2/22/2017

அரசு துறைகளில் வேலை கோரி மட்டக்களப்பில் பட்டதாரிகள் போராட்டம்

மட்டக்களப்புமட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் அரசு துறைகளில் வேலைவாய்ப்பு உட்பட சில கோரிக்கைகளை முன் வைத்து மட்டக்களப்பு நகரில் காந்தி சதுக்க முன்றலில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்த காலவரையற்ற சத்தியாக்கிரக போராட்டம் இன்று புதன்கிழமை இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பாகங்களிலிருந்தும் பெண்கள் உட்பட ஏராளமான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டு தங்களுடைய கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் குரல் எழுப்புகின்றனர்.
கிழக்கு மாகாணத்தில் சுமார் 5500 பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக வேலையற்ற பட்டதாரிகள் சார்ந்த அமைப்புகள் கூறுகின்றன..
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள தகவலில் அம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 வேலையற்ற பட்டதாரிகள் இருப்பதாக அறியமுடிகின்றது.

0 commentaires :

Post a Comment