
இந்த போட்டியில் நாகலாந்து அரசியல் வாதிகள் தமிழ் நாட்டு பாணியில் உறுப்பினர்களை சிறை வைப்பில் மடக்கினர். எம்.எல்.ஏ.,க்கள், அசாம் மாநிலம் காஜிரங்காவில் உள்ள ஒரு ஆடம்பர விடுதி யில் நேற்று முன்தினம் சிறை வைக்கப்பட்டனர். சட்டசபையில், மொத்தம் உள்ள, 60 இடங்களில், 48 எம்.எல்.ஏ.,க்களை உடைய நாகாலாந்து மக்கள் முன்னணி, நான்கு எம்.எல்.ஏ.,க்கள் உள்ள பா.ஜ., மற்றும் எட்டு சுயேச்சைகள், ஒரே கூட்டணியில் உள்ளன.
8 முறை எம்.எல்.ஏ., : இந்நிலையில், ஷுர்ஹோசிலி லேஜேட்சுவை, ஆளும் கட்சி நேற்று ஒருமனதாக, முதல்வராக தேர்வு செய்தது. இதையடுத்து, அவர் விரைவில் பதவியேற்க உள்ளார்; எட்டு முறை எம்.எல்.ஏ.வாக இருந்த அவர், கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை. எனவே, முதல்வர் பதவி யேற்ற பின், ஆறு மாதங்களுக்குள், ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
0 commentaires :
Post a Comment