள், பேச வேண்டும் என கூறி அழைத்து துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு அதிகாரியொருவர் சுடப்பட்ட இந்த சம்பவமானது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரனைகளை முன்னெடுக்கும் போலீஸ் தரப்பு தகவல்களின் படி துப்பாக்கிதாரிகளோ அல்லது அதற்கான பின்னனியோ இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

1 commentaires :
இன் நிகழ்வு ஒரு சிங்கள சகோதரனுக்கு நடந்திருந்தால் நடவடிக்ககளின்தன்மை நிட்சயமாய் மாறுபட்டிருந்திருக்கும்.
Post a Comment