ஆசியாவின் நெற்களஞ்சியம் என போற்றப்பட்ட இலங்கை இப்பொது அரிசியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு வந்துள்ளது. கடந்த மகிந்தவின் காலங்களில் வடக்கு கிழக்கில் மட்டும் நூறுக்கும் அதிகமான குளங்கள் திருத்தப்பட்டன.விவசாயிகளுக்கு மானிய விலையில் உரங்கள் வழங்கப்பட்டன.
நல்லாட்சி அரசு மானியங்களை குறைத்து விட்டது.குளங்கள் திருத்தப்படுவதில்லை. நீர்நிலை, இயற்கை வளங்கள் பற்றி கவலையில்லை.
இப்போது வெளிநாடுகளிலில் இருந்து, அரசியை இறக்குமதி செய்யவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொட்டகலை பிரதேச முதலாளிமார்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு கூறினார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில், கொட்டகலை சீ.எல்.எப் தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொட்டகலை பிரதேச வர்த்தகர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.
அரசாங்கத்தினால், அரசியின் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளப் போதிலும் தம்மால் குறித்த விலைக்கு, அரிசியை விற்பனை செய்யமுடியாதுள்ளதாக, வர்த்தகர்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுச் சென்றனர்.
அரிசி உற்பத்தியாளர்களிடமிருந்து, அதிக விலைக் கொடுத்தே அரசியை கொள்வனவு செய்வதாகவும் நிர்ணய விலைக்கு, சில்லறை வியாபாரம் செய்யமுடியாமல் உள்ளதாகவும் வர்த்தகர்கள் இதன்போது தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, பொதுமக்களின் நலன் கருதி, வெளிநாடுகளில் இருந்து அரசியை இறக்குமதி செய்வதுடன், நிர்ணய விலைக்கு அரசியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
0 commentaires :
Post a Comment